Skip to main content

Posts

Showing posts with the label 04.Four Kumaras / நான்கு குமாரர்கள்(12M)

நான்கு குமாரர்கள்

  நான்கு குமாரர்கள் ( சனகர், சனாதனர், சனந்தனர், மற்றும் சனத்குமாரர் ) வழங்கியவர்கள் :- சுத்தபக்தி குழுவினர் 🍁🍁🍁🍁🍁🍁🍁 முழுமுதற் கடவுளின் ஒரு குறிப்பிட்ட சக்தி ஒரு குறிப்பிட்ட உயிர்வாழிகட்கு அளிக்கப்படும் பொழுது அவர்கள் "ஆவேச அவதாரங்கள்" என்று அழைக்கப்படுகின்றனர்.  நான்கு குமாரர்களும் குறிப்பாக முழுமுதற் கடவுளின் ஞான சக்தியின் பிரதிநிதிகளாவர்.  இவர்கள் பகவானைப் பற்றிய உன்னத அறிவை மிகத் தெளிவாக விளக்கியதால் அனைத்து சாதுக்களும் ஒரே நேரத்தில் இந்த அறிவை எவ்வித சிரமமும் இல்லாமல் கிரகித்துக் கொள்ள முடிந்தது.  நான்கு குமாரர்களின் அடிச்சுவடுகளை பின்பற்றுவதன் மூலம் ஒருவர் தனக்குள்ளேயே முழுமுதற் கடவுளை காண முடியும். படைப்பின் ஆரம்பத்தில் பிரம்மதேவர் அவரது மனதின் சக்தியில் இருந்து நான்கு புதல்வர்களை படைத்தார்.  அவர்கள் நான்கு குமாரர்கள் எனப்பட்டனர்.  பிரபஞ்சத்தில்  பிரஜைகளை பெருக்குவதன் பொருட்டு  பிரம்மதேவர் பிறப்பித்த கட்டளையைக் கேட்டதும் குமாரர்கள் அதற்கு மறுப்புத் தெரிவித்ததுடன் வாழ்நாள் முழுவதும் இல்லறத்தில் ஈடுபடாமல் பிரம்மச்சாரிகளாகவே  இருக்க...