புண்டரீக வித்யாநிதி 🍁🍁🍁🍁🍁🍁 புண்ட ரீக வித் யாநிதி. - பஃட,ஷா.கா, ஜானி ஜா,ர நாம லஞா ப்ரபு, காந்தி லா ஆபனி மொழிபெயர்ப்பு 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 புண்டரீக வித்யாநிதி மூன்றாவது மிகப்பெரிய கிளையாவார். அவர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவிற்கு மிகவும் பிரியமானவர், அவரது பிரிவில் சில நேரங்களில் ஸ்ரீ சைதன்யர் அழவும் செய்வார் பொருளுரை: 🍁🍁🍁🍁🍁🍁 கௌர கணோத், தேஷதிபிகா (54), ஸ்ரீல புண்டரீக வித்யாநிதியை கிருஷ்ண லீலையில் ஸ்ரீமதி ராதாராணியின் தந்தையாக விளக்குகின்றது. எனவே, சைதன்ய மஹாபிரபு அவரைத் தமது தந்தையைப் போன்று நடத்தினார். புண்டரீக வித்யாநிதியின் தந்தை பாணேஸ்வரர் என்று அறியப்பட்டார், மற்றோர் அபிப்பிராயத்தின்படி சுக்லாம்பர பிரம்மசாரி என்று அறியப்பட்டார், அவரது தாயாரின் பெயர் கங்காதேவி. ஓர் அபிப்பிராயத்தின்படி, பாணேஸ்வரர் ஸ்ரீ சிவராம கங்கோபாத்யாயரின் வம்சத்தில் வந்தவராவார். புண்டரீக வித்யாநிதியின் பூர்வீகம் கிழக்கு வங்காளமாகும் (தற்போது வங்காளதேசம்), டாக்காவிற்கு அருகிலுள்ள பா,கியா என்னும் கிராமத்தில் அவர் பிராமண குலத்தின் வாரேந்திர பிரிவைச் சார்ந்தவராவார். சில நேரங்களில் இந்த வாரேந்திர பி...