Skip to main content

Posts

Showing posts with the label Srimati Radharani / ஶ்ரீமதி ராதா ராணியின் லீலை (Story)

சித்ரா சகி (தோழி)

  ஸ்ரீமதி ராதாராணியின் மிகவும் நெருங்கிய தோழிகளில் இவரும் ஒருவர். பிருந்தாவனத்தின் ராணியான ஸ்ரீராதைக்கு சகி (தோழி), ப்ரிய-சகி (அன்புத் தோழி), பரமப்ரேஸ்ட/வரிஷ்ட சகி (நெருங்கிய), ப்ராண சகி (உயிர்த்தோழி) மற்றும் நித்திய சகி (பிரியா தோழி) என்று 5 வகையான சகிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. உஜ்வல நீலமணி (4.50) ராதாராணியை விட இவர் 26 நாட்கள் பெரியவர். குங்குமம் போன்ற சிவப்பு நிறத்தை உடையவர். ஸ்படிக நிற ஆடைகளை விரும்பி அணிகிறார். கவிதைகள் மற்றும் சாஸ்திரங்களில் உள்ள சூக்ஷ்மமான அர்த்தங்களை புரிந்துகொள்வதில் இவர் மிகவும் சாமர்த்தியம் உள்ளவர். மிகவும் சாந்த குணம் கொண்டவர். சமையற் கலையில் நல்ல அனுபவம் மிக்கவர். பலவிதமான அமுத பானங்களை தயாரித்து திவ்ய ஜோடிகளுக்கு பரிமாறுவார். மேலும் பதார்த்தங்களை கண்ணால் கண்ட மாத்திரத்தில், அதன் மூலப்பொருட்களையும் தரத்தையும் கூறிவிடுவார். கிராம்பு மற்றும் மலர் மாலைகளைக் கொண்டு வரும் சேவையில் மிகவும் அர்ப்பணிப்புடன் இருக்கிறார். தன் தந்தையைப் போலவே வானியல், ஜோதிடம் மற்றும் தோட்டக் கலை ஆகியவற்றை கற்றுத் தேர்ந்தவர். காதலரின் சண்டையில் சமரசம் செய்வதில் திறமையானவர். பக...

துங்கவித்யா தேவி

  துங்கவித்யா தேவி ஸ்ரீமதி ராதாராணியின் மிகவும் நெருங்கிய தோழிகள் பல ஆயிரம் கோபியர்களில் பதினாறாயிரம் பேர் முதன்மையானவர்கள் என்றும், அவர்களில் 108 கோபியர்கள் மிக நெருக்கமானவர்கள் என்றும், 8 பேர் இன்னும் முக்கியமானவர்கள் என்றும் புராணங்கள் கூறுகின்றன. ஸ்ரீராதையும் சந்திராவல்லியும் அவர்களில் மிகவும் முக்கியமானவர்கள். ஸ்ரீராதையோ அனைவரிலும் மிகவும் முக்கியமானவர். ஏனென்றால், பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை கவரும் அத்தனை வசீகரமும், இனிமையும் ஸ்ரீ ராதைக்கு மட்டுமே உண்டு. ஸ்ரீ ராதாராணியை விட துங்கவித்யா தேவி 15 நாட்கள் இளையவர். துங்கவித்யா தேவி குங்கும நிறத்தையும், கற்பூரம் கலந்த சந்தன நறுமணத்தையும் உடையவர். மேலும் வெண்மை நிற ஆடைகளை அவர் மிகவும் விரும்பி அணிகிறார். துங்கவித்யா தேவி கொஞ்சம் முன்-கோபம் கொள்ளும் குணம் உடையவர். ரச-சாஸ்திரம், நிதி- சாஸ்திரம், நடனம், நாடகம், இலக்கியம் மற்றும் 18 புராணங்களையும் கற்றுத் தேர்ந்தவர். பாடுவதிலும் வீணை வாசிப்பதிலும், அதை பிறருக்கு கற்றுத்தருவதிலும் துங்கவித்யா தேவி மிகவும் நிபுணத்துவம் கொண்டவளாவர். தன்னுடைய இசையினால் ஶ்ரீ ராதா கிருஷ்ண திவ்ய தம்பதிகளை மகிழ்விப்ப...

ஶ்ரீ கிருஷ்ணர் , ஸ்ரீமதி ராதாராணியின் உயர்ந்த நிலையை நிரூபித்தல்.

