Skip to main content

Posts

Showing posts with the label Dasavatharam / தசாவதாரம்

பகவான் ஶ்ரீ பலராமர்

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்,  பகவான்  கிருஷ்ணர், பூமியில் அவதரித்தார். அவரோடு, அவரது சகோதரராக பலராமர் அவதரித்தார். யமுனை நதிக்கரையிலிருந்த விருந்தாவனம் என்ற கிராமத்தில் அவர்கள் வசித்து வந்தார்கள். இரு சகோதரர்களும் எல்லையில்லா அழகை பெற்றிருந்தனர். கிருஷ்ணர், கார்மேக வண்ணத்தோடும் தாமரை கண்களோடும், புல்லாங்குழல் கொண்டு காணப்பட்டார். பலராமர் வெள்ளை நிறத்தோடு, தாமரை கண்களோடு, கருநிற கூந்தலோடு கலப்பையோடு காணப்பட்டார். கிருஷ்ணர் எப்போதும் மஞ்சள் நிற ஆடைகள் அணிந்திருந்தார். பலராமர் எப்போதும் நீல நிற ஆடைகள் அணிந்திருந்தார்.  அவர்களுடைய தந்தையான நந்த மஹாராஜர் மற்றும் தாய் யசோதா தேவிக்கு சொந்தமாக ஒன்பது லட்சம் பசுக்கள் இருந்தன. அவற்றிலிருந்து வரும் பாலை கொண்டு, தயிர், மோர், வெண்ணை மற்றும் நெய் கிடைத்தது. மேலும் எருதுகள் விவசாயம் மற்றும் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்பட்டது. விருந்தாவன வாசிகளுக்கு போதுமான அளவு பழங்கள் மற்றும் தானியங்கள் கொடுத்தது போக மீதமிருந்தால் அவர்கள் அருகிலிருக்கும் கிராமத்து மக்களோடு பண்டமாற்று முறைப்படி, அதிக விளைச்சலை கொடுத்து, அதற்கு நிகரான ஆபரணங்கள் மற்று...

வாமன அவதாரம்

  வாமன அவதாரம் 🔆🔆🔆🔆🔆 பரம புருஷ பகவானின் முக்கிய அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று அனைத்து மகான்களும் கூறியுள்ளனர். அசுரர்களிடமிருந்து தேவலோகத்தை மீட்டு மீண்டும் தேவர்களிடம் ஒப்படைப்பதற்காக ஒரு பிராமண சிறுவனின் வடிவில் பகவான் தோன்றினார். வாமனர் என்று அறியப்படும் அவரது அவதாரத்தின் சில முக்கிய சிறப்புகளை நாம் இங்கு காண்போம். வழங்கியவர்: ஸ்ரீ நாராயண தாஸ்   கதைச் சுருக்கம் தேவலோகத்தை மாமன்னர் பலி கைப்பற்றுதல் அமரத்துவம் அடைய விரும்பிய தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமுதத்தை வரவழைத்தனர். பகவான் விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து, அமுதத்தை தேவர்களுக்குக் கிடைக்கச் செய்தார். அதன் பின்னர் ஏற்பட்ட போரில் இந்திரன் தலைமையிலான தேவர்கள் வெற்றி பெற, பலி மஹாராஜரின் தலைமையிலான அசுரர்கள் தோல்வியுற்று மரணத்தின் அருகில் சென்றனர். (ஸ்ரீமத் பாகவதத்தின் எட்டாவது காண்டத்தின் 5-12 அத்தியாயங்களை விரிவாகப் படித்தல் நன்று) பிருகு வம்சத்தில் வந்த சுக்ராசாரியர், பலி மஹாராஜரிடம் இரக்கம் கொண்டு, அவரை மீண்டும் உயிர்பெறச் செய்தார். தேவலோகத்தைக் கைப்பற்ற விரும்பிய மாமன்...

