நைதத் பதாதீச பதம் தவேப்ஸிதம் யன் மாயயா நஸ்தநுஷே பூத ஸூக்ஷ்மம் அனுக்ரஹாயாஸ்த அபி யர்ஹி மாயயா லஸத் துளஸ்யா பகவான் விலக்ஷித : மொழிபெயர்ப்பு என் அன்பான பகவானே , உங்களுடைய விருப்பம் இல்லாவிட்டாலும் எங்களுடைய புலன் திருப்திக்காக நீங்கள் இந்த முழுமையான நுட்பமான பூதங்களால் ஆகிய படைப்பை வெளிப்படுத்துகிறீர்கள் . உங்களுடைய அகாரணமான கருணை எங்கள் மீது இருக்கட்டும் . ஒளி பொருந்திய துளசி இலைகளால் ஆன மாலையால் அலங்கரிக்கப்பட்டு உங்களுடைய அழிவற்ற வடிவத்தில் எங்கள் முன் தோன்றியுள்ளீர்கள் . பொருளுரை இந்த ஜடவுலகம் பகவானின் தனிப்பட்ட விருப்பத்தால் படைக்கப்பட்டதல்ல என்பது இங்கு தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது . இது அவருடைய வெளி ஆற்றலால் படைக்கப்பட்டது . ஏனென்றால் , வாழும் பொருள்கள் அதை அனுபவிக்க விரும்பின . புலன் நுகர்ச்சியை அனுபவிக்க விரும்பாதவருக்காகவும் , உன்னதமான அன்புத் தொண்டில் தொடர்ந்து ஈடுபட்டிருப்பவருக்காகவும் , கிருண்ண உணர்வு நிலையில் நிலையாக இருப்பவருக்காகவும் இந்த உலகம் படைக்கப்படவில்லை . அவர்களுக்கு புனித ...