Skip to main content

ஜாக்கிரதையாக இருங்கள் ! ஜாக்கிரதையாக இருங்கள் !



வடநாட்டில் காசிக்குச் செல்லும் வழியில ஹரிஜன் ஒருவன் வசித்து வந்தான் அவன் திருமணமாகி நெடு நாளாகியும் குழந்தை இல்லாமல் இருந்தான். ஒரு பெரியவரிடம் தன் குறையைக் கூறினான். அவர் தர்மம் செய்தால் அதன் பயனாக குழந்தை உண்டாகும் என தேற்றினார். எந்த முறையில் தர்மம் செய்ய வேண்டுமென்று கேட்டான். அக்காலம் கோடை காலம். அதனால் அவ் வழியாக காசிக்குப் போகும் ஓர் அந்தணனுக்கு ஒரு குடை ஒரு மிதியடி ஒரு விசிறி இம் மூன்றையும் தானமாகக் கொடுத்தால் அவர்களுடைய ஆசியால் உனக்கு குழந்தை உண்டாகும் என்றார். 


 தான் ஒரு தாழ்த்தப்பட்டவன் ஆதலால் அந்தணனுக்கு எவ்வாறு தானம் செய்ய முடியும் என சிந்தித்தான் ஒரு குடை ஒரு மிதியடி ஒரு விசிறி இம் மூன்றையும் தயாரித்து எதிரிலுள்ள மரத்தடியில் வைத்து விட்டு தேவைப்படுவோர் எடுத்துக் கொள்ளுங்கள் என்று எழுதி வைத்துவிட்டு தன் தொழிலில் ஈடுபட்டான். 


அந்தணர் ஒருவர் தன் இறுதிக் காலம் நெருங்குவதற்குள் காசிக்குச் சென்று வர வேண்டுமென்ற வைராக்கியத்தோடு கால்நடையாகப் புறப்பட்டார். அது கோடைக்காலம் வெயில்  வெப்பத்தால் துன்பத்திற்கு ஆளானார் . சிறு தூரத்தில் தான் சென்று கொண்டிருந்த வழியில் ஒரு மரத்தடியில் வைத்திருந்த குடை, செருப்பு, விசிறி இம்மூன்றையும் கண்டார் அதை மகிழ்ச்சியோடு எடுத்துக் கொண்டு அம் மூன்றையும் வைத்தவனை வாழ்த்திக் கொண்டே சென்றார் காசிக்குச் சென்று திரும்பி வரும் வழியில் உயிர் துறந்த அந்த அந்தணர் மூன்று பொருட்களையும் தான்ப செய்தவன் வீட்டில் மகனாகப் பிறந்தார். தனக்கு மகப்பேறு உண்டானது கண்டு மகிழ்ந்தான் குழந்தை பிறந்து பேச ஆரம்பிக்கும் பருவத்தில் யாரிடமும் பேசாமல் மௌனமாக இருந்தது அது கண்டு பெற்றோர்கள் கவலைப் பட்டனர். குழந்தை வளர்ந்து பதினாறு வயது அடைந்தது.


இவர்கள் வாழ்ந்த ஊரில் கள்வர்கள் பயம் அதிகமாக இருந்தது. மக்கள் அமைதியாக வாழ முடியவில்லை. அவ்வூர் அரசனிடம் சென்று அனைவரும் முறையிட்டனர். அரசன் நாள் தோறும் தினம் ஒருவராக ஊர் சுற்றி வந்து நான்கு ஜாமங்களும் பறை கொட்டி வரும்படி ஆணை பிறப்பித்தார். அவ்வாறே மக்களும் வீட்டிற்கு ஒருவராகப் பறை கொட்டி வந்தனர். ஒரு நாள் இந்த ஹரிஜனின் முறை வந்தது. அன்று அவன் முக்கியமாக வெளியில் செல்ல நேர்ந்தது. மனைவியிடம் ஊமை மகனை பறை அடிக்க அனுப்பும் படிச் சொல்லி விட்டுச் சென்றான். அன்றிரவு தாய் மகனை அழைத்தாள் அவன் கையில் பறையைக் கொடுத்து நான்கு சாமத்திற்கு அடிக்கும் படி ஜாடை காட்டினாள். ஊமைச் சிறுவன் பறையை எடுத்துக் கொண்டு குறிப்பிட்ட இடத்திலிருந்து அடித்துக் கொண்டே சென்றான் பிறந்தது முதல் பதினாறு வயது வரையிலும் பேசாமல் இருந்தவன் முதல் ஜாமம் முடிந்த்தும் பறையை நிறுத்தி சமஸ்கிருத மொழியில் ஒரு ஸ்லோகத்தைச் சொன்னான், அந்நாட்டு அரசன் அதைக் கூர்ந்து கேட்டார். இவ்வாறு சிறுவன் நான்கு ஜாமங்களுக்கும் பறை கொட்டி நான்கு ஸ்லோகங்கள் சொல்லி முடித்தான் பொழுது புலர்ந்தது. வீட்டிற்குச் சென்றான். பறையை வைத்தான் பழைய படி மௌனமாயிருந்தான் 



அன்றிரவு முழுவதும் விழித்திருந்து அச்ஸ்லோகங்களைக் கேட்ட அரசன் அவைகளின் பொருளை ஆராய ஆவல் கொண்டான். விடிந்ததும் வீட்டிற்கு வந்த அந்த  ஹரிஜன் தன் மகன் தனது கடமையை ஒழுங்காக செய்தானா என்று மனைவியிடம் கேட்டு ஒழுங்காக செய்தான் என்றதும் மகிழ்ச்சி அடைந்தான்


அரசனும் காலையில் அரசவைக்கு வந்தார் மந்திரியிடம் நேற்றிரவு பறை கொட்டியவனை அழைத்து வரும்படி ஆணையிட்டார். அவர்கள் சேவகர்களுக்குக் கட்டளையிட்டனர் அவர்கள் ஹரிஜனனை அழைத்து அரசர் முன் நிறுத்தினர். அவன் அரசரைக் கண்டு நடுக்கமடைந்தான், அரசன் அவனை ஆசனத்தில் அமரச் செய்து நேற்றிரவு பறை கொட்டும் போது நான்கு ஜாமத்திற்கும் நான்கு ஸ்லோகங்கள் சொன்னீர்களே அதன் பொருள் என்ன? என ஆவலுடன் கேட்டக, அவன் வியப்புடன் அரசே நேற்றிரவு பறை கொட்டியவன் என் மகன் அவன் பேச மாட்டான் ஊமையன் என்றான் உடனே அரசன் அச்சிறுவனை அழைத்து வரும் படிச் சொல்லச் சேவகர்கள் அவனை அழைத்து வந்தனர் அரசனது மனம் பக்குவம் பெற்றிருந்தது. ஹரிஜனனின் மகனைக் கண்ட அரசன் தம் சிம்மாசனம் விட்டிறங்கினார் அச்சிறுவனை எதிர் கொண்டு அழைத்தார் ஆசனத்தில் அமரும் படி பணிவுடன் சொன்னார். இக் காட்சியைக் கண்ட அனைவரும் பிரமித்தனர். அரசர் சிறுவனை உணர்ந்தார். அவனது உள்ளக் கிடத்தையை அறிய ஆவல் கொண்டு நேற்றிரவு நான்கு ஜாமங்களிலும் சொன்ன ஸ்லோகங்களின் பொருளை விளக்கும் படி வேண்டினான்.


சிறுவன் முதல் ஸ்லோகத்தைச் சொல்லி விளக்கவும் செய்தான்


“காம, குரோதச்ச லோபச்ச தேஹே நிஷ்டந்தி தஸ்கரா

ஞான ரத்தாப ஹாராய் தஸ்மாத் ஜாக்ரத ஜாக்ரதா!”


இந்த உடம்பில் மதிப்பிட முடியாத ரத்தினத்தை விட உயர்ந்த ஞானம் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன காமம் குரோதம் லோபம் ஆகிய திருடர்கள் ஞானமாகிய ரத்தினத்தை அபகரிக்கும் பொருட்டு சரீரத்தில் வசிககிறாரகள் ஆகையால் எச்சரிக்கையாக இருங்கள்.எச்சரிக்கையாக இருங்கள் ! என்றான் சிறுவன்.


மகிழ்ச்சி அடைந்த அரசர் இரண்டாவது ஸ்லோகத்திற்கு பொருள் கேட்டார். சிறுவன் இரண்டாம். ஸ்லோகம் சொல்லி பொருள் கூறினன்.


'ஜன்மதுக்கம் ஜராதுக்கம் ஜாயாதுக்கம் புந புந:

சம்ஸார-ஸாகரதுக்கம் தஸ்மாத் ஜாக்ரதா: ஜாக்ரதா!”


பிறத்தல் மிகவும் துன்பம். பிறவியின் இறுதியில் வரும் முதுமை பருவம் பெருந்துன்பம். இடையில் இருக்கும் வாலிப காலங்களில் இனக்கவர்ச்சி மோகத்தால் உண்டாகும் துன்பங்கள் மிகப் பெரியதாகும். ஜனன மரண சம்சாரமாகிய சமுத்திரத்தில் படும் துயரம் மிகப்பெரியது. ஆகையால் ஆன்மாக்களே ஜாக்கிரதையாக இருங்கள் ! ஜாக்கிரதையாக இருங்கள் ! 


இரண்டாம் ஸ்லோகத்தின் மூலம் சம்சார சாகரம் தீராத துக்கம் என்றும் இதனின்று விலக அறிவு தனித்திருக்க வேண்டும் என்றும் தெளிந்தார் அரசர் சிறுவன் சொன்ன மொழிகளைக் உபதேசமாகக் கொண்டு வாழ்நாளில் அடைய வேண்டிய மெய்ப் பொருளை அடைய ஆவல் கொண்டு அடுத்த ஸ்லோகத்தின் பொருளைக் கூறும் படி வேண்டினார்.


'மாதா நாஸ்தி பிதா நாஸ்தி பந்து ஸஹோதரா 

அர்தம் நாஸ்தி க்ருஹம் நாஸ்தி தஸ்மாத் ஜாக்ரதா ஜாகரதா!”


ஈன்று வளர்த்த அன்னையும் தந்தையும் நிலை இல்லாதது. இவையன்றி தனக்குரிமை என்றெண்ணும் பொருள்களும் நிலை இல்லாதது தனக்குச் சொந்தம் என்றெண்ணும் வீடு முதலியவைகளும் நிலை இல்லாதது ஆகையால் எச்சரிக்கையாய் இருங்கள் எச்சரிக்கையாய் இருங்கள்.


அரசன் சிறுவன் சொன்ன அறிவுரைகளைக் கேட்டு ஆனந்தம் அடைந்தார். நான்காம் ஸ்லோகத்தின் பொருளைக் கூறும் படி வேண்டினார் அரசர், அவ்வாறே சிறுவன் கூறினன்.


ஆயசா பத்தே லோகே கர்மணா பஹு சிந்தையா ஆயுக்ஷணம் நஜாநாதி தஸ்மாத் ஜாக்ரதா ஜாக்ரதா


இந்த உலகில் மனிதர்கள் பலவித சிந்தைகளாகிய கர்ம சம்பந்தமான ஆசைகளினாலே கட்டுப்பட்டுள்ளார்கள். இதனால் தனது ஆயுள் நாளுக்கு நாள் குறைந்து வருவதை அறிவதில்லை. ஆகையினால் எச்சரிக்கையாய் இருங்கள் எச்சரிக்கையாய் இருங்கள் கர்மாவை வெல்ல முயலுங்கள்.


சிறுவனின் ஞான உரைகளைக் கேட்ட மன்னர் மிக வியந்தார். சிறுவனின் தந்தையை அழைத்து உன் மகன் ஊமையன் அல்லன். பெரிய ஞானி. நான் அவன் ஞான மொழிகளைக் கேட்கும் பேற்றைப் பெற்றேன் என்று ஆனந்தமடைந்தார்.


நம்முள் இருக்கும் திருடர்களை கவனிக்காமல் வெளியே இடுக்கும் திருட்டுகளைப் பற்றி கவலைப்பட்டு காலத்தை வீணாகக் கழிக்கின்றோம் என்பதை இக்கதையை உணர்ந்தால் தெரிந்து கொள்ளலாம்.


Comments

  1. Please add reference thanks for sharing

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...