Skip to main content

Posts

Showing posts with the label 02.Narada Maharshi / நாரத மகரிஷி(12M)

நாரத மகரிஷி

  நாரத மகரிஷி வழங்கியவர்கள் :- சுத்தபக்தி குழுவினர். 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஒரு காலத்தில் உபபர்ஹணா என்ற கந்தர்வர் ஒருவர் வாழ்ந்தார்.  அவர் ஒரு வைஷ்ணவ பக்தராவார்.  அவர் இசையில் தேர்ந்து விளங்கியதால் பகவானை போற்றிப் பாடுவதன் மூலம் சேவைகள் செய்து வந்தார்.  மேலும் உபபர்ஹணா பார்ப்பதற்கு மிக அழகாக விளங்கியதால் மற்ற கந்தர்வர்களின் மரியாதைக்கும் உரியவரானார். அதை அவர் மிக சந்தோஷமாக அனுபவித்தார்.  ஒருநாள் கந்தர்வர்களும் அப்சரஸ் களும் தேவர்களின்  சபைக்கு பிரஜாபதிகளால் அழைக்கப்பட்டிருந்தனர். பகவானின் மகிமைகளை போற்றிப்பாடுவதற்காகவும்,  நடனமாடவும் உபபர்ஹணா கேட்டுக்கொள்ளப்பட்டார். ஆனால் அங்கு குழுமியிருந்த சுவர்க்க லோக வாசிகளால் திசை திருப்பப்பட்ட உபபர்ஹணா அவர்களை சந்தோஷப்படுத்தும் பொருட்டு அவர்களைப் போற்றிப் பாட ஆரம்பித்தார்.  இதனால் ஆத்திரமும் கோபமும் அடைந்த பிரஜாபதிகள் தனது திறமையை துஷ்பிரயோகம் செய்த உபபர்ஹணாவை ஒரு சூத்திர குடும்பத்தில் பிறக்கும்படி சபித்தனர்.  இதனால் உபபர்ஹணா தனது அடுத்த பிறவியில் ஒரு வேலைக்காரியின் மகனாகப் பிறந்தார். அதிர்ஷ்டவசமாக அவனுடைய தா...