Skip to main content

Posts

Showing posts with the label Sri Garga Samhita / கர்க சம்ஹிதை கதைகள் ( Story)

தேவர்களின் பிரார்த்தனையும் கிருஷ்ணாவதாரமும்

  தேவர்களின் பிரார்த்தனையும் கிருஷ்ணாவதாரமும் ( ஆதாரம் - கர்க சம்ஹிதை )   🔆🔆🔆🔆🔆 முன்பு ஒரு சமயம் மிதிலாபுரியில் பஹுலாஸ்வன் (ஜனகர்) என்னும் பெயரில் பிரசித்தி பெற்ற ஒரு வீர மன்னன் அரசாண்டு வந்தான். அவர் ஸ்ரீ கிருஷ்ண பகவானின் பரம பக்தரும், அமைதியான மனதுடையவரும் ஆணவமற்றவரும் ஆவார். ஒருமுறை நாரத முனிவர் ஆகாய வழியே வந்து இவரது வீட்டில் இறங்கினார். அவர் வந்ததைக் கண்ட மன்னன் இருக்கையில் அமரச் செய்து, நன்கு பூஜை செய்த பின் இரு கைகளையும் கூப்பி அவரிடம் கேட்டார். முனிவரே, சாதுக்களைக் காப்பதற்காக பகவான் விஷ்ணுவின் அவதாரங்கள் எத்தனை வகையானவை? இதை எனக்கு கூறியருள வேண்டும். ஸ்ரீ நாரதர் கூறினார்: வியாசர் முதலான முனிவர்கள், அம்சாம்சம், அம்சம், கலை, பூரணம், பரிபூரணதமம் என்னும் ஆறுவகையான அவதாரங்களைக் கூறியுள்ளனர். இவற்றில் ஆறாவது பரிபூரணதமம் அவதாரம் சாக்ஷாத் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே ஆவார். பகவானுடைய அவதாரத்தை, சிறந்த வித்வான்கள் சாக்ஷாத் பரிபூர்ணதமம் என்று கூறுகிறார்கள். எந்த அவதாரத்தில் பூரணத்தின் முழு லக்ஷணங்களும் தென்படுகிறதோ, மனிதன் தன் தனித்தனி பாவனைக்கேற்ப தனக்கு மிகவும் பிரியமான உருவத்த...

யமுனைநதியின் பூலோக பயணம்

 யமுனைநதியின் பூலோக பயணம் ( ஆதாரம் - கர்க சம்ஹிதை ) 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 கோலோகத்திலிருக்கும் பகவான் கிருஷ்ணரின் கட்டளையின் பேரில், யமுனா தேவி, பகவானை தரிசித்து விட்டு பூமிக்கு புறப்பட தயாரானார். அப்போது ஆன்மீகமான வ்ரஜா நதியும் கங்கை நதியும் யமுனைக்குள் புகுந்து கொண்டன.  இந்த காரணத்தால் தான், யமுனை நதி சிறந்ததாகவும், பகவான் கிருஷ்ணரின் முதல் ராணியாகவும் கருதப்படுகிறது.  வ்ரஜா நதியின் ஓட்டத்தை உடைத்துக்கொண்டு, மிகுந்த சக்தியுடன் யமுனை நதி கோலோகத்தை கடந்தது. பல அண்டங்களை தாண்டி, கங்கை நதியின் நீரோட்டத்தையும் உடைத்துக்கொண்டு சீறிப்பாய்ந்து. பகவான் வாமன தேவரின் பாத விரலால், அண்டத்தின் மேல் ஏற்பட்டிருந்த ஓட்டையின் வழியாக நுழைந்து, துருவ  மஹாராஜருடைய உலகத்தின் (துருவ லோகத்தில் ) நுழைந்தது. அதன் பின்னர் பிரம்மலோகம் சென்று, அங்கிருந்து பல்வேறு லோகங்களுக்கு சென்று, ஒரு வழியாக சுமேரு பர்வதத்தை அடைந்தது. யமுனையின் சக்தி, சுமேரு பர்வதத்தின் பாறைகளை உடைத்து தள்ளியது. அந்த இடத்தில் யமுனை , கங்கை நதியை பிரிந்தது . கங்கை நதி அங்கிருந்து ஹிமாவதி பர்வதத்திற்கு சென்றது. அதே சமயம், யமு...

