Skip to main content

Posts

Showing posts with the label 3 Astakam / அஷ்டகம்

ஶ்ரீ கோவர்த்தனாஷ்டகம்

  பதம் 1 கிருஷ்ண-ப்ரஸாதேந ஸமஸ்த-ஷைல- சாம்ராஜ்யம் ஆப்நோதி ச வைரிணோ 'பி சக்ரஷ்ய ய: ப்ரப பலிம் ச ஸாக்ஷாத் கோவர்தனோ மே திஷாதம் அபிஷ்டம் பிரபு கிருஷ்ணரின் கருணையினால், மலைகள் அனைத்திற்கும் பேரரசன் என்ற பெருமை பெற்றதும், பொறாமை கொண்ட எதிரியான இந்திரனிடமிருந்தே போற்றத் தகுந்த மதிப்பு, மரியாதையும், பாராட்டும் பெற்றதுமான மேன்மை மிக்க கோவர்த்தன மலையானது கருணையுடன் எனது உன்னத விருப்பங்களை நிறைவேற்ற வேண்டுகின்றேன். பதம் 2 ஸ்வ-ப்ரேஷ்ட-ஹஸ்தம்புஜ-ஸௌகுமார்ய ஸுகானுபுதேர் அதி-பூமி-வருத்தே: மஹேந்ர-வஜ்ரஹதிம் அபி அஜனம் கோவர்தநோ மே திஷாதம் அபிஷ்டம் கோவர்த்தன மலையானது தனது உன்னத விருப்பத்தினால் இந்த பூமியில் அவதரித்து அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றது. கிருஷ்ணரின் தாமரை திருக்கரங்களால் ஏந்தப்பட்டு மென்மையிலும் மென்மையை அடைந்ததால், இந்திரனின் கோபத்தினால் உண்டாக்கப்பட்ட, கடும் இடி, மின்னலுடன் கூடிய நாசக்கார மழையையும் கூட சிறு பூஞ்சாரல் போன்று ஏற்று புன்னகை பூத்த கோவர்த்தன மலையானது எனது உன்னத விருப்பங்களை நிறைவேற்ற வேண்டுகின்றேன். பதம் 3 யத்ரைவ க்ருஷ்ணோ விருஷபானு-புத்ர்ய தானம் க்ரிதும் கலஹம்  வித...

ஸ்ரீஸ்ரீ சிக்ஷாஷ்டகம்

ஶ்ரீ ஶ்ரீ சிக்ஷாஷ்டகம் (பகவான் ஶ்ரீ சைதன்ய மஹாபிரபுவால் எழுதப்பட்ட எட்டு பாடல்கள்) 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 பகவான் ஶ்ரீ சைதன்ய மஹாபிரபு கிருஷ்ண விஞ்ஞானம் குறித்த புத்தகங்களை எழுதும்படி தனது சீடர்களுக்கு உபதேசித்தார். அப்பணியினை அவரது சீடத் தொடரில் வருபவர்கள் இன்று வரை ஏற்று நடத்தி வருகின்றனர். இடைவிடாத சீடப் பரம்பரையின் காரணத்தினால், பகவான் சைதன்யரால் வழங்கப்பட்ட தத்துவங்களின் விளக்கங்களும் வியாக்கியானங்களும் மிகமிக அதிகமாகவும், உண்மையிலிருந்து பிறழாமலும் கட்டுக்கோப்புடையதாகவும் உள்ளன. பகவான் சைதன்யர் அவரது இளமைக் காலத்தில் பண்டிதர் என்று பிரபலமாக அறியப்பட்டிருப்பினும், அவர் சிக்ஷாஷ்டகம் எனப்படும் எட்டு ஸ்லோகங்களை மட்டுமே விட்டுச் சென்றார். இந்த எட்டு ஸ்லோகங்கள் அவரது திருப்பணியையும் கொள்கைகளையும் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. இந்த உயர்மதிப்புடைய பிரார்த்தனைகளை இன்று வழங்குவதில் பெரும்மகிழ்ச்சி கொள்கிறோம். (1) சேதோ-தர்பண-மார்ஜனம்  பவ-மஹா- தாவாக்னி-நிர்வாபனம் ஷ்ரேய:-கைரவ-சந்த்ரிகா-விதரணம் வித்யா-வதூ-ஜீவனம் ஆனந்தாம்புதி-வர்தனம் ப்ரதி-பதம் பூர்ணாம்ருதாஸ்வாதனம் ஸர்வாத்ம-ஸ்னபனம் பரம் விஜயத...

