பகவத் கீதை உண்மையுருவில் - ஒரு கண்ணோட்டம் அத்தியாயம் -14 ஜட இயற்கையின் முக்குணங்கள் வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் பதிமூன்றாம் அத்தியாயத்தின் சுருக்கம் க்ஷேத்ர, க்ஷேத்ரக்ஞ, க்ஞானம், க்ஞேயம், புருஷ, பிரக்ருதி ஆகிய ஆறு விஷயங்களை விளக்கும்படி பகவான் கிருஷ்ணரிடம் அர்ஜுனன் வினவ, அவற்றை கிருஷ்ணர் பதிமூன்றாம் அத்தியாயத்தில் விளக்கினார். உடலே க்ஷேத்ரம் (களம்) என்றும், உடலை அறிபவர்களான ஆத்மாவும் பரமாத்மாவும், க்ஷேத்ரக்ஞ (களத்தை அறிபவர்கள்) என்றும் கிருஷ்ணர் கூறினார். அடக்கம், கர்வமின்மை, பொறுமை போன்றவற்றை ஞானம் என்றும், அந்த ஞானத்தினால் அறியப்படும் பரமாத்மாவே க்ஞேயம் என்றும் எடுத்துரைத்தார். முக்குணங் களைக் கொண்ட ஜட இயற்கை பிரக்ருதி என்றும், அதை அனுபவிக்கும் ஜீவனும் பரமாத்மாவும் புருஷர்கள் என்றும் மேலும் விளக்கப்பட்டது. 13ஆம் அத்தியாயத்திற்கும் 14ஆம் அத்தியாயத்திற்கும் உள்ள தொடர்பு ஜீவன் தனது களத்தின் செயல் களால் பந்தப்படுவதை கிருஷ்ணர் பதிமூன்றாம் அத்தியாயத்தில் (13.22) சுருக்கமாகக் கூறினார். அந்த பந்தத்தின் தன்மையையும் ஜட இயற்கையின் குணங்களால் அவன் எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகிறான் என்பதையும் ப...