Skip to main content

Posts

Showing posts with the label 04.Prayers by Bhisma. / பீஷ்மதேவர் பிரார்த்தனை

பீஷ்மதேவர் பிரார்த்தனை

  ஸ்ரீமத் - பாகவதம் காண்டம் 1 / அத்தியாயம் 9 / பதம் 32- 42   ************************************************************************* பதம் 32 ஸ்ரீ பீஷ்ம உவாச இதி மதிர் உபகல்பிதா வித்ருஷ்ணா பகவதி ஸாத்வத - புங்கவே விபூம்னி ஸ்வ ஸுகம் உபகதே க்வசித் விஹர் தும் ப்ரக்ருதிம் உபேயுஷி யத் - பவ - ப்ரவாஹ : மொழிபெயர்ப்பு பீஷ்மதேவர் கூறினார் : இதுவரை வெவ்வேறு விஷயங்களிலும் , கடமைகளிலும் ஈடுபட்டிருந்த எனது சிந்தனை , உணர்வு மற்றும் விருப்பம் ஆகியவற்றை இப்பொழுது நான் சர்வசக்தி படைத்தவரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரில் ஈடுபடுத்துவேனாக . அவர் எப்பொழுதும் சுய திருப்தியுடையவராவார் . ஆனால் அவரிடமிருந்து தான் ஜடவுலகம் படைக்கப்படுகிறது என்றாலும் , அவர் பக்தர்களின் தலைவராக இருப்பதால் , ஜடவுலகில் அவதரித்து தெய்வீக இன்பத்தை அவர் அனுபவிக்கிறார் . பதம் 33 த்ரி - புவன - கமனம் தமால - வர்ணம் ரவி - கர - கௌர - வர - அம்பரம் ததானே வபுர் அலக குலாவ்ருதானனாப்ஜம் விஜய - ஸகே ரதிர் அஸ்து மே ’ னவத்யா மொழிபெயர்ப்பு ஸ்ரீ கிருஷ்ணர் ...