Skip to main content

Posts

Showing posts with the label Sri Navadwip Dham / ஶ்ரீ நவதீப் தாமம் ( Story)(HPA)

தாமேஸ்வர் மஹாபிரபு ஆலயம்

  தாமேஸ்வர் மஹாபிரபு ஆலயம் 🔆🔆🔆🔆🔆 இந்த ஆலயத்தில் இருக்கும் பகவான் சைதன்ய மஹாபிரபு விக்கிரஹத்தை பகவான் சைதன்ய மஹாபிரபுவின் மனைவியான ஸ்ரீமதி விஷ்ணுபிரியா, அவர் சந்நியாசம் ஏற்ற பிறகு வழிபட்டதாகக் கூறப்படுகிறது. பகவான் சைதன்ய மஹாபிரபுவின் இந்த விக்கிரஹத்துடைய இரு கரங்களும் அன்புடன் பக்தர்களை ஏற்றுக்கொள்ளும் விதமாக நீட்டப்பட்டு இருக்கிறது. பகவான் சைதன்ய மஹாபிரபு சந்நியாசம் ஏற்றுக் கொண்ட போது விஷ்ணுபிரியா பதினாறு வயது உடையவராக இருந்தார். இந்த ஜடவுலகில் இருந்து தொண்ணூற்றாறு வயதில் மறைந்தார். சுமார் எண்பது ஆண்டுகள் இந்த விக்ரஹத்தை அவர் வழிபட்டுள்ளார். இந்த ஆலயத்திலிருக்கும் மரக் காலணிகள் பகவான் சைதன்யர் அனிந்ததாக கூறப்படுகிறது. விஷ்ணுபிரியா தேவியின் மறைவிற்குப் பிறகு அவருடைய உறவினர் இந்த விக்கிரஹத்தை தன் இல்லத்திற்கு எடுத்துச் சென்றார். அச்சமயம் கங்கையின் கிழக்குப் பகுதியில் அவர் வாழ்ந்து வந்தார். கங்கையின் நீரால் அவருடைய இல்லம் அடித்து செல்லப்பட்டது. கங்கையின் மேற்கு பகுதியில் இருக்கும் குலியா கிராமத்திற்கு இடம் பெயர்ந்தார். குலியா கிராமம் என்பது தற்போது நவத்வீப நகரமாக அறியப்படுகிறது....

நரசிம்மபள்ளி அல்லது தேவபள்ளி

  நரசிம்மபள்ளி அல்லது தேவபள்ளி 🔆🔆🔆🔆🔆 ஸ்ரீ நவத்வீப தாம் மஹாத்மியத்தின் பரிக்கிரமா காண்டத்தில் தேவபள்ளி என்ற மிகவும் சக்திவாய்ந்த இடத்தை பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது ஸ்ரீ ஜீவ கோஸ்வாமி மற்றும் ஸ்ரீவாச தாகூரருடன் சுவர்ண விஹாருக்கு சென்றபிறகு பகவான் நித்தியானந்தர் நரசிம்மபள்ளி என்னும் கிராமத்திற்கு முன்னேறிச் சென்றார். இந்த இடத்தை நரசிம்மபள்ளி என்றும்  தேவபள்ளி என்றும் அழைப்பார்கள்.  சத்ய யுக காலத்திலிருந்தே பகவான் நரசிம்மதேவருக்கென்று பிரத்தியேகமான ஒரு ஆலயம் இந்த கிராமத்தில் இருக்கிறது என்பதை பகவான் ஶ்ரீ நித்யானந்தர், விளக்கினார். தன்னுடைய பிரியமான பக்தனான பிரகலாதனின் மீது கொண்ட பெரும் கருணையால் , பிரஹலாதருக்கு அதிகமான தொல்லைகளைக் கொடுத்து வந்த அவனுடைய தந்தையான ஹிரண்யகசிபுவை பகவான் நரசிம்மர் வதம் செய்த பின்னர் இந்த இடத்திற்கு ஓய்வெடுக்க வருகிறார் என்பதை அறிந்த பிரம்மா உட்பட அனைத்து தேவர்களும் அந்த இடத்தில் தங்களுக்குத் தேவையான இல்லங்களை அமைத்து ஒரு கிராமத்தையே உருவாக்கினார். மந்தாகினி நதியில் கரையோரமாக இருக்கும் சிறு குன்றின் மீது தங்களுடைய இல்லங்களை அமைத்து பகவானின்...

