ஸ்ரீ கோவிந்த தேவரின் தோற்றம் சைதன்ய மஹாப்ரபுவிடமோ அல்லது அவரது சீடர்களிடமோ நம்பிக்கை கொண்டவர்களுக்கு விருந்தாவனத்தின் அழகிய லீலைகளை வெளிப்படுத்தவேண்டும் என்பது மஹாபிரபுவின் விருப்பமாகும். அவருடைய தாயான சச்சி மாதாவின் வேண்டுகோள்படி மஹாபிரபு பூரியில் இருந்த சமயம், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தனது லீலைகள் நடத்திய திவ்யமான ஸ்தலங்களை கண்டறிந்து புதுப்பிக்க வேண்டிய பணியை ஸ்ரீ ரூப கோஸ்வாமி மற்றும் சனாதன கோஸ்வாமியிடம் ஒப்படைத்தார். மஹாபிரபுவின் விருப்பப்படி பகவான் கிருஷ்ணர் லீலைகள் செய்த பெரும்பாலான இடங்களை ஸ்ரீல ரூப கோஸ்வாமி கண்டறிந்தார். இருப்பினும் அவர் திருப்தி அடையவில்லை. ஏனெனில் ஸ்ரீ கோவிந்த தேவரின் விக்ரஹம், விருந்தாவனத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் ஸ்ரீ ரூப கோஸ்வாமியால் கோவிந்த தேவரை கண்டறிய முடியவில்லை. அவரும் விருந்தாவனத்தின் மூலை முடுக்கிலெல்லாம் தேடிபார்த்துவிட்டார்; பல புத்தகங்களை புரட்டிப்பார்த்துவிட்டார்; வ்ரஜவாசிகளின் இல்லங்களில் கூட தேடிவிட்டார்; ஆனால் கோவிந்த தேவரை கண்டறிய முடியவில்லை. மஹாபிரபுவின் ஆசையை நிறைவேற்றமுடியாததால் மிகவும் வருத்தமடைந்தார் ஸ்ரீ ர...