Skip to main content

Posts

Showing posts with the label Meditation / தியானம் (Articles)

விஷ்ணு ரூபமே தியானத்தின் இறுதியான இலட்சியம்

  தத்ரைக்காவயவம் த்யாயேத் அவ்யுச்சினனேன சேதஸா மனோ நிர்விஷயம் யுக்த்வா தத : கிஞ்சன ந ஸ்மரேத் பதம் தத் பரமம் விஷ்ணோர் மனோ யத்ர ப்ரஸீததி மொழிபெயர்ப்பு அதன் பிறகு , விஷ்ணுவின் அங்கங்களின் மீது ஒவ்வொன்றாக , முழு உடலைப் பற்றிய கருத்திலிருந்து விலகி விடாமல் நீர் தியானிக்க வேண்டும் . இவ்வாறாக , அனைத்துப் புலன் பொருட்களிலிருந்தும் மனம் விடுபடுகிறது . வேறெதைப் பற்றியும் , நினைக்கக் கூடாது . பரம புருஷ பகவானாகிய விஷ்ணுவே பரம சத்தியமாக இருப்பதால் , அவரில் மட்டுமே மனதால் பூரணமாக ஒத்துப்போக முடியும் . பொருளுரை விஷ்ணுவின் புறச் சக்தியால் தடுமாற்றத்திற்கு உள்ளாகும் மூடர்கள் , இன்பத்தைத் தேடி அலைவதன் இறுதி இலட்சியம் முழு முதற்கடவுளாகிய ஸ்ரீ விஷ்ணுவுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வதுதான் என்பதை அறிவதில்லை . விஷ்ணு - தத்துவம் எனப்படுவது முழுமுதற் கடவுளின் எண்ணிலடங்காத உன்னத உருவங்களின் விரிவங்கங்களாகும் . மேலும் விஷ்ணு - தத்துவத்தின் மூல உருவமாக இருப்பவர் எல்லாக் காரணங்களுக்கும் பரம காரணமான கோவிந்தன் அல்லது ஸ்ரீகிருஷ்...