பாரத - வர்ஷம் என்று அழைக்கப்படும் இந்தியாவில், பக்தித்தொண்டு செய்வதற்கு ஏராளமான வசதிகள் இருக்கின்றன. பாரத - வர்ஷத்தில் அனைத்து ஆச்சாரியர்களும் தங்கள் அனுபவங்களை அள்ளி வழங்கியிருக்கின்றனர். ஆன்மீக வாழ்வில் எவ்வாறு வளர்ச்சி பெறுவது, பகவானது பக்தித் தொண்டில் எவ்வாறு நிலைபெறுவது என்பதை பாரத - வர்ஷத்தில் உள்ள மக்களுக்கு உபதேசிப்பதற்காக ஸ்ரீ சைதன்ய மகாபிரபு தனிப்பட்ட முறையில் அங்கு எழுந்தருளினார். பக்தித் தொண்டின் வழிமுறைகளை மிகவும் எளிதில் அறிந்து கொள்வதற்கும், அதனை மேற்கொள்வதின் மூலம் வாழ்க்கையை வெற்றிகரமாக்கிக் கொள்வதற்கும் பாரத - வர்ஷம் விசேஷத் தன்மை வாய்ந்த நிலமாகும். ஒருவன் பக்தித் தொண்டில் தனது வாழ்க்கையை வெற்றிகரமாக்கிக் கொண்டு, பின்னர் உலகின் பிற பகுதிகளுக்கும் பக்தித் தொண்டினை உபதேசிப்பானென்றால், உலகம் உண்மையில் நலம்பெறும்.
இவ்வுண்மைகள் சைதன்ய சரிதாம்ருதத்தில் (ஆதி 9.41) மேலும் விளக்கப்படுகின்றன:
பாரத - பூமிதே ஹைல மனுஷ்ய - ஜன்ம
யார ஜன்ம ஸார்தக கரி’ கர பர - உபகார
“இந்திய (பாரத - வர்ஷம்) நிலப்பகுதியில் மனிதனாகப் பிறந்திருக்கும் ஒருவன் தனது வாழ்வினை வெற்றிகரமாக்கிக் கொண்டு பிறரின் நன்மைக்காக உழைத்தல் வேண்டும்.”
பாரத - வர்ஷம் மேன்மை மிக்க ஒன்றாகும். அங்கே பிறப்பதினால் ஒருவன் சொர்க்கலோகத்தை அடைவது மட்டுமல்ல; அவன் நேரடியாக வீடுபேறு பெற்று முழுமுதற் கடவுளை அடைகிறான். பகவத்கீதையில் (9.25) கிருஷ்ணர் பின்வருமாறு கூறுகிறார்:
யாந்தி தேவ - வ்ரதா தேவான்
பித்ரூன் யாந்தி பித்ரு - வ்ரதா:
பூதானி யாந்தி பூதேஜ்யா
யாந்தி மத் - யாஜினோ(அ)பி மாம்
“தேவரை வணங்குவோர் தேவரை அடைவார், முன்னோரை வணங்குவோர் முன்னோரை அடைவார், பூதங்களை வணங்குவோர் பூதங்களை அடைவார். என்னை வணங்குவோர் என்னையே அடைவார்.” பாரத வர்ஷத்தில் உள்ள மக்கள் பொதுவாக வேத நெறிகளைப் பின்பற்றுவோராவர். இதனைத் தொடர்ந்து அவர்கள் சொர்க்க லோகத்திற்கு உயர்த்தும் வேள்விகளைச் செய்கின்றனர். ஆயினும் இது போன்ற சாதனைகளினால் என்ன பயன்? பகவத் கீதையில் (9.21) “க்ஷீணே புண்யே மர்த்யா - லோகம் விஸந்தி” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒருவன் செய்யும் வேள்விகள், தானம், புண்ணியச் செயல்களின் பலன்கள் தீர்ந்துவிடும் பொழுது அவன் மீண்டும் பிறப்பு, இறப்பு என்பவற்றின் வேதனையை உணர்கிறான். இதனால் மேல் உலகிற்கு உயர்த்தப்பட்டும் கூடத் தேவர்கள் கழிவிரக்கம் கொள்கின்றனர். மேலுலகவாசிகள், பாரத - வர்ஷத்தில் பிறந்து முழுப் பயனையும் தம்மால் அனுபவிக்க முடியவில்லையே என்று வருந்துகின்றனர். மாறாக, அவர்கள் புலனுகர்ச்சியின் உயர் தரத்தினால் கவரப்பட்டு, மரண வேளையில் பகவான் நாராயணரின் தாமரைத் திருவடிகளை மறந்துபோயினர்.
இதன் முடிவு என்னவெனில், பாரத - வர்ஷத்தில் பிறந்த ஒருவன் முழுமுதற் கடவுள் தனிப்பட்ட முறையில் அருளியிருக்கும் உபதேசங்களைப் பின்பற்ற வேண்டும். “யத் கத்வா ந நிவாதந்தே தத் தாம பரமம் மம”. முழுமுதற் கடவுளுடன் இணைந்து ஸத் - சித் - ஆனந்த வாழ்க்கையினை முற்றிலும் வாழ்வதற்காக ஒருவன் வீடு பேறு பெற்று வைகுண்ட லோகத்தில் - வைகுண்ட லோகத்திலேயே மிகவும் உயரத்திலுள்ள உலகமான கோலோக பிருந்தாவனம் - உள்ள முழுமுதற் கடவுளை அடைவதற்கு முயற்சித்தல் வேண்டும்.
(ஸ்ரீமத்-பாகவதம் காண்டம் 5.19.21-22 / பொருளுரை வழங்கியவர்
ஶ்ரீல பிரபுபாதர் )
பாரத வர்ஷத்தின் சிறப்பும் ஆன்மீக முக்கியத்துவமும்
முக்கியக் கருத்துக்கள்
பக்தித் தொண்டுக்கான வசதிகள்: பாரத வர்ஷம் (இந்தியா) பக்தித் தொண்டு செய்வதற்கு ஏராளமான வசதிகளையும் வாய்ப்புகளையும் கொண்டுள்ளது.
ஆச்சாரியர்களின் பங்களிப்பு: இந்தியாவின் அனைத்து ஆச்சாரியர்களும் (ஆன்மீக குருமார்கள்) தங்கள் ஆன்மீக அனுபவங்களை இங்குள்ள மக்களுக்கு அள்ளி வழங்கியுள்ளனர்.
ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் உபதேசம்: ஸ்ரீ சைதன்ய மகாபிரபு தனிப்பட்ட முறையில் பாரத வர்ஷத்தில் அவதரித்து, ஆன்மீக வாழ்வில் வளர்ச்சி பெறுவது மற்றும் பகவானின் பக்தித் தொண்டில் நிலைபெறுவது குறித்து உபதேசம் செய்தார்.
எளிதான ஆன்மீக வழி: பக்தித் தொண்டின் வழிமுறைகளை மிக எளிதில் அறிந்து கொள்வதற்கும், அதன் மூலம் வாழ்க்கையை வெற்றிகரமாக்கிக் கொள்வதற்கும் பாரத வர்ஷம் ஒரு விசேஷமான இடமாகும்.
உலக நலனுக்கான கடமை: சைதன்ய சரிதாம்ருதத்தின் கூற்றுப்படி (ஆதி 9.41): "இந்திய நிலப்பகுதியில் மனிதனாகப் பிறந்திருக்கும் ஒருவன் தனது வாழ்வினை வெற்றிகரமாக்கிக் கொண்டு பிறரின் நன்மைக்காக உழைத்தல் வேண்டும்." (ஜன்ம ஸார்தக கரி’ கர பர - உபகார).
சொர்க்க லோகம் மற்றும் வீடுபேறு
மேன்மை மிக்க பிறப்பிடம்: பாரத வர்ஷத்தில் பிறப்பது ஒரு மேன்மை மிக்க விஷயமாகக் கருதப்படுகிறது. இங்குப் பிறப்பதினால் ஒருவன் சொர்க்க லோகத்தை அடைவது மட்டுமல்ல, அவன் நேரடியாக வீடுபேறு பெற்று முழுமுதற் கடவுளை அடையும் வாய்ப்பைப் பெறுகிறான்.
பகவத் கீதையின் கூற்று (9.25):
தேவர்களை வணங்குவோர் தேவரை அடைவார்.
முன்னோரை வணங்குவோர் முன்னோரை அடைவார்.
பூதங்களை வணங்குவோர் பூதங்களை அடைவார்.
கிருஷ்ணரை (முழுமுதற் கடவுளை) வணங்குவோர் அவரையே அடைவார் (யாந்தி மத் - யாஜினோ(அ)பி மாம்).
கர்மாக்களின் நிலையற்ற பலன்: பாரத வர்ஷ மக்கள் பொதுவாக வேத நெறிகளைப் பின்பற்றி சொர்க்க லோகத்திற்கு உயர்த்தும் வேள்விகளைச் செய்கின்றனர். எனினும், பகவத் கீதையின்படி (9.21): ஒருவன் செய்யும் புண்ணியச் செயல்களின் பலன்கள் தீர்ந்துவிடும் பொழுது (க்ஷீணே புன்யே), அவன் மீண்டும் பிறப்பு - இறப்பு என்ற துன்பத்தை உணர்கிறான் (மர்த்யா - லோகம் விஸந்தி).
தேவர்களின் ஏக்கம்: மேலுலக வாசிகள் (தேவர்கள்) கூட, பாரத வர்ஷத்தில் பிறந்து முழுப் பயனையும் (வீடுபேறு) அடைய முடியவில்லையே என்று கழிவிரக்கம் கொள்கின்றனர். அவர்கள் புலன் இன்பங்களால் கவரப்பட்டு, மரண வேளையில் பகவானை மறந்துவிடுகின்றனர்.
இறுதி இலக்கு
முழுமுதற் கடவுளின் உபதேசத்தைப் பின்பற்றல்: பாரத வர்ஷத்தில் பிறந்த ஒருவன் முழுமுதற் கடவுள் அருளியிருக்கும் உபதேசங்களைப் பின்பற்ற வேண்டும்.
வீடுபேற்றின் பலன்: ஒருவன் வீடுபேறு பெற்று, முழுமுதற் கடவுளுடன் இணைந்து ஸத்-சித்-ஆனந்த வாழ்க்கையை (நித்தியமான, அறிவார்ந்த, மகிழ்ச்சியான வாழ்க்கை) வாழ்வதற்காக வைகுண்ட லோகம் அல்லது வைகுண்ட லோகத்திலேயே உயர்ந்த இடமான கோலோக பிருந்தாவனத்தை அடைவதற்கு முயற்சித்தல் வேண்டும்.
நிலையான இருப்பிடம்: "யத் கத்வா ந நிவாதந்தே தத் தாம பரமம் மம" - எங்கு சென்றால் ஒருவன் மீண்டும் திரும்ப மாட்டானோ, அதுவே எனது பரமமான இருப்பிடம்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Comments
Post a Comment