வந்தே ( அ ) ஹம் ஸ்ரீ - குரோ : ஸ்ரீ - யுத - பத - கமலம் ஸ்ரீ - குரூன் வைஷ்ணவாம்ஷ் ச ஸ்ரீ - ரூபம் ஸாக்ரஜாதம் ஸஹ - கண - ரகுநாதான் விதம் தம் ஸ - ஜீவம் ஸாத் வைதம் ஸாவதூதம் பரிஜன - ஸஹிதம் க்ருஷ்ண - சைதன்ய - தேவம் ஸ்ரீ - ராதா - க்ருஷ்ண - பாதான் ஸஹ - கண - லலிதா - ஸ்ரீ - விஷாகான்விதாம்ஷ் ச எனது ஆன்மீக குருவின் பாத கமலங்களுக்கும் எல்லா வைஷ்ணவர்களின் பாதங்களுக்கும் எனது மரியாதைக்குரிய வணக்கங்களை சமர்பித்துக் கொள்கிறேன் . ஸ்ரீல ரூபகோஸ்வாமி , அவரது மூத்த சகோதரர் ஸநாதன கோஸ்வமி , ரகுநாத தாஸ , ரகுநாத பட்ட , கோபால பட்ட , ஸ்ரீல ஜீவ கோஸ்வாமிகளின் பாத கமலங்களுக்கு எனது மரியாதைக்குரிய வணக்கங்கள் . அத்வைத ஆச்சாரியர் , கதாரர் , ஸ்ரீவாஸர் மற்றும் பக்தர் குழாமுடன் , ஸ்ரீ நித்யானந்தருக்கும் ஸ்ரீ கிருஷ்ண சைதன்யருக்கும் எனது பணிவான வணக்கங்கள் . ஸ்ரீமதி ராதாராணிக்கும் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் அவர்களது தோழிகளான லலிதா , விசாகைக்கும் எனது மரியாதைக்குரிய வணக்கங்கள் .