ஶ்ரீ குருவாயூரப்பன் லீலைகள் கொம்பு முளைத்த தேங்காய் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 முன்னொரு சமயத்தில் கிராமவாசி ஒருவர் தனது தோட்டத்தில் பல தென்னங்கன்றுகளை நட்டார். தனது தோட்டத்தில் விளைந்த தென்னை மரங்களில் இருந்து காய்க்கும் முதல் அறுவடையில் வரும் தேங்காய்களை குருவாயூரப்பனுக்குக் காணிக்கை அளிப்பதாய் சங்கல்பம் எடுத்து கொண்டார். மரங்கள் காய்க்கத் தொடங்கிய போது, அவன் மரங்களில் இருந்து முதல் தேங்காய்களைச் கோணிப் பையில் சேகரித்து கொண்டு குருவாயூர் கோவிலுக்குப் பயணித்தான். போகும் வழியில் ஒரு கொள்ளைக்காரன் வழிமறித்து "கோணிப் பையில் உள்ளதைக் கொடுத்துவிடு" என்று அவரை மிரட்டினான். அந்த கிராமவாசியோ, "இந்த கோணிப் பையில் தேங்காய்கள் மட்டுமே உள்ளன. அவை குருவாயூரப்பனுக்கு எனது காணிக்கையாக எடுத்து செல்கிறேற். இது நைவேத்திய தேங்காய் இதை தர முடியாது' என்று கூறினார். கொள்ளைக்காரன் அலட்சியமாக, "குருவாயூரப்பனின் தேங்காய் என்று எங்காவது எழுதி இருக்கிறதா? இல்லை அதற்குக் என்ன பிரத்யேகமாக கொம்புகள் இருக்கிறதா என்ன? என்று கூறிக் கொண்டே கிராமவாசியின் கைகளில் இருந்து கோணி பையைப் பற்றி இழுத்தான். கோண...