Skip to main content

Posts

Showing posts with the label Gopal Bhatta Goswami / ஸ்ரீ கோபால பட்ட கோஸ்வாமி (VAH)

ஸ்ரீ கோபால பட்ட கோஸ்வாமி

  ஸ்ரீ கோபால பட்ட கோஸ்வாமி  🔆🔆🔆🔆🔆🔆 ஸ்ரீ கோபால பட்ட கோஸ்வாமி ஸ்ரீரங்கத்தில் வசித்தவரான வேங்கட பட்டரின் மகனாவார். கோபால பட்டர் முன்பு இராமானுஜ ஸம்பிரதாயத்தின் சீடப் பரம்பரையைச் சார்ந்திருந்தார், ஆனால் பின்னர் கௌடீய ஸம்பிரதாயத்தின் அங்கமானார். 1433 சகாப்த ஆண்டில் (கி.பி. 1511), சைதன்ய மஹாபிரபு தென்னிந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, சாதுர்மாஸ்ய காலத்தின் நான்கு மாதங்களில் வேங்கட பட்டரின் இல்லத்தில் தங்கினார். அச்சமயத்தில் வேங்கட பட்டர் பூரண மனநிறைவை அடையும் வரை மஹாபிரபுவிற்கு சேவை செய்யும் வாய்ப்பினைப் பெற்றார். அப்போது மஹாபிரபுவிற்குத் தொண்டு புரியும் வாய்ப்பினை கோபால பட்டரும் பெற்றார். காலப்போக்கில் ஸ்ரீ கோபால பட்ட கோஸ்வாமி தனது சித்தப்பாவும் மாபெரும் சந்நியாசியுமான பிரபோதானந்த சரஸ்வதியினால் தீக்ஷையளிக்கப்பட்டார். கோபால பட்ட கோஸ்வாமியின் தாய்தந்தை இருவருமே மிகவும் அதிர்ஷ்டசாலிகள், அவர்கள் தங்களது முழு வாழ்வையும் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் சேவையில் அர்ப்பணித்தனர். அவர்கள் கோபால பட்ட கோஸ்வாமியை விருந்தாவனத்திற்குச் செல்ல அனுமதித்தனர், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவை நினைத்தபடியே...