அலர்நாதரின் வரலாறு வழங்கியவர்: தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமி பக்தி உணர்ச்சியை தூண்டக்கூடிய சின்னஞ்சிறிய இக்கோயில் ஆன்மீக ஏக்கத்தின் இருப்பிடமாகத் திகழ்கிறது. ஜகந்நாத் புரியில் வருடாந்திர ரத யாத்திரைக்கு முன்பாக பகவான் ஜகந்நாதர் இரண்டு வாரம் ஓய்வெடுக்கும் காலம் அனவஸர எனப்படும். அச்சமயத்தில் பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு அலர்நாத்தில் தங்கியிருப்பார். தனது அன்பிற்குரிய ஜகந்நாதரின் தரிசனமின்றி பகவான் சைதன்யரால் புரியில் தனிமையில் வசிக்க இயலாது. பகவானை பிரிந்த ஏக்கத்தால் எழும் உயர்ந்த ஆன்மீக உணர்ச்சிகளை அவர் அலர்நாத்தில் வெளிப்படுத்துவார். அலர்நாத் திருக்கோயில் புரிக்குப் பதினேழு கிலோ மீட்டர் மேற்கில், கடலுக்கு ஐந்து கிலோ மீட்டர் உட்புற நிலத்தில் அமைந்துள்ளது. . அலர்நாத் செல்வதற்கு பகவான் சைதன்யர் கடற்கரையின் ஓரமாக நடந்து செல்வார், ஆனால் இன்று பெரும்பாலான யாத்திரிகள் பேருந்தில் செல்கின்றனர். 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 பகவான் அலர்நாதர் நான்கு கரங்களுடைய மஹாவிஷ்ணுவாக வீற்றுள்ளார், அவரது வாகனமான கருடன் கைகூப்பி குனிந்து அவரது பாதத்தில் பிரார்த்தனை செய்கிறார், அவரது துணைவியர்களான ஸ்ரீதேவி...