தாமோதராஷ்டகம்

  பதம்  1 நமாமீஷ்வரம் ஸச்-சித்-ஆனந்த-ரூபம் லஸத்-குண்டலம் கோகுலே ப்ராஜமானம் யஷோதா-பியோலூகலாத் தாவமானம் பராம்ருஷ்டம் அத்யந்ததோ த்ருத்ய-கோப்யா மொழிபெயர்ப்பு   பூரண அறிவும் ஆனந்தமும் நிறைந்த நித்திய ரூபத்தில் வீற்றிருக்கும் முழுமுதற் கடவுளை நான் வணங்குகின்றேன். சுறா மீனின் வடிவிலுள்ள காதணிகள் இங்குமங்கும் ஆட, தெய்வீகத் திருத்தலமான கோகுலத்தில் அவர் அழகாக ஜொலித்துக் கொண்டுள்ளார். அன்னை யசோதையைக் கண்டதும் பயத்தால் மர உரலிலிருந்து இறங்கி வேகமாக ஓடத் தொடங்கினார். ஆனால் அதைவிட வேகமாக அவரை விரட்டிய அன்னையினால் அவரைப் பிடித்து விட முடிந்தது. அந்த முழுமுதற் கடவுளான ஸ்ரீ தாமோதரருக்கு நான் எனது பணிவான வணக்கத்தை சமர்ப்பிக்கின்றேன். பதம்  2 ருதந்தம் முஹுர் நேத்ர-யுக்மம் ம்ருஜன்தம் கராம்போஜ-யுக்மேன ஸாதங்க-நேத்ரம் முஹு: ஷ்வாஸ-கம்ப-த்ரிரேகாங்க-கண்ட ஸ்தித-க்ரைவம் தாமோதரம் பக்தி-பத்தம் மொழிபெயர்ப்பு   (அன்னையின் கரங்களில் இருந்த கோலைக் கண்டதும்) அவர் அழுதபடி தாமரை கரங்களைக் கொண்டு, பயம் நிறைந்த கண்களை மீண்டும்மீண்டும் கசக்குகிறார். சங்கின் மூன்று கோடுகளை ஒத்திருக்கும் அவரது கழுத்தில்...

மதுராஷ்டகம்

  அதரம் மதுரம் வதனம் மதுரம் நயனம் மதுரம் ஹஸிதம் மதுரம் । ஹ்ருதயம் மதுரம் கமனம் மது4ரம் மதுராதிபதேரகிலம் மதுரம் ॥ 1 ॥ வசனம் மதுரம் சரிதம் மதுரம் வஸனம் மதுரம் வலிதம் மதுரம் । சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம் ॥ 2 ॥ வேணு-ர்மதுரோ ரேணு-ர்மதுர: பாணி-ர்மதுர: பாதௌ மதுரௌ । ந்ருத்யம் மதுரம் ஸக்யம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம் ॥ 3 ॥ கீதம் மதுரம் பீதம் மதுரம் புக்தம் மதுரம் ஸுப்தம் மதுரம் । ரூபம் மதுரம் திலகம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம் ॥ 4 ॥ கரணம் மதுரம் தரணம் மதுரம் ஹரணம் மதுரம் ஸ்மரணம் மதுரம் । வமிதம் மதுரம் ஶமிதம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம் ॥ 5 ॥ குஞ்ஜா மதரா மாலா மதுரா யமுனா மதுரா வீசீ மதுரா । ஸலிலம் மதுரம் கமலம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம் ॥ 6 ॥ கோபீ மதுரா லீலா மதுரா யுக்தம் மதுரம் முக்தம் மதுரம் । த்ருஷ்டம் மதுரம் ஶிஷ்டம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம் ॥ 7 ॥ கோபா மதுரா காவோ மதுரா யஷ்டி ர்மதுரா ஸ்ருஷ்டி ர்மதுரா । தலிதம் மதுரம் பலிதம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம் ॥ 8 ॥ ॥ இதி ஶ்ரீமத்வல்லபாசார்யவிரசிதம் மதுராஷ்டகம் ஸம...

ஸ்ரீ பாலமுகுந்தாஷ்டகம்

கராரவிந் தே ன ப தா ரவிந் த ம் முகாரவிந் தே   விநிவேச ’ யந்தம் வடஸ்ய பத்ரஸ்ய புடே ச ’ யானம்   பா லம் முகுந் த ம் மனஸா ஸ்மராமி   ஸம்ஹ்ருத்ய லோகான் வடபத்ரம த் யே ச ’ யாந மா த் யந்த விஹீனரூபம் ஸர்வேச் ’ வரம் ஸர்வ ஹிதாவதாரம்   பா லம் முகுந் த ம் மனஸா ஸ்மராமி     இந் தீ வர ச் ’ யாமல கோமலாங் க ம் இந் த் ரா தி   தே வார்ச்சித பா த ப த் மம் ஸந்தான கல்ப த் ரும மாச் ’ ரிதானாம்   பா லம் முகுந் த ம் மனஸா ஸ்மராமி   லம் பா லகம் லம் பி த ஹாரயஷ்டிம் ச் ’ ருங் கா ர லீலாங்கித   த ந்த பங்க்திம் பி ம் பாத ரம் சாரு விசா ’ ல நேத்ரம்   பா லம் முகுந் த ம் மனஸா ஸ்மராமி   சி ’ க்யே நி தா யா த் ய பயோ ததீ னி   ப ஹிர் க தாயாம் வ்ரஜ நாயிகாயாம் பு க்த்வா யதேஷ்டம் கபடேன ஸுப்தம்   பா லம் முகுந் த ம் மனஸா ஸ்மராமி   கலிந் த ஜாந்த ஸ்த்தித காலியஸ்ய   ப ணா க் ரரங் கே   நடன ப்ரியந்தம் தத்புச்ச ஹஸ்தம் ச ’ ர தி ந் து   வக்த்ரம்   பா லம் முகுந் த ம...