ஸ்ரீபாத இராமானுஜாசாரியருக்கு பிரியமான ஸ்தலம் வழங்கியவர்: அத்புத ஹரி தாஸ் தென்னிந்தியாவின் மலைப் பகுதியில் அமைந்துள்ள இத்திருக்கோயில், பாரத பாரம்பரியத்தின் மிகமுக்கியமான ஆச்சாரியர்களில் ஒருவரான இராமானுஜர் உட்பட பலருக்கும் அடைக்கலம் கொடுத்த திருத்தலம். மேல்கோட்டை, மைசூரிலிருந்து சுமார் ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஸ்ரீபாத இராமானுஜாசாரியரைப் பின்பற்றும் ஸ்ரீ வைஷ்ணவர்களால், உலகின் மிக முக்கியமான நான்கு புனித ஸ்தலங்கள் என்று கருதப்படும் இடங்களில் இதுவும் ஒன்றாகும். இராமானுஜர் ஏறத்தாழ பன்னிரண்டு ஆண்டுகள் மேல்கோட்டையில் தங்கி, விக்ரஹ வழிபாட்டிற்குரிய உயரிய தரத்தை வகுத்துக் கொடுத்தார், இஃது இன்றளவும் பின்பற்றப்படுகிறது. மேல்கோட்டையின் பிரதான கோயில் திருநாராயணரின் திருக்கோயில்; மேலும், இங்குள்ள ஒரு குன்றின் மீது யோக நரசிம்மருக்கென அமைக்கப்பட்டுள்ள கோயிலும் முக்கியமானதாகும். மேல்கோட்டையை தரிசிப்பதற்கு நான் எனது ஆன்மீக குருவான தவத்திரு. ஸ்ரீதர ஸ்வாமி, மற்றும் சில இஸ்கான் பக்தர்களுடனும் சென்றேன். பல தென்னிந்திய கோயில்களில் விஷேச பூஜைகள் செய்ய நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு, ...