தொடக்கத்தில் , பரிசுத்த உணர்வு நிலை அல்லது கிருஷ்ணர் பற்றிய தூய உணர்வு எனும் நிலையிலிருந்து முதல் மாசு தோன்றியது . இது பொய் அகங்காரம் அல்லது உடலைத் தானாக எண்ணிக்கொள்ளுதல் ஆகிய தவறு என்று அழைக்கப்படும் . உயிரினம் கிருஷ்ணர் பற்றிய உணர்வின் இயல்பான நிலையில் உள்ளது . ஆனால் உயிர்களுக்கு அளவோடு கூடிய சுதந்திரமும் உள்ளது . இது தான் கிருஷ்ண உணர்வினை மறக்கச் செய்கிறது . அதாவது உண்மையில் , தூய கிருஷ்ணர் பற்றிய உணர்வு இருக்கிறது ; ஆனால் அளவோடு கூடிய சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதால் , கிருஷ்ணரை மறக்கும் வாய்ப்பும் உள்ளது . இது உண்மையான வாழ்வில் காட்டப்படுகிறது ; கிருஷ்ணர் பற்றிய உணர்வில் உள்ள சிலர் திடீரென்று மாறுவது போன்ற நிகழ்ச்சிகள் நிறையவே உள்ளன . அதனால் , ஆன்மீக உணர்தலுக்கான வழி கூர்மையான முனையினை உடைய கக்தி போன்றது என்று உபநிஷத்துகளில் குறிப்பிடப்பட்டுள்ளது . இந்தச் சான்று மிகச் சரியானது . ஒருவர் தன் கன்னங்களைக் கூர்மையான கத்தி கொண்டு மிகவும் நன்றாக மழிக்கிறார் . ஆனா...