Skip to main content

Posts

Showing posts with the label அத்தியாயம் 03

பகவத் கீதை மூன்றாவது அத்தியாயத்தின் மஹிமை

  கீதா மஹாத்மியம் பகவத் கீதை மூன்றாவது அத்தியாயத்தின் மஹிமை 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 பத்ம புராணத்திலிருந்து ஶ்ரீமத் பகவத் கீதையின் பெரும் சிறப்புக்கள் பற்றிய வர்ணனை 18 அத்யாயத்திற்கும் மிக விஷேசமாகவும் தெளிவாகவாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. அதை படித்து பயன்பெறுவோம். பகவத் கீதை மூன்றாவது அத்தியாயத்தின் மஹிமை பகவான் விஷ்ணு கூறினார், " எனதன்பு லட்சுமியே, ஜனஸ்தான் என்ற ஊரில் ஜடா என்ற கௌஷிக்க வம்சத்தில் பிறந்த பிராமணர் வாழ்ந்து வந்தார். அவர் பிராமணர்களுக்கு என்று சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட எந்த செயலையும் செய்யாமல் பல அதர்ம காரியங்களை செய்து வந்தார். மது அருந்துவது, சூதாடுவது, பெண்கள் மற்றும் மிருகங்களை வேட்டையாடுவது என அனைத்திலும் ஈடுபட்டு, தன் செல்வத்தை வீணாக்கினார். ஆகையால் வட நாட்டிற்கு சென்று செல்வம் ஈட்டி வரலாம் என்று எண்ணி அவ்வாறே செய்தார். சில காலம் கழித்து தான் ஈட்டிய செல்வத்துடன் ஜனஸ்தான் திரும்ப எண்ணினார். வெகு தூரம் பயணம் செய்ததால் மிகவும் களைப்படைந்த ஜடா சிறிது ஓய்வெடுக்க எண்ணினார். சூரியன் அஸ்தமிக்கும் வேளையில், பாலைவனம் போல் இருந்த அந்த இடத்திலிருந்த ஒரு மரத்தடியில் உறங...