Skip to main content

Posts

Showing posts with the label அத்தியாயம் 02

பகவத் கீதை இரண்டாம் அத்தியாயத்தின் மஹிமை

  கீதா மஹாத்மியம் மொழிபெயர்ப்பு :- சுத்த பக்தி குழுவினர் பகவத் கீதை இரண்டாம் அத்தியாயத்தின் மஹிமை 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 பத்ம புராணத்திலிருந்து ஶ்ரீமத் பகவத் கீதையின் பெரும் சிறப்புக்கள் பற்றிய வர்ணனை 18 அத்யாயத்திற்கும் மிக விஷேசமாகவும் தெளிவாகவாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. அதை படித்து பயன்பெறுவோம். பகவத் கீதை இரண்டாம் அத்தியாயத்தின் மஹிமை 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 பகவான் விஷ்ணு, " எனதன்பு லட்சுமியே, இதுவரை ஸ்ரீமத் பகவத் கீதையின் முதல் அத்தியாயம் பற்றிய சிறப்புகளை கேட்டறிந்தாய். இப்பொழுது, நான் பகவத் கீதையின் இரண்டாம் அத்தியாயத்தின் சிறப்புகளை பற்றி வர்ணிக்கப்போகிறேன். இதையும் கவனமாக கேட்பாயாக", என்று கூறினார். தென்னிந்தியாவிலுள்ள பந்தர்பூர் என்னும் ஊரில், தேவாஷ்யாமா என்ற பிராமணர் வாழ்ந்து வந்தார். அவர் அணைத்து விதமான யாகங்களை செய்யக்கூடியவராகவும், தன இல்லத்திற்கு வரும் அனைவரையும் நன்கு உபசரிக்க தெரிந்தவராகவும் இருந்தார். இதனால் அணைத்து தேவர்களையும் திருப்திப்படுத்தவும் செய்தார். ஆனால் தன் மனதளவில் நிம்மதியும் சந்தோஷமும் இல்லாமல் இருந்தார். அவருக்கு தன் ஆத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் இடையே ...