யமுனாசாரியர் (ஆளவந்தான் ) 🔆🔆🔆🔆🔆🔆🔆 வைஷ்ணவ ஆசாரியராகிய யமுனாசாரியர் நாதமுனிகளின் பேரனாக ஈசுவரமுனிக்கு மகனாக வீரநாராயணபுரத்தில் (தற்போதைய காட்டுமன்னார்கோயிலில்) கிபி.912 ஆம் ஆண்டு (கிபி918 என்றும் கிபி976 என்றும் சொல்லப்படுகிறது) பிறந்தார். மணக்கால் நம்பிக்குப் பிறகு ஆசாரிய பட்டம் பெற்றவர் ஆளவந்தார். இவர் இராமானுசரின் முதன்மை குருவும்மாவார். அவரது வாழ்வில் சில பகுதிகள் இங்கே காணலாம். ஆளவந்தான் 🔆🔆🔆🔆🔆🔆🔆 பாஷ்யாசாரியரிடம் யமுனா (யமுனாசார்யர் ) பால கல்வி பயின்று வந்த காலத்தே பாஷ்யாசாரியர்கு அரசவையிலிருந்து ஒர் ஓலை வந்தது. அதில் பாஷ்யாசாரியர் ஆக்கியாழ்வானை வாதில்வெல்ல வேண்டும் இல்லையேல் தோல்வியை ஒப்புக்கொண்டு கப்பம் கட்டவேண்டும் என எழுதப்பட்டிருந்தது. ஆக்கியாழ்வான் முன்னமே பலமுறை இவ்வாறு பலரை வென்று தனக்கு அடிமையென எழுதி வாங்கிக்கொண்டு அவர்களிடம் கப்பம் பெறுவதை வழக்கமாக்கிக்கொண்டிருந்தான். அவ்வண்ணமே வந்தே இக்கடிதத்தை கண்ணுற்று வருத்தம் கொண்ட பாஷ்யாசாரியர் வருத்தம் தீரும் வண்ணம், யமுனாசார்யர் தான் தன் குருவுக்கு பதிலாக அச்சவாலை ஏற்பதாகவும் ஆயினும் உரிய மரியாதை அளித்தால் ஒழிய ...