பகவான் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி

 பகவான் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி  வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 பல வருடங்களுக்கு முன்னர், அயோத்தியில் தசரத மஹாராஜா வாழ்ந்து வந்தார். அவருக்கு மூன்று மனைவிகள் இருந்தனர். அவர்களுக்கு  நீண்ட நாட்கள் குழந்தை பாக்கியம் இல்லை புத்திர கமேஷ்டி என்ற ஒரு யாகத்தின் மூலம் ஒரே சமயத்தில் நான்கு குழந்தை பெறும் பாக்கியம் பெற்றனர். அதில் கௌசல்யா தேவிக்கு பகவான் ஶ்ரீ ராமசந்திரமூர்த்தியும் கைகேயிக்கு பரதனும் .சுமித்ரைக்கு லட்சுமணன் மற்றும் சத்ருக்னனும்  பிறந்தனர். இவர்களில் ராமர் மூத்தவர். இளவரசர்கள் நால்வரும் அனைத்து கலைகளிலும் சிறந்து விளங்கினர் - போர் கலை, வில் அம்பு பிரயோகிப்பது, வாள் வீச்சு, நாட்டு மக்களை பாதுகாத்தல், அரச கடமைகளை எவ்வாறு செவ்வனே செய்வது - போன்ற அனைத்தையும் கற்றனர். சில காலத்திற்கு பின்னர், ராமர் "சீதா" என்ற அழகிய இளவரசியை மணந்தார். அவர்கள் அயோத்தியில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.  தனக்கு வயதாகி விட்டது என்றுணர்ந்த தசரத மகாராஜா, தனது மந்திரிகளுடன் ஆலோசித்து, ஶ்ரீ ராமருக்கு பட்டாபிஷேகம் செய்துவிட்டு, தான் துறவறம் ஏற்று. கானகம் செ...

பரசுராமர் அவதாரம்

 பரசுராமர் அவதாரம்  வழங்கியவர் :-  ஶ்ரீல பிரபுபாதர் 🍁🍁🍁🍁🍁🍁🍁 முன்னொரு காலத்தில், ஜமதக்னி என்னும் முனிவர், வனத்தில் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் பக்தி கொண்டவர். அவருக்கு ஏழு குழந்தைகள்; பரசுராமர் முதல் மகன். மேலும் அவரிடம், கேட்ட வரத்தை அளிக்கும் காமதேனு என்ற அற்புத பசுவும் இருந்தது. இருப்பினும், பேராசை இல்லாமல், வனத்தில் சிறிய குடிலிலேயே வாழ்ந்து வந்தார்.  ஒரு நாள் பரசுராமர் வெளியே சென்றிருந்த சமயம், கார்த்தவீர்யார்ஜுனன் என்னும் அரசன் தன் படை வீரர்களோடு அங்கு வந்தான். ஜமதக்னி முனிவர், அரசனையும், அவனது வீரர்களையும், மந்திரிகளையும், வாகனங்களையும் நன்கு வரவேற்று உபசரித்தார். விரும்பியதையெல்லாம் அளிக்கக் கூடிய ஒரு காமதேனு பசுவை அவர் வைத்திருந்ததால், இவ்விருந்தினர்களை உபசரிப்பதற்குத் தேவையானதை எல்லாம் அவர் கொடுத்தார். ஜமதக்னி, காமதேனுவின் உருவில் ஓர் இரத்தினத்தை வைத்திருந்ததால், அவர் தன்னைவிட சக்திவாய்ந்தவராகவும், செல்வந்தராகவும் இருந்ததாக கார்த்தவீர்யார்ஜுனன் நினைத்தான். எனவே அவனும், அவனது ஆட்களான ஹேஹயர்களும் ஜமதக்னியின் உபசரிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, அக்னி...

நரசிம்ம அவதாரம்

  நரசிம்ம அவதாரம்  வழங்கியவர் - சுத்தபக்தி குழு 🍁🍁🍁🍁🍁🍁🍁 தன்னுடைய சகோதரனின் மரண செய்தியை கேட்ட ஹிரண்யகசிபு, மிகுந்த கோபம் கொண்டான். விண்ணை நோக்கி, "எனதன்பு அசுர  நண்பர்களே! நான் தேவர்களை தோற்கடித்து இந்த அண்டம் முழுவதையும் எனதாக்குவேன். விஷ்ணுவின் சிரம் கொய்து அவனை கொல்வேன்", என்று ஓலமிட்டான்.  சாகாவரம் பெற எண்ணிய ஹிரண்யகசிபு, ஒரு தனிமையான இடத்திற்கு சென்றான். தன் பாதத்தின் நுனியில் நின்றவாறு, கைகளை சிரஸிற்கு மேல் கூப்பி தன்னுடைய பார்வையை விண்ணை நோக்கி நிலை நிறுத்தினான். இவ்வாறு நூற்றி இருபத்தி ஐந்து வருடங்கள் இருந்தான். இந்த காலம் முழுவதும் உண்ணவும் இல்லை, உறங்கவும் இல்லை. எறும்புகள் அவனை சுற்றி புற்று கட்டி, அவனுடைய உடலையும் அரித்திருந்தது. அவனுடைய சிரத்திலிருந்து வந்த நெருப்பு ஜுவாலை, சமுத்திரத்தின் நீரை வற்ற செய்தது. மூவுலகங்களும் வெட்பத்தால் தகித்தது. பிரம்ம தேவர் உடனடியாக ஹிரண்யகசிபுவின் முன் தோன்றினார். "அசுரர் குலத்தின் அரசே! உன் உறுதியை கண்டு நான் வியக்கிறேன்! உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்", என்று கூறினார். அதேசமயம், அவனுடைய உடலின் மீது சிறிது ஜலத்தை...

