ஸ்ரீமத் - பாகவதம் காண்டம் 8 / அத்தியாயம் 3 / பதம் 2-29 ************************************************************************* பதம் 2 ஸ்ரீ - கஜேந்ர உவாச ஓம் நமோ பகவதே தஸ்மை யத ஏதச் சித் - ஆத்மகம் புருஷாயாதி - பீஜாய பரேசாயாபிதீமஹி மொழிபெயர்ப்பு யானைகளின் அரசனான கஜேந்திரன் கூறியது : பரம புருஷரான வாசுதேவனுக்கு எனது மரியாதை கலந்த வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன் ( ஓம் நமோ பகவதே வாஸுதேவாய ). அவரால்தான் , ஆத்மாவின் இருப்பால் இந்த ஜட உடல் செயற்படுகிறது . எனவே அனைத்திற்கும் அவரே மூல காரணமாவார் . பிரம்மா மற்றும் சிவனைப் போன்ற மேன்மையானவர்களாலும் அவர் வழிபடத்தக்கவராவார் . மேலும் ஒவ்வொரு ஜீவராசியின் இதயத்திற்குள்ளும் அவர் புகுந்துள்ளார் . அவரை நான் தியானிக்கிறேன் . பதம் 3 யஸ்மின் இதம் யதஸ் சேதம் யேனேதம் ய இதம் ஸ்வயம் யோ ‘ ஸ்மாத் பரஸ்மாச் ச பரஸ் தம் ப்ரபத்யே ஸ்வயம்புவம் மொழிபெயர்ப்பு பரமபுருஷர் , அனைத்தையும் தாங்கிக் கொண்டுள்ள பரம பீடமாவார் . எதிலிருந்து அனைத்தும் உண்டாக்கப்பட்டுள்ளதோ அந்...