கெளர பாகவதத்தை கேட்பதற்காக நைமிசாரண்யத்திற்கு பகவான் சிவன் வருதல்

கெளர பாகவதத்தை கேட்பதற்காக நைமிசாரண்யத்திற்கு பகவான் சிவன் வருதல் 🔆🔆🔆🔆🔆🔆 நவத்வீப-தாம-மஹாத்மியத்தின் பரிக்கிரமா காண்டத்தில் பகவான் நித்தியானந்தர் ஸ்ரீ ஜீவ கோஸ்வாமிக்கு கூறியது: மத்திய த்வீபத்தின் தென்திசையில் கோமதி நதி உள்ளது. இந்த நதியின் கரையோரமாக நைமிசாரண்யம் அமைந்துள்ளது. கலியுகத்தின் ஆதிக்கத்திலிருந்து ஜீவன்களை பாதுகாக்க சௌனக ரிஷி தலைமையிலான பலரும் சூத கோஸ்வாமியின் திருவாயிலிருந்து கெளர பாகவதத்தை கேட்பதற்காக அங்கே கூடியிருந்தனர்.  கார்த்திகை (தாமோதர) மாதத்தின் போது எவரொருவர் இங்கு அமர்ந்து புராணங்களை படிக்கிறாரோ அவர் எல்லாவிதமான துன்பங்களிலிருந்தும் விடுபட்டு கௌரங்கருக்கு சேவை செய்வதன் மூலம் வ்ரஜ தாமத்தை சுலபமாக அடைந்து விடும் வாய்ப்பை பெறலாம். ஒருமுறை நைமிசாரண்ய வனத்தில் கௌரங்கரின் புகழைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அங்கு வந்து அதனைக் கேட்க வேண்டுமென்று பகவான் சிவன் விருப்பம் கொண்டார். தன்னுடைய வாகனமான காளையின் மீது அமர்ந்து கயிலாயத்திலிருந்து இந்த இடத்திற்கு பிரயாணம் செய்து கொண்டிருந்தார்.குறிப்பிட்ட நேரத்தில் சென்று கௌர கதையை கேட்க தான் இன்னும் வேகமாகச் செல்ல வேண்...

சீமந்தத்வீபம்

  சீமந்தத்வீபம் 🔆🔆🔆🔆🔆 “ஸத்ய-யுகத்தில் ஒருசமயம் சிவபெருமான், கௌராங்கரின் நாமத்தை உச்சரித்தபடி பயங்கரமாக நடனமாடத் தொடங்கினார். அவரிடம் பார்வதிதேவி வினவினாள். 'தயவுசெய்து கௌரங்கர் யார்? என்று எனக்குக் கூறுங்கள்; தங்களின் ஆச்சரியமான நடனத்தைக் கண்டும், கௌரங்கரின் நாமத்தைக் கேட்டும் எனது இதயம் உருகுகிறது. இதுவரை, இந்த மந்திர-தந்திரங்களின் வழியில் நான் கேட்டவை அனைத்தும் இவ்வுயிர்வாழிகளுக்கு இன்னும் நெருக்கமான பந்தத்திற்கே வழிகாட்டுகின்றன. அன்புள்ள பிரபுவே, கௌராங்கரைப் பற்றிய விஷயங்களைக் கூறுங்கள். அவரை வழிபடுவதின்மூலம் நான் உண்மையான வாழ்வை அடைய இயலுமா?' மஹாதேவன் கூறினார். “இராதையின் முழுமை பகுதியும், அனைத்து ஆற்றல்களும் சக்தியும் (ஆதி சக்தி) நீயேயாவாய், ஒரு ரகசியமான உண்மையை இப்போது உனக்குக் கூறுகிறேன். இராதாராணியின்  மனோபாவத்தை ஏற்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கலியுகத்தில் மாயாப்பூரில் சச்சி தேவியின் கருவிலிருந்து கௌரங்க என்ற பெயர் கொண்டு பிறக்கவிருக்கிறார். நாம சங்கீர்த்தனம் அதாவது பகவானுடைய புனித நாமங்கள் ஜபம் செய்வதில் பகவான் கௌரங்கர் பித்துப் பிடித்தவனைப் போல காணப்படுவார். தகுதிய...

மோதாத்ருமத்வீபம்

 மோதாத்ருமத்வீபம் 🔆🔆🔆🔆🔆🔆 இந்த தீவு தாஸ்யம், அல்லது சேவகம் எனும் பக்தி சேவையை பிரதிபலிக்கிறது. ஸ்ரீ விருந்தாவன தாஸ தாகூரருடைய புனித ஸ்தலம், வாசுதேவ தத்தரின் புனித ஸ்தலம், ஸ்ரீ  சாரங்க முராரியின் புனித ஸ்தலம் மற்றும் அர்க திலா ஆகிய இடங்கள் இந்த தீவில் நீங்கள் சென்று காணக்கூடிய இடங்களாகும். ஸ்ரீல பக்தி வினோத தாகூரர் தன்னுடைய நவத்வீப-பாவ -தரங்கத்தில் பின்வருமாறு எழுதியுள்ளார்: "பீஷ்ம-திலாவில் பீஷ்மரிடமிருந்து ஆசி பெற்ற பிறகு அழுதுகொண்டே றநான் மோதாத்ரும த்வீபத்திற்கு செல்வேன். வ்ரஜ பூமியிலிருக்கும் பாந்திராவனத்திற்கும்  மோதாத்ரும த்வீபத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லை . அங்கிருக்கும் அனைத்து மிருகங்களும் பறவைகளும் உன்னதமானவையாகும். ஸ்ரீ கௌர ஹரி  மற்றும் சீதா இராமருடைய புனித நாமங்களை, இங்கிருக்கும் கிளிகள் மற்றும் பறவைகள் தொடர்ந்து பாடிக் கொண்டே இருக்கின்றன. கருணையோடு நிழல் கொடுத்து அந்த  பகுதியையே அழகுபடுத்தி சூரியனை மறைத்திருக்கும்  பல ஆல மரங்கள் இந்த பாந்திராவனத்தில் இருக்கின்றன. மேலும் பகவான்  ஸ்ரீ பலராமர் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணருடைய லீலைகள் என் கண்கள...

சம்பாஹட்டி

  சம்பாஹட்டி 🔆🔆🔆🔆🔆🔆 தன்னுடைய நவத்வீப-பாவ-தரங்கத்தில்  ஸ்ரீல பக்தி வினோத தாகூரர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். "கோலத்