Skip to main content

Posts

Showing posts with the label Alwar Stories / ஆழ்வார்கள் கதைகள் ( Story)

சொன்ன வண்ணம் செய்த பெருமாள்

  சொன்ன வண்ணம் செய்த பெருமாள் வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 திருமழிசையாழ்வாரின் சீடன் கணிக்கண்ணன். இவர், நாள்தோறும் தனக்கும் தன் குருவுக்கும் சேர்த்து உஞ்சவிருத்தி எடுத்துவந்து சேவை செய்தார். இவர்களின் ஆசிரமத்தை நாள்தோறும் தூய்மை செய்துவந்தார் ஒரு மூதாட்டி. அவரின் சேவையைக்கண்டு மனம் மகிழ்ந்த ஆழ்வார், 'தங்களுக்கு என்ன வேண்டும்' என்று மூதாட்டியிடம் கேட்டார். மூதாட்டியும், 'தங்களுக்கு மேலும் தொண்டு செய்ய எனக்கு நல்ல உடல் பலம் வேண்டும்' என்று வேண்டிக்கொண்டார். அடுத்த கணம் அவரின் முதுமை நீங்கி இளமை திரும்பியது. காஞ்சியை ஆண்ட பல்லவராயன் என்ற மன்னன் அப்பெண்ணின் அழகில் மயங்கி அவளை மணந்து கொண்டான். காலம் செல்லச் செல்ல மன்னன் இளமை குன்றி முதுமை பெறத்துவங்கினான். ஆனால் தன் மனைவி இளமை குன்றாமல் இருப்பதன் காரணத்தை அவளிடம் வினவினான். அவள் திருமழிசை ஆழ்வாரின் புகழை மன்னனுக்கு எடுத்துரைத்தாள். இந்த அற்புதத்தைக் கேள்விப்பட்ட மன்னன் கணிக்கண்ணனை அழைத்துவரச் சொன்னார். கணிக்கண்ணன் மீதும், ஆழ்வார் மீதும் பொறாமை கொண்டிருந்த சிலர், கணிக்கண்ணன் சொன்னால் ஆழ...