புருஷோத்தம விரதத்தை கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் ( வழங்கியவர் :- மஹாநிதி ஸ்வாமி ) ******************************************************************************** v உங்களுடைய சக்திக்கேற்ப சங்கல்பங்களை மேற்கொண்டு ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணரை திருப்தி படுத்த முயலுங்கள் . உங்களுடைய சக்தியை மீறிய சங்கல்பங்களை மேற்கொண்டு , மாதத்தின் பாதியில் விரதத்தை முறியடிப்பதை காட்டிலும் அது சிறந்தது . v மாதம் முழுவதும் பிரம்மச்சர்ய விரதம் கடைபிடிக்க வேண்டும் . தரையில் உறங்க வேண்டும் . v அதிகாலை பிரம்ம முஹுர்த்த நேரத்தில் எழுந்திரிக்க வேண்டும் . v ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தை ஜபிக்க வேண்டும் . ராதா கிருஷ்ணரின் ரூப மற்றும் குண லீலைகளை ஸ்மரணம் செய்ய வேண்டும் . கூடுதல் மாலைகள் ஜபம் செய்ய வேண்டும் . v தினமும் ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணருக்கு நெய் தீபம் ஏற்றி தீப ஆராதனை செய்ய வேண்டும் . v தினமும் துளசி மகாராணியை வலம்வர வேண்டும் . v ஆலயத்தை தினமும்...