Skip to main content

Posts

Showing posts with the label Lord Sri Guruvayurappan Lila / ஶ்ரீ குருவாயூரப்பன் லீலைகள்

சிறுவனின் நைவேத்தியத்தை ஏற்றுக்கொண்ட குருவாயூரப்பன்

கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற ஆலயங்களுள் குருவாயூரில் உள்ள குருவாயூரப்பன் கோவில் மிகவும் பிரசித்திப்பெற்றது. இந்த ஆலயத்தில் அருளும் குருவாயூரப்பன், பலருக்கும் அருள் செய்தவர். முன்னொரு சமயம், குருவாயூர் கோவிலில் பூஜை செய்து வந்த நம்பூதிரி, அவசரமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது கோவிலில் பூஜைகள தடை இல்லாமல் நடக்க வேண்டும் என்பதால், சிறு பாலகனான தனது மகனிடம் கோவிலைக் கவனித்துக் கொள்ளும்படியும், பூஜைகளைத் தடையின்றி செய்ய வேண்டும் என்றும், குறித்த நேரத்தில் நைவேத்யம் செய்யுமாறும் கூறிச் சென்றார். அவனும் அரிசியை சமைத்து குருவாயூரப்பனுக்கு நைவேத்யம் செய்து , கண்ணா, சாப்பிடு” என்று கூறினான் கண்ணன் அசையவில்லை உடனே அவன் வெறும் சாதத்தை - எவ்வாறு கண்ணன் சாப்பிடுவார் என நினைத்து, அருகில் உள்ள வீட்டில் இருந்து கொஞ்சம் தயிரும், வடுமாங்காயும் வாங்கி வந்தான் தயிரை சாதத்தில் கலக்கி. உப்புமாங்காயை வைத்தான் அப்பொழுதும் கண்ணன் சாப்பிடவில்லை சாப்பிடு கண்ணா என்று கெஞ்சினான் சாதம் அப்படியே இருந்தது. என்னுடைய அப்பா வந்தால் உனக்கு சாப்பிட ஒன்றும் தரவில்லையென்று திட்டுவார். சாப்பிடு என்று சொல்லிக் கெஞ்சி அழுதான் க...

பூந்தானம் வழங்கிய ஶ்ரீமத் பாகவத உபன்யாசம்

  பூந்தானம் வழங்கிய ஶ்ரீமத் பாகவத உபன்யாசம் வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர் 🔆🔆🔆🔆🔆🔆🔆 பூந்தானம் நம்பூதிரி பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த குருவாயூரப்பனின் பக்தராவார். இவரின் தூய பக்தியால் இவர் நிறைய பாடல்கள் இயற்றியுள்ளார்.இவர் கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தில் கீழாற்றூர் என்ற இடத்தில் வசித்து வந்தார். பூந்தானம் என்பது அவரின் குலப் பெயர் ஆகும். மலையாள மொழியில் இவர் இயற்றிய "ஞானப்பானா" (தெய்வீக ஞானத்தின் அமிர்தம்) மிகவும் பிரசித்தி பெற்றது. பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் லீலைகளில் மூழ்கி, இவர் வழங்கும் பாகவத உபன்யாசங்களை கேட்க பக்தர்கள் எப்போதும் ஆவலுடன் இருப்பார்கள். கேரளாவில், கொட்டியூர் என்னும் ஊரில் உள்ள சிவன் கோவில் வருடத்தில் சில நாட்களுக்கு மட்டுமே திறந்திருக்கும்.அப்படி திறந்திருக்கும் சமயம் தரிசனத்திற்காக பூந்தானம் இவ்விடம் வந்தார். கொட்டியூர் வந்தடைந்த பூந்தானம் அங்குள்ள குளத்தில் நீராடி, சிவபெருமானை வழிபட்டு மிகுந்த சந்தோஷத்துடன் அங்கேயே சில நாட்கள் தங்கினார். தினசரி திருகோவிலில் பகவான் சிவன் முன்னால் பூந்தானத்தின் ஶ்ரீமத் பாகவத உபன்யாசம் நடைபெறும் . நூற்றுக்கணக்கான ...

குருவாயூர் கேசவன்

 குருவாயூர் கேசவன் வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர் 🔆🔆🔆🔆🔆🔆🔆 கேரளாவில் புகழ்பெற்ற குருவாயூரப்பன் திருக்கோயில் உள்ளது .அங்கே வீற்றிருக்கும் பகவான் கிருஷ்ணன்  வாசுதேவ கிருஷ்ணராக பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார். பக்தர்களும் பகவத் கைங்கர்யத்தில் ஈடுபட்டு, பல விதமான திருவிழாகள், கோலாகலமான ஊர்வலங்கள், பிரசாத வினியோகம் போன்றவைகளில் பகவானை ப்ரீத்திபடுத்துகின்றனர்.  இறை சேவையில் பாகுபாடு கிடையாது.அனைத்து வகையான ஜீவராசிகளும் பகவானின் சேவைகளில் ஈடுபடலாம். அதுவே எல்லா ஜீவராசிகளுக்கும் உள்ள ஸ்வரூப நிலையாகும். இதை சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 20.108-109 ல் ஜீவேர ஸ்வரூப் ஹய- க்ரிஷ்ணேர நித்ய-தாஸ ஜீவனின் ஸ்வரூப நிலை கிருஷ்ணருடைய நித்திய சேவகனாக இருப்பதாகும். என்று விளக்கப்பட்டுள்ளது. அப்படி யானையின் உருவில் பகவான் நாராயணனை பிரார்த்தனை செய்த கஜேந்திரன் என்ற யானையை பற்றி ஶ்ரீமத் பாகவதம் 8 ஆம் காண்டத்தில் மிகவும் சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது. எந்த உருவத்திலும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணருக்கு தூய்மையான சேவை செய்யலாம். அப்படி ஒரு வாய்ப்பு கேரளாவில் புகழ்பெற்ற குருவாயூரப்பன் திருக்கோயிலில...