வராஹ அவதாரம்

 வராஹ அவதாரம் (வழங்கியவர் - ஜீவன கௌர ஹரி தாஸ்) ******* முந்தைய யுகத்தில் ஒரு நாள் மாலை வேளையில் மரீச்சியின் புதல்வனான கஷ்யப முனிவர், பகவான் விஷ்ணுவை வழிபட்டுக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் தக்ஷணின் மகளான திதி தன் கணவரான கஷ்யபரை அணுகி தன் காம இச்சைகளை உடனடியாக தணிக்கும் படி மன்றாடினாள். அந்த அமங்களகரமான மாலை வேளையில் கஷ்யப முனிவரும், திதியும் ஒன்று கூடினர். தவறான நேரத்தில் ஒன்று கூடியதை நினைத்து திதி வருத்தப்பட்டு அழுதாள். அப்போது காஷ்யப முனிவர் திதியிடம் கவலை கொள்ள வேண்டாம், உனக்கு பிறக்க இருக்கும் இரு புதல்வர்கள் உலகையே அச்சுறுத்தும் அசுரர்களாக இருந்தாலும், உன் பேரன் பிரஹ்லாதன் சிறந்த ஹரி பக்தனாக திகழ்வான் என தேற்றினார். பிரஹ்லாதனின் திவ்யமான குணங்களையும், புகழையும் கேட்ட திதி மிகவும் மகிழ்வுற்றாள். அதே சமயம் திதி தன் இரு அசுர குழந்தைகளான ஶிஶிஹிரண்யாக்ஷன்ன் மற்றும் ஹிரண்யகசிபுவை தன் கருவில் 100 வருடம் சுமந்தாள். இந்த இரு அசுர குழந்தைகளும் பூமியில் பிறப்பதற்கு காரணமாக வைகுண்டத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவமும் நடைபெற்றது. நான்கு குமாரர்களின் சாபம் 💐💐💐💐💐💐💐💐💐 அதன்படி நான்கு க...

பகவான் தன்வந்திரியின் தோற்றம் / மோகினீ அவதாரம்

  பகவான் தன்வந்திரியின் தோற்றம் வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 இம்முறை, பகவான் விஷ்ணுவின் அம்ச அவதாரமான தன்வந்தரி தோன்றினார். மிகவும் அழகாக காணப்பட்ட அவர், அமிர்தத்தைக் கொண்ட ஒரு கலசத்தை ஏந்தியிருந்தார். அசுரர்கள் உடனே தன்வந்தரியின் கரத்திலிருந்த கலசத்தை வெடுக்கெனப் பிடுங்கிக்கொண்டு ஓடத் துவங்கினர். மிகவும் வருத்தமடைந்த தேவர்கள் விஷ்ணுவைச் சரணடைந்தனர். தன்வந்தரியிடமிருந்து கலசத்தை பிடுங்கிக் கொண்டபின் அசுரர்கள் தங்களுக்கிடையில் சண்டையிட ஆரம்பித்தனர். பகவான் விஷ்ணு தேவர்களுக்கு ஆறுதல் கூறியதால் அவர்கள் போரிடாமல் அமைதியாக இருந்தனர்.  மோகினீ அவதாரம் 🍁🍁🍁🍁🍁🍁🍁   அசுரர்களுக்கிடையில் சண்டை நடந்து கொண்டிருக்கும்போது, பிரபஞ்சத்திலேயே மிகவும் அழகிய பெண்ணாகிய மோகினீ அவதாரமாக பகவான் தோன்றினார். அமிர்த கலசத்தை அசுரர்கள் அபகரித்துக் கொண்டபோது, அசாதாரணமான அழகு கொண்ட ஓர் இளம்பெண் அவர்களின் முன் தோன்றினாள். அசுரர்கள் அனைவரும் அந்த இளம் பெண்ணின் அழகில் மயங்கி, அவளுக்கு அடிமைகளாயினர். இப்போது அமிர்தத்தை அடைவதற்காக அசுரர்கள் தங்களுக்கிடையில் சண்டை செய்து கொண்டிருந்...