அரிஷ்டாசுரன்

  அரிஷ்டாசுரன் ஆதாரம் :- கர்க சம்ஹிதை 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஒருநாள் கோப பாலர்களிடையே பலசாலியான அரிஷ்டாசுரன் வந்தான் பூமியையும் ஆகாயத்தையும் எதிரொலிக்கச் செய்தான். கொம்புகளால் மலைத் தடவரைகளைப் பிளந்து கொண்டு வந்தான். அவனைக் கண்டதுமே கோப கோபியர் பயத்தால் இங்குமங்கும் ஓடலாயினர். அசுரர்களை அழிக்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் அவர்களுக்கு பயப்பட வேண்டாம் என்று கூறி அபயமளித்தான். மாதவன் அதன் கொம்புளைப் பிடித்து பின்னால் (இடித்துத்) தள்ளினான். அந்த அரக்கனும் ஸ்ரீ கிருஷ்ணனை இரண்டு யோஜனை தூரம்  தள்ளிவிட்டான் .கிருஷ்ணர் அவனுடைய வாலைப்பற்றி வாயு வேகத்தில் சுழற்றி, ஒரு குழந்தை கமண்டலுவை வீசி எறிவது போல பூமியில் அறைந்தார்.  அரிஷ்டாசுரன் மறுபடி எழுந்தான். கோபத்தால் அவன் கண்கள் சிவந்தன. அந்த மகா துஷ்ட வீரன் கொம்புகளால் சிவப்புப் பாறைகளை வேரோடு பெயர்த்து மேகத்தைப் போல கர்ஜித்தபடி ஸ்ரீ கிருஷ்ணனின் மீது விசினான். ஸ்ரீ கிருஷ்ணன் அந்தப் பாறையைப் பிடித்து திருப்பி அவன்மீதே அடித்தார். அந்த அடியில் அவன் சிறிது வியாகூலமடைந்தான். அவன் தன் கொம்புகளின் முன்பாகத்தால் பூமியை அடிக்க, அதனால் பூமியிலிருந்து நீர் ...

அகாசுரன் முற்பிறவி

  அகாசுரன் முற்பிறவி ஆதாரம் :- கர்க சம்ஹிதை 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஸ்ரீ நாரதர் கூறுகினார் 'அரசே ஒருநாள் ஆயர்ச் சிறுவருடன் கன்றுகளை மேய்த்தவாறு காளிந்தியின் கரையருகே ஒரு அழகான இடத்தில் ஸ்ரீ ஹரி குழந்தைகளுக்கு உரியதான விளையாட்டுகளை விளையாடிக் கொண்டிருந்தார். அச்சமயம் அகாசுரன் என்னும் பெரிய அசுரன்  தன் உருவத்தை (பாம்பு போல்) தரித்து பயங்கரமான வாயைத் திறந்து வைத்துக்கொண்டு வழியில் இருந்தான். தூரத்திலிருந்து ஏதோ மலை குகை என்று எண்ணும்படி காட்சியளித்தது. வ்ருந்தாவனத்தில் அதைக்கண்ட கோப பாலர்கள் கைதட்டியவாறு கன்றுகளோடு அதன் வாயினுள் புகுந்து விட்டனர். அவர்களனைவரின் பாதுகாப்பிற்க்காக பலராமருடன் ஶ்ரீ கிருஷ்ணரும் அகாசுரனது வாயில் புகுந்து விட்டார். சர்ப்பரூபம் தரித்த அந்த அசுரன் கன்றுகளையும் ஆயர்ச் சிறுவரையும் விழுங்கிவிட தேவர்களிடையே ஹாஹாகாரம் (உரத்த கோலாஹல ஒலி) எழுந்தது. அசுரர்கள் மகிழ்ச்சியுற்றனர். அச்சமயம் ஸ்ரீ கிருஷ்ணன் அகாசுரன் வயிற்றில் தனது விராட் ஸ்வரூபத்தைப் பெருக்கலானார். இதனால் அகாசுரன் ப்ராணன் தடுக்கப்பட்டு, அதன் தலையைப் பிளந்து கொண்டு வெளியேறியது. மிதிலை மன்னா, பின் பாலகர்களுடனும...

காளியன் யமுனை நதியில் வசிக்க காரணம்

  காளியன் யமுனை நதியில் வசிக்க காரணம் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 பஹுலாஸ்வ மன்னன் கேட்டான், 'ரமணகத் தீவில் வாழ்ந்த மற்ற பாம்புகளை விட்டு விட்டு காளிய நாகத்திற்கு மட்டும் கருடனிடம் பயம் உண்டானது ஏன்? இந்த விஷயத்தைக் கூறுங்கள் ஸ்ரீ நாரதர் கூறினார் : மன்னா ! நாகங்களை அழிப்பவரான கருடன் ரமணகத் தீவிற்கு ஒவ்வொரு நாளும் சென்று ஏராளமான பாம்புகளை அழித்து வந்தார். அதனால் பயமும் கவலையுமடைந்த அங்கிருந்த நாகங்கள் ஒருநாள் கருடனிடம் இவ்வாறு கூறின." 'கருடனே, உனக்கு வணக்கம். நீ சாக்ஷாத் பகவான் விஷ்ணுவின் வாஹனமாவீர். இவ்விதம் நீங்கள் சர்ப்பங்களைச் சாப்பிட்டுக்கொண்டே இருப்பீர்களானால் எங்கள் வாழ்விற்குப் பாதுகாப்பு ஏது? ஆகவே ஒவ்வொரு மாதமும் ஒருமுறை ஒவ்வொரு வீட்டிலிருந்து ஒரு சர்ப்பத்தை பலியாக ஏற்றுக் கொள்ளுங்கள். அத்துடன் வனஸ்பதி அல்லது அமுதத்திற்கு நிகரான இனிப்பு அன்னமும் உங்களுக்கு அளிக்கப்படும். அவற்றை முறைப்படி நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். கருடன் கூறினார்: 'நீங்கள் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு பாம்பை பலியாக ஒவ்வொரு நாளும் அளித்து வாருங்கள். பாம்பைத் தவிர நான் வேறு எந்த ப...

கோபீ சந்தனத்தின் மகிமை

 கோபீ சந்தனத்தின் மகிமை ஆதாரம் - ஶ்ரீ கர்க ஸம்ஹிதை / ஆறாம் காண்டம் / அத்தியாயம் 15  🍁🍁🍁🍁🍁🍁🍁 நாரத முனிவர், பஹூலாஸ்வ மன்னரிடம் கூறினார் .  மன்னா! இனி கோபீபூமியின் மகிமையைக் கேள். இது பாவம் போக்கும் உத்தமமான தீர்த்தமாகும். அதைக் காதால் கேட்ட மாத்திரத்தில் கர்ம பந்தனத்திலிருந்து விடுதலை கிடைத்துவிடுகிறது கோபிகள் அங்கு வாசம் செய்த காரணத்தாலேயே அந்த இடம் கோபி பூமி என்னும் பெயரில் பிரபலமாகி உள்ளது. அங்கு கோபிகளுடைய அங்கப் பூச்சினால் தோன்றிய உத்தமமான கோபிசந்தனம் கிடைக்கிறது. தன் அங்கத்தில் கோபி சந்தனம் தரிப்பவனுக்கு கங்கையில் நீராடிய பலன் கிடைக்கிறது எப்போதும் கோபி சந்தனத்தால் அடையாளமிடப்பட்டவன், அதாவது கோபி சந்தனமுத்திரை திலகமணிபவன் ஒவ்வொரு நாளும் மஹா நதியில் நீராடிய புண்ய பலனை அடைகிறான் அவன் ஆயிரம் அச்வமேதமும் நூறு ராஜசூய யாகமும் செய்தவனாகிறான் எல்லா தீர்த்தங்களின் சேவையும் தான-விரதங்களின் அனுஷ்டானமும் செய்தவனாகிறான். நிச்சயம் அவன் கோபிசந்தனம் தரித்ததினால் மட்டுமே தன்யனாகி விடுகிறான். கங்கையின் மண்ணைக்காட்டிலும் இருமடங்கு புண்ணியம் சித்ரகூட மண்ணுக்கு உண்டு என்று கருதப்பட...