பானிஹாட்டி சிடா-தஹி திருவிழா ( ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம், அந்திய லீலை, அத்யாயம் 6 / மொழிபெயர்ப்பு ) 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் முக்கிய சீடர்களில் ஒருவராகவும் விருந்தாவனத்தின் ஆறு கோஸ்வாமிகளில் ஒருவராகவும் விளங்குபவர் ரகுநாத தாஸ கோஸ்வாமி அவர்கள். மிகப்பெரிய செல்வந்த குடும்பத்தைச் சார்ந்த அவர், பகவத் பக்தியினால் ஆட்கொள்ளப்பட்டு, ஸ்ரீ சைதன்யரிடம் சரணடைய முனைந்தார். பல முறை வீட்டை விட்டு ஓடியபோதிலும், அவரது தந்தை தனது ஆட்களைக் கொண்டு அவரை மீண்டும்மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தார். அச்சூழ்நிலையில், பானிஹாட்டி எனப்படும் இடத்தில், ஸ்ரீ நித்யானந்த பிரபுவின் கட்டளைப்படி, ரகுநாதர் தயிரையும் அவலையும் கொண்டு ஒரு வித்தியாசமான விருந்திற்கு ஏற்பாடு செய்தார். ரகுநாதரின் மீது திருப்தியுற்று நித்யானந்தர் கருணையைப் பொழிய, அக்கருணையினால் குறுகிய காலத்திலேயே ரகுநாதரால் ஸ்ரீ சைதன்யருடன் இணைய முடிந்தது. ரகுநாதர் ஸ்ரீ நித்யானந்த பிரபுவின் கருணையினால் ஸ்ரீ சைதன்யரை அடைந்தார் என்பதை நினைவுகொள் வதற்காகவும் நாமும் அக்கருணையின் சிறு துளியைப் பருகுவதற்காக...