Skip to main content

Posts

Showing posts with the label Jaya Ekadasi / ஜெயா ஏகாதசி

ஜெயா ஏகாதசி / பைமி ஏகாதசி

  ஜெயா ஏகாதசி 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 மாசி மாத வளர்ப்பிறையில் (ஜனவரி/ பிப்ரவரி) தோன்றக்கூடிய ஜெயா ஏகாதசி அல்லது பைமி ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பவிஸ்யோத்தர புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரருக்கு இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது.  ஒரு முறை யுதிஸ்டிரர், பகவான் கிருஷ்ணரிடம் கேட்டார். ஓ! பகவான் கிருஷ்ணரே, ஓ! முழுமுதற் கடவுளே, ஓ! ஜகத்தின் நாதரே, கிருஷ்ணரே, வியர்வையில் தோன்றுவன, விதைகளில் தோன்றுவன, முட்டைகளில் தோன்றுவன, கருவில் தோன்றுவன போன்ற நான்கு விதமான ஜீவராசிகளின் மூல காரணம் நீரே. அனைத்தையும் சிருஷ்டித்து, காத்து பிறகு அழிப்பவரும் நீரே. மாசி மாத வளர்பிறையில் (ஜனவரி / பிப்ரவரி) தோன்றக்கூடிய ஏகாதசியின் பெருமைகளைப் பற்றியும், அதனை அனுஷ்டிக்கும் வழிமுறையைப் பற்றியும் மற்றும் இந்த மங்களகரமான நாளில் வழிபடத்தக்க தெய்வத்தை பற்றியும் தயவு செய்து எனக்கு விவரமாக கூறுங்கள். பகவான் கிருஷ்ணர், கூறினார் ஓ! மன்னர்களில் சிறந்தோனே, யுதிஸ்ஸ்டிரா, மாசி மாத வளர்பிறையில் தோனறக்கூடிய ஏகாதசி ஜெயா ஏகாதசி என கொண்டாடப்படுகிறது. இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பதால் ஒருவரின் அனைத்து ...