பிரகலாத மகாராஜா வழங்கியவர்கள் - சுத்தபக்தி குழுவினர் 🍁🍁🍁🍁🍁🍁 மிகவும் கடினமான சூழ்நிலைகளுக்கு நடுவில், மிக வலிமையான அசுர சக்திகளுக்கு மத்தியிலும் பகவான் மீதுள்ள பக்தியை பிறழாது கடைப்பிடித்த ஒரு சிறுவனாக பிரகலாதர் என்றென்றும் அனைவரது மனதிலும் நினைவு கூறப்படுவார். இரண்யகசிபுவின் முதல் மகனான பிரகலாதர் தனது தாயின் கர்ப்பத்தில் இருந்த பொழுது தேவர்களின் அரசனான இந்திரன் கயாதுவைக் கைது செய்து அவரது கர்ப்பத்தில் இருந்த பிரகலாதரை ஹிரண்யகஷிபுவின் அடுத்த அசுர குல மன்னனாக வரக்கூடும் என்று எண்ணி அவரைக் கொல்ல முடிவு செய்தான். அந்த சமயத்தில் அங்கு தோன்றிய நாரதமுனிவர் கயாதுவை விடுதலை செய்யும்படி கூறினார். மேலும் அவளது கர்ப்பத்தில் இருப்பது பகவான் கிருஷ்ணரின் மாபெரும் பக்தர் என்றும் கூறினார். பின் நாரதமுனிவர் கயாதுவை தனது ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்று பக்தி சேவையைக் குறித்து போதித்தார். இவ்வாறாக அவளின் கர்ப்பத்தில் கருவாக இருந்த பிரகலாதர் , நாரதமுனிவர் போதித்த அனைத்து விஷயங்களையும் (கிருஷ்ணரைப் பற்றிய பூரண ஞானத்தை) மிகக் கவனமாக உள்வாங்கி படிப்படியாக பகவானின் தூய பக்தராக உருவானார். பிரகலாதர் தை...