ஸ்ரீமதி ராதாராணியின் தோற்றம் பற்றி பல்வேறு கல்பங்களில் நிகழ்ந்த பல்வேறு வர்ணனைகள் உள்ளன. அவற்றுள் சிலவற்றை காண்போம். 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 வர்ணனை 1 : 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 (ஸ்ரீ ரூபா கோஸ்வாமியால் "ஸ்ரீ லலிதா மாதவா" வில் வர்ணிக்கப்பட்டுள்ளது) ஒருமுறை விந்திய பர்வதம் இமாலய பர்வதத்தை கண்டு பொறாமை கொண்டது. தனது மகளான பார்வதிக்கு சாக்ஷத் மகாதேவரான சிவபெருமானே கணவராக கொண்ட இமாலய பர்வதம், இதன் மூலம் சிவபெருமானை மருமகனாக அடைந்தது தான் இந்த பொறாமைக்கு காரணம். ஆகையால் தனக்கு சிவபெருமானையே தோற்கடிக்க கூடிய ஒருவர் தான் மருமகனாக வேறவேண்டும் என்று எண்ணிய விந்திய பர்வதம் இதற்காக, பிரம்மதேவரை பிரார்த்தனை செய்து கடும் தவம் இருந்தது. மனமகிழ்ந்த பிரம்மதேவரும், விந்திய பர்வதத்திடம் தனக்கு வேண்டும் வரத்தை கேட்க சொன்னார். விந்திய பர்வதம், "பிரம்மதேவரே! சிவபெருமானை தோற்கடிக்கக்கூடிய ஒருவரை கரம் பிடிக்கும் ஒரு புதல்வி எனக்கு வேண்டும்" என்றது. பிரம்மதேவரும் யோசிக்காமல் "ததாஸ்து" என்று கூறி சென்றுவிட்டார். ஆனால் சிறிது நேரம் கழித்து தான் அளித்த வரம் சாத்தியமற்றது என்பதை உணர்ந்த பிரம்மதேவர் ...