  ஶ்ரீ கிருஷ்ணர் , ஸ்ரீமதி ராதாராணியின் உயர்ந்த நிலையை நிரூபித்தல். 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 இந்த லீலையானது ஸ்ரீமதி ராதாராணியின் பெளகண்ட பருவத்தின் முடிவில் நடைபெற்றதாகும். ஒருமுறை ராதா ராணியின் அன்பால் பிடிக்கப்பட்ட கிருஷ்ணர் அவரிடம், " அனைத்து வழிபாடுகளின் சாரம் உன்னை வணங்குவதுதான்." யாரேனும் உன்னை வழிபடாமல் என்னை மட்டும் வழிபட்டால் அவர் பயனேதும் அடையப் போவது இல்லை. நீ என்னுடைய "மஹாபாவ மயி" - எனது ஆனந்தத்தின் ஆற்றல் நீ. என்னை சந்தோசப்படுத்துவதன் மூலம் நீ சந்தோசமடைகின்றாய். எனது ஆனந்தமே உனது ஆனந்தம். உன் சொந்த இன்பத்திற்கான ஆசையை முற்றிலும் விலக்கி விட்டாய். எனது சங்கம் மற்றும் எனது சேவையில் நிலைத்து இருப்பதை தவிர நீ எதையும் என்னிடம் எதிர்பார்க்கவில்லை. யார் உனது இத்தகைய வழிபாட்டு முறையை பின்பற்றுகிறாரோ, அவர் எனக்கு மிகவும் பிரியமானவர். நான் அவர்களை யோகிகள் மற்றும் தபஸ்விகளை விட மேலானவர்களாக பாவிகின்றேன். உன்னுடைய கருணா கடாக்க்ஷம் இல்லாமல் யாரும் என்னை அடைய முடியாது. தூய பக்தி சேவையினால் மட்டுமே என்னை அடைய முடியும். உன்னுடைய செயல்கள் அனைத்தும் தூய பக்தி...

ராதாஷ்டமி( ஶ்ரீமதி ராதாராணி அவதரித்த சுபதினம்)

  ஸ்ரீமதி ராதாராணி, பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் நித்யமான துணைவியும், கிருஷ்ணரின் ஆனந்தமையமான அந்தரங்க சக்தியும், மிக மிகச்சிறந்த தூய பக்தையுமாவார். ஸ்ரீமதி ராதாராணி அதிர்ஷ்ட தேவதைகள் அனைவருக்கும் தலைமையானவரும், லட்சுமி தேவியின் மூலமாவார். ஶ்ரீமதி ராதாராணி அவதரித்த விதம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ராதாராணி அவதரித்த விதம் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் கூறப்பட்டுள்ளது. பகவான் ஸ்ரீகிருஷ்ணர் இம்மண்ணுலகில் அவதரித்த பின் ஸ்ரீமதி ராதாராணியும் இம்மண்ணுலகில் அவதரிக்க விரும்பினார். அதன்படி ஒரு தெய்வீக லீலை அரங்கேறியது. அதாவது ஒருசமயம் இமயமலையின் மகளாக பார்வதி தேவி பிறந்தார். பிறகு பார்வதி தேவிக்கும், சிவபெருமானுக்கும் திருமணம் நடந்தது. இத்திருமணத்திற்கு தேவாதிதேவர்களும், முனிவர்களும் பங்கேற்றனர். இவர்களுடன் விந்தியமலையும் வந்திருந்தது. கோலாகலமாக நடந்த விழாவை கண்ணுற்ற விந்தியமலை மிகவும் ஆச்சர்யப்பட்டது. அத்துடன் மிகவும் போற்றுதற்குரியசிவபெருமானே, இமயமலையின் மருமகனாக வந்திருக்கிறார் என்றும் வியந்தது. உடனேதனக்கும் அது போல் சிறந்த ஒரு மகாபுருஷர், மருமகனாக வர வேண்டும் என்று விந்தியமலை ஆசைப்பட்டது. இந்த ஆசை நிறைவே...

ஸ்ரீமதி ராதாராணியின் தோற்றம்

ஸ்ரீமதி ராதாராணியின் தோற்றம் பற்றி பல்வேறு கல்பங்களில் நிகழ்ந்த பல்வேறு வர்ணனைகள் உள்ளன. அவற்றுள் சிலவற்றை காண்போம். 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 வர்ணனை 1 :  🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 (ஸ்ரீ ரூபா கோஸ்வாமியால் "ஸ்ரீ லலிதா மாதவா" வில் வர்ணிக்கப்பட்டுள்ளது) ஒருமுறை விந்திய பர்வதம் இமாலய பர்வதத்தை கண்டு பொறாமை கொண்டது. தனது மகளான பார்வதிக்கு சாக்ஷத் மகாதேவரான சிவபெருமானே கணவராக கொண்ட இமாலய பர்வதம், இதன் மூலம் சிவபெருமானை மருமகனாக அடைந்தது தான் இந்த பொறாமைக்கு காரணம். ஆகையால் தனக்கு சிவபெருமானையே தோற்கடிக்க கூடிய ஒருவர் தான் மருமகனாக வேறவேண்டும் என்று எண்ணிய விந்திய பர்வதம் இதற்காக, பிரம்மதேவரை பிரார்த்தனை செய்து கடும் தவம் இருந்தது. மனமகிழ்ந்த பிரம்மதேவரும், விந்திய பர்வதத்திடம் தனக்கு வேண்டும் வரத்தை கேட்க சொன்னார். விந்திய பர்வதம், "பிரம்மதேவரே! சிவபெருமானை தோற்கடிக்கக்கூடிய ஒருவரை கரம் பிடிக்கும் ஒரு புதல்வி எனக்கு வேண்டும்" என்றது. பிரம்மதேவரும் யோசிக்காமல் "ததாஸ்து" என்று கூறி சென்றுவிட்டார். ஆனால் சிறிது நேரம் கழித்து தான் அளித்த வரம் சாத்தியமற்றது என்பதை உணர்ந்த பிரம்மதேவர் ...