இன்றைய இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தில் , கங்கை , யமுனை , சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கின்ற (ஒன்று சேர்கின்ற) அழகான கரையில் அமைந்திருப்பதே பிரயாகை என்னும் திருத்தலம். பிரம்மதேவர் தனது முதல் பத்து யாகங்களை மேற்கொள்வதற்காக இந்த நதிக்கரையைத் தேர்ந்தெடுத்தார் என்பதால் , இவ்விடம் பிரயாகை என பெயர் பெற்றது. முகலாயரின் ஆட்சிக் காலத்தில் , சங்கமத்தின் கரையில் மன்னர் அக்பர் ஒரு பெரிய கோட்டையை எழுப்பி இலாகாபாத் (அலகாபாத்) என பெயரிட்டதால் , அலகாபாத் என்ற பெயரிலும் இவ்விடம் அறியப்படுகிறது. விஷ்ணுவிற்கு மிகவும் பிரியமான இடம் என்பதால் , தீர்த்த ராஜன் (திருத்தலங்களின் மன்னன்) என்றும் பிரயாகை புகழப்படுகின்றது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக , பிரயாகை என்றவுடன் பலரின் மனதில் எழுவது இலட்சக்கணக்கான மக்கள் பங்கு பெறும் கும்பமேளா நிகழ்ச்சியாகும் . கும்பமேளாவின் வரலாறு தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்தபோது , கூர்மர் , தன்வந்திரி , மோஹினி என்று பகவானின் மூன்று அவதாரங்கள் அதில் பங்கெடுத்து கொண்டனர். அதனை ஒரு திகைப்பூட்டும் லீலை என்று சாஸ்திரம் வர்ணிக்கின்றது. தன்வ...