ஏதஸ்மின்
ஸம்ஸாராத்வனி நானா - க்லேஸோபஸர்க - பாதித ஆபன்ன - விபன்னோ யத்ர யஸ் தம்
உ ஹ வாவேதரஸ் தத்ர
விஸ்ருஜ்ய ஜாதம் உபாதயா ஸோசன் முஹ்யன் பிப்யத் - விவதன் க்ரந்தன் ஸம்ஹ்ருஷ்யன் காயன் நஹ்யமான ஸாது - வர்ஜிதோ நைவாவர்ததே (அ)த்யாபி யத
ஆரம்த ஏஷ நர - லோக
- ஸார்தோ யம் அத்வன பாரம்
உபதிஸந்தி.
மொழிபெயர்ப்பு
பௌதீக
உலகின் பாதையானது பௌதீகத்துன்பங்கள் நிறைந்ததாகும். மேலும் பல்வேறு துன்பங்கள் பந்தப்பட்ட ஆத்மாவை இடையூறு செய்கின்றன. சிலசமயம் அவன் நஷ்டமடைகிறான். சிலசமயம்
இலாபமடைகிறான். இரண்டிலும், பாதை முழுவதும் ஆபத்தே
நிறைந்திருக்கிறது. சிலசமயம் பந்தப்பட்ட ஆத்மா மரணம் அல்லது வேறு வழியில் தன்
தந்தையிடமிருந்து பிரிக்கப்படுக்கிறான். அவரை விட்டு வந்தவுடன்
அவன் படிப்படியாக தன் குழந்தைகள் போன்ற
பிறரிடம் பற்றுடையவானகிறான். இவ்வாறு பந்தப்பட்ட ஆத்மா சிலசமயம் மோகத்திற்கும் அச்சத்திற்கும் ஆளாகிறான். சிலசமயம் அவன் அச்சங்கொண்டு கூக்குரலிட்டு
அழுகிறான். சிலசமயம் தன் குடும்பத்தைக் காப்பதினால்
மகிழ்ச்சியடைகிறான். இம்மகிழ்ச்சி அதிகரிக்கும் பொழுது சிலசமயம் இனிமையாகப் பாடுகிறான். இவ்வாறு காலாகாலமாக முழுமுதற் கடவுளுடன் தனக்கிருந்த உறவினை மறந்து சிக்கிக் கொள்கிறான். இவ்வாறு அவன் ஆபத்து நிறைந்த
பௌதீக வாழ்க்கைப் பாதையில் பயணம் செய்கிறான். இப்பாதையிலும் அவன் மகிழ்ச்சியுடன் இருப்பதில்லை.
ஆபத்து நிறைந்த பௌதீக வாழ்க்கைப் பாதையிலிருந்து வெளிவர உணர்வு பெற்றோர் முழுமுதற் கடவுளைச் சரணடைய வேண்டும். பக்தித் தொண்டுப் பிடியிலிருந்து மீளமுடியாது. இதன் முடிவு பௌதீக
வாழ்க்கையில் ஒருவன் கூட மகிழ்ச்சியாக இருக்க
முடியாது என்பதேயாகும். ஒருவன் கிருஷ்ண உணர்விற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும்.
பொருளுரை
பௌதீக
வாழ்க்கை முறையை நன்கு ஆராய்ந்த பிறகு ஒரு புத்திசுவாதீனமுடையவன் இவ்வுலகில் துளியளவு
இன்பம் கூட இல்லை என்பதைப்
புரிந்து கொள்வான். ஆயினும் காலாகாலமாக இந்த ஆபத்தானப் பாதையில்
பயணம் செய்வதினாலும், தெய்வீக மகான்களிடம் தொடர்பு கொள்ளாததினாலும் பந்தப்பட்ட ஆத்மா மாயையினால் இப்பௌதீக உலகினை அனுபவித்து மகிழ விரும்புகிறான். ஆயினும்
பந்தப்ட்ட ஆத்மா ஜட இயற்கையினால் நித்தியமாகத்
தண்டிக்கப்படுகிறான். அதனால்தான் “தண்ட்ய ஜனே ராஜா யேன
நதீதே சுபாய”
(சை.ச. மத்ய 20.118) என்று
கூறப்படுகிறது. பௌதீக வாழ்க்கை என்பதற்குப் பொருள் தொடர்ந்து துக்கித்தல் என்பதாகும் ஆயினும் சிலசமயம் இடைவெளிகளில் தோன்றும் மகிழ்ச்சியை நாம் ஏற்றுக் கொள்கிறோம்.
சிலசமயம் நிந்திக்கப்பட்ட ஒருவன், தண்ணீரினுள் அமிழ்த்தப்பட்டு வெளியேற்றப்படுகிறான். உண்மையில் இது கூட தண்டனைதான்
ஆயினும் அவன் தண்ணீரிலிருந்து வெளியேற்றப்பட்டவுடன்
சிறிது சுகத்தினை அனுபவிக்கிறான். பந்தப்பட்ட ஆத்மாவின் நிலை இதுவேயாகும். அதனால்தான்
அனைத்துச் சாத்திரங்களும் ஒருவன் பக்தர்களுடனும், தெய்வீக மகான்களுடனும் தொடர்பு கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்துகின்றன.
‘ஸாது
- ஸங்க’, ‘ஸாது
- ஸங்க’ ஸர்வ
- ஸாஸ்த்ரே கய
லவ
- மாத்ர ஸாது - ஸங்கே ஸர்வ - ஸித்தி ஹய
(சைச.
மத்ய 22.54)
பக்தர்களுடன்
கொள்ளும் ஒரு சிறிய தொடர்பினால்
கூடப் பந்தப்ப்டட ஆத்மாவினால் துன்பம் நிறைந்த பௌதீக நிலையிலிருந்து வெளியேற முடியும். இக்கிருஷ்ணபக்தி இயக்கம் அதனால்தான் ஒவ்வொருவனும் தெய்வீகமகான்களுடன் தொடர்பு கொள்வதற்கான, முயற்சியினை மேற்கொண்டிருக்கின்றது. ஆகையினால் கிருஷ்ண பக்தி இயக்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும், பந்தப்பட்ட ஆத்மாக்களுக்கு வாய்ப்பினை வழங்குவதற்காகத் தாங்களே நிறைவுடைய சாதுக்களாக இருத்தல் வேண்டும். இதுவே சிறந்த மனிதநலச் சேவையாகும்.
(ஸ்ரீமத்-பாகவதம் காண்டம் 5.14.38 / பொருளுரை வழங்கியவர்
ஶ்ரீல பிரபுபாதர் )
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment