சிவபெருமான் வழங்கியவர்கள் :- சுத்தபக்தி குழுவினர் 🍁🍁🍁🍁🍁🍁🍁 படைப்பின் ஆரம்பத்தில் பிரஜைகளை அதிகப்படுத்துவது மிகவும் அவசியமாக இருந்தது. இதனால் பிரம்மதேவர் தனது மகன்களாக ஒவ்வொருவரையும் படைத்து பிரஜைகளை அதிகமாக்கும் படி கட்டளையிட்டார். எனினும் அவரது மகன்களான நான்கு குமாரர்களும் அவரது கட்டளையை மறுத்துவிட்டனர். ஏனென்றால் அவர்கள் வாழ்நாள் முழுதும் பிரம்மச்சாரியாகவே இருந்து பரம புருஷ பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு பக்தி சேவையாற்ற விரும்பினர். இதனால் கடும் கோபமடைந்தார் பிரம்மதேவர். அவரது கோபத்தின் விளைவாக அவரது இரு புருவங்களுக்கிடையில் இருந்து சிவபெருமான் அல்லது ருத்திரர் தோன்றினார். "சிவ" என்ற சொல்லுக்கு அனைத்து மங்களங்களையும் கொண்டவர் என்று பொருள்படுகிறது. சிவபெருமான் தமோ குணத்தின் (அறியாமை குணத்தின்) அதிபதியாக இருந்து இறுதியில் பிரபஞ்சத்தை அழிக்கும் பொறுப்பில் இருக்கிறார். அவர் நிறைய விசேஷ சக்திகளை தன்னகத்தே கொண்டிருக்கிறார். உதாரணமாக ஒரு சமயம் தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலை கடைந்தனர் . அப்போது கடலிலிருந்து உண்டான விஷத்தை உலக நன்ம...