பகவத் கீதை உண்மையுருவில் - ஒரு கண்ணோட்டம் அத்தியாயம் -6 வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் தியான யோகம் ஐந்தாம் அத்தியாயத்தின் சுருக்கம் பக்தியுடன் செயலாற்றுவதையும் ஞானத்தில் செயலின்மையையும் ஒரே நேரத்தில் கிருஷ்ணர் வலியுறுத்தியதால், குழம்பிய அர்ஜுனன், அவையிரண்டில் சிறந்தது எது என்று வினவினான். இரண்டுமே முக்திக்கு ஏற்றவை என்றும், பக்தியுடன் செயலாற்றுதல் சிறந்தது என்றும் கிருஷ்ணர் பதிலளித்தார். கர்ம யோகத்தையும் ஸாங்கிய யோகத்தையும் சமநிலையில் காண்பவன் உள்ளதை உள்ளபடி காண்பவன். நற்செயல்களில் ஈடுபடாத புலன்கள் தீச்செயல்களில் ஈடுபடப்போவது உறுதி; எனவே, புலன்களைக் கொண்டு பக்தியில் ஈடுபடுபவன் பரம்பொருளை எளிதில் அடையலாம். பல்வேறு செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் அவன் பந்தப்படுவதில்லை. ஒரு செயல் செய்யப்படுவதற்கு ஜீவன் முதல் காரணமாகவும், ஜட இயற்கை இரண்டாம் காரணமாகவும், பரமாத்மா இறுதி காரணமாகவும் அறியப்படுகின்றது. பரமாத்மாவை உணர்ந்தவன், அனைத்து உயிர்களையும் சமமாகப் பார்க்கின்றான், ஆரம்பமும் முடிவும் கொண்ட புலனின்பத்தில் அவன் நாட்டம் கொள்வதில்லை. தன்னுள் இன்பமாக இருக்கும் அந்த பக்குவமான யோகி, எல்லா பாவத...