Skip to main content

Posts

Showing posts with the label Lord Sri Rama Lila / ஶ்ரீ ராமரின் லீலைகள் (Story)

ஹனுமானின் இதயத்தில் சீதாராமன்

          ராம பக்தி செலுத்துவதில் தன்னை மிஞ்சியோர் யாருமில்லை என உணர்த்தியவர்  ஶ்ரீ  ராம பக்த அனுமன். இதை உணர்த்தும் விதமாக தன் இதயத்தில் ராமனும், சீதா தேவியும் இருப்பதை தன் நெஞ்சப் பிளந்து காட்டிய அற்புத நிகழ்வு குறித்து இங்கு பார்ப்போம்.      14 ஆண்டு கால வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பிய ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. ராமனின் பெயரில் 14 ஆண்டுக்காலம் ஆட்சி செய்த பரதனின் ஆட்சியின் கீழ் மக்கள் எந்த ஒரு குறை இல்லாமல் வாழ்ந்தார்கள் என்றாலும், ராமன் பட்டாபிஷேக தினத்தில் தான் மக்களின் முகத்தில் உண்மையான மகிழ்ச்சியும் ஆனந்தமும் வந்தது.      வேதங்கள் முழங்க, மங்கல கீதங்கள் இசைக்கப்பட்டு, புண்ணிய நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்களால் ராமருக்கு பட்டாபிஷேகம் செய்யப்பட்டது. மக்கள் ஆனந்த மழையில் நனைந்தனர்.      ராமனும், சீதா தேவியும் அரியாசனத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்து நாட்டு மக்களும், முனிவர்களும், தேவர்களும் கூட பூமாரி பொழிந்தனர்.  ...

தந்தையிடம் பக்தி (ஆதர்சபுருஷர் இராமபிரான்)

  தந்தையிடம் பக்தி 🍁🍁🍁🍁🍁 பகவான் ஶ்ரீ ராமர் தனது தந்தையிடம் கொண்டிருந்த பக்தியும் மிகமிக அற்புதமானது. தந்தையின் ஆணையை நிறைவேற்றுவதில் ஸ்ரீராமரது மனத்தில் எவ்வளவு உற்சாகமும், துணிவும், திடமான உறுதியும் இருந்தது என்ற விஷயம் வால்மீகி ராமாயணத்தைப் படிப்பவர்களுக்குப் புலப்படாமல் போகாது! தாயான கைகேயியிடம் ஸ்ரீராமன் சொல்வதை வால்மீகி கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்.  அஹம் ஹி வசநாத்  ராஜ்ஞ: பதேயமபி பாவகே  பக்ஷயேயம் விஷம் தீஷ்ணம் பதேயமபி சார்ணவே | (வால்மீகி இராமாயணம் 2/18/28-29) ந ஹ்யதோ தர்மசரணம் கிஞ்சித ஸ்தி மஹத்தரம் யதா பிதரி ஸுஸ்ரூஷா தஸ்ய வா வசநக்ரியா (வால்மீகி இராமாயணம் 2/19/22) 'மன்னர் சொன்னால் நான் நெருப்பில் குதிப்பேன். கொடிய நஞ்சையும் உண்பேன். கடலிலும் விழுவேன். ஏனென்றால் தந்தைக்குப் பணிவிடை செய்வதையும், அவருடைய கட்டளையை நிறைவேற்றுவதையும் விடப் பெரிய தர்மம் உலகில் வேறு ஒன்றுமில்லை' என மொழிகிறார். அங்கே இதேபோன்ற மொழிகள் பல காணப்படுகின்றன. பிறகு அன்னை கௌசல்யா தேவியிடம் அவர் நாஸ்தி பக்தி: பிதுர்வாக்யம் ஸமதிக்ரமிதும் மம  ப்ரஸாதயே த்வாம் ஸிரஸா கந்துமிச்சாம்யஹம் வநம் (...

தாயிடம் பக்தி (ஆதர்சபுருஷர் இராமபிரான்)

தாயிடம் பக்தி 🍁🍁🍁🍁 இராமபிரானுக்குத் தம்முடைய தாயிடம் இருந்த பக்தி சிறந்த ஆதர்சனமானது, (பிறருக்கு எடுத்துக் காட்டாக விளங்குவது). அதை முழுவதும் விவரிப்பது என்பது இயலாது. எனவே இங்கே சுருக்கமாக மட்டுமே எழுதப்படுகிறது. அன்னை கைகேயி தம்மிடம் தயையில்லாமல் நடந்துகொண்ட போதிலும், அவரிடத்தில் ஸ்ரீராமன் நடந்து கொண்ட விதம் எப்போதுமே பக்தியும். மரியாதையும் நிரம்பியதாக இருந்தது. அன்னை கௌசல்யாவின் அரண்மனையிலிருந்து திரும்பி வருகின்றபோது அவர் லக்ஷ்மணனிடம், பின்வருமாறு சொல்கிறார்; யஸ்யா மதபிஷேகார்தே மாநஸம் பரிதப்யதே மாதா ந: ஸா யதா ந ஸ்யாத் ஸவிங்கா ததா குரு  தஸ்யா: ஸங்காமயம் துகம் முஹூர்தமபி நோத்ஸஹே  மநஸி ப்ரதிஸஞ்ஜாதம் ஸௌமித்ரேக்ஷஹமுபேக்ஷிதும் ந புத்தி பூர்வம் நாபுத்தம் ஸ்மராமீஹ கதாசந மாத்ரூணாம் வா பிதுர்வாஹம் க்ருதமல்பம் சவிப்ரியம் (வால்மீகி இராமாயணம் 2/22/6-8) "லக்ஷ்மணா! என்னுடைய முடிசூடுதலின் காரணமாக யாருடைய மனம் கொதிக்கின்றதோ, அந்த என் தாய்க்கு என் மேல் ஒரு சந்தேகமும் ஏற்படாதபடி நீ நடந்து கொள். சந்தேகத்தின் காரணமாக அவர் உள்ளத்தில் எழுகின்ற துக்கத்தை நான் ஒரு முகூர்த்தம் கூடத் தாளமுடியாது...

ஆதர்சபுருஷர் இராமபிரான்

ஆதர்சபுருஷர் இராமபிரான்  (பிறருக்கு எடுத்துக் காட்டாக விளங்கும் ஆதர்ச குணம்) 🍁🍁🍁🍁🍁🍁🍁 ரகுகுலத்திற்கு அணிகலமாக விளங்குபவரும் சிறந்த நடத்தைக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவரின் குணங்கள் மற்றும் பண்புகளின் எல்லையைக் காக்கும் பகவான் ஸ்ரீராமசந்திரனுக்கு ஒப்பானவராக வேறு ஒருவர் இதுவரை பிறந்ததில்லை என்று சொல்வது மிகையாகாது. 'இராமபிரான் பூரண பிரம்மமான பரமாத்மாவே. அவர் தர்மத்தைக் காக்கவும், உலகை உய்விக்கவுமே அவதரித்தார் எனினும் நன்னடத்தை கொண்ட ஓர் ஆதர்ச மனிதராகவே எல்லோரிடமும் நடந்து கொண்டார். ஆதர்சலீலைகள் கொண்ட அவருடைய சரித்திரத்தைக் கேட்பதாலும், படிப்பதாலும், நினைப்பதாலும் இதயத்தில் மிகவும் தூய உணர்வு அலைகள் கிளர்ந்தெழுகின்றன. மனம் களிக்கிறது. அவருடைய ஒவ்வொரு செயலும் பிறர் பின்பற்றி நடக்கத்தக்கதாக இருந்தது. அவர் நற்குணங்களின் பெருங்கடல். படைக்கலங்களைப் பயன்படுத்தும் கலையில் அவர் உண்மை நல்லெண்ணம், தயவு,பொறுமை, மென்மை, வீரம், ஆழம், தேர்ச்சி, பராக்கிரமம், அச்சமின்மை, பணிவு, அமைதி, சகிப்புத்தன்மை, மனஅமைதி, அடக்கம், பற்றின்மை, நீதி காக்கும் தன்மை, திறமை, அன்பு, தியாகம், மரியாதை காத்தல், பிறன...

பரதனின் மகிமை (பகுதி 3 )

'ரகுநந்தனா, நானும் பதினான்கு ஆண்டுகள் வரை சடைகள் தாங்கி, மரவுரி தரித்து, பழங்களையும், கிழங்குகளையும் உண்டு, உங்களது வருகையை எதிர்நோக்கி நகரத்துக்கு வெளியே வாழ்வேன். எதிரியைப் பொசுக்குபவரே! அவ்வளவு நாட்களுக்கும் இந்த அரசை நடத்தும் பொறுப்பு இப்பாதுகைகளிடமே இருக்கும். ரகுகுல ஏந்தலே! பதினான்கு ஆண்டுகள் நிறைவுற்றவுடனே அதே நாளில் உங்களது தர்சனம் கிடைக்கப் பெறவில்லை என்றால் நான் எரியும் நெருப்பில் புகுந்துவிடுவேன்!' என்று சூளுரைத்தார். பரதன் கூறிய இச்சூளுரையைக் கேட்ட பகவான் மகிழ்ச்சி யுடன் அதை ஏற்றுக்கொண்டார். பிறகு பரதனிடமும், தம்பி சத்ருக்னனிடமும், தாயான கைகேயினிடமும் நல்லமுறையில் நடந்துகொள்ளச் சொல்லி அறிவுறுத்தினார். இருவரையும் மார்புறத் தழுவிக்கொண்டார். விடையும் கொடுத்தார். அப்போது பரதனின் பிரிவைத் தாங்காமல் ஸ்ரீராமனுடைய கண்களில் கண்ணீர் நிரம்பிற்று. ditative இதற்கப்பால் பரதன் பகவானுடைய பாதுகைகளைத் தம் தலைமேல் ஏந்தியவாறு, மிக்க மனநிறைவோடு தேரேறினார். வழியில் பரத்வாஜ முனிவரைச் அனைத்தையும் உரைத்து. சந்தித்து, நடந்தவை அவரிடம் அனுமதி பெற்று சிருங்கபேரபுரம் வழியாக அயோத்தி வந்தடைந்தார்....

பரதனின் மகிமை (பகுதி 2 )

  பரதன் சித்ரகூடத்தை நெருங்கினார். அப்போது வானத்தில் புழுதி எழும்பிப் படர்ந்தது. அதைப் பார்த்த ஸ்ரீராமன் லக்ஷ்மணனிடம் அதற்குரிய காரணத்தை அறிந்து வரச் சொன்னார். லக்ஷ்மணன் ஒரு மரத்தின் மேல் ஏறிப் பார்க்கிறார். பரதன் தான் படையுடன் வருகிறார் என்று உறுதி செய்துகொள்கிறார். அவர் மேல் ஸந்தேஹம் கொண்டு கடுமையான சொற்களை வெளியிடுகிறார். அப்போது ஶ்ரீ ராமன் பரதனுடைய நற்குணங்களையும், அன்பையும் பெருமைப்படுத்திப் புகழ்ந்து சொல்கிறார்: இச்சமயம் பரதன் நம் எல்லோரையும் சந்திக்க வருகிற முறையைப் பார்த்தால், அது எல்லாவிதங்களிலும் சரியானதாகவே படுகிறது. நமக்கு இதமில்லாதபடி நடப்பதை அவன் மனத்தாலும் எண்ணமாட்டான்; நீ பரதனை இவ்வாறு ஸந்தேஹிக்கவும், அவனிடம் அஞ்சவும் நேரும்படி அவன் உனக்கு எப்போது தீங்கு செய்திருக்கிறான்? பரதன் இங்கு வந்தபின், இம்மாதிரி கொடூரமான, அன்பில்லாத வார்த்தைகளை நீ சொல்லாதே. நீ அவனிடம் விரும்பத்தகாத முறையில் நடந்து கொண்டாலும், பிரியமில்லாத சொற்களைச் சொன்னாலும், அவையெல்லாம் என்னிடமே நீ சொன்னதாகவும், நடந்து கொண்டதாகவுமே கருதுவேன். அரசைப் பெறும்பொருட்டு இந்தக் கொடிய வார்த்தைகளைச் சொல்கிறாய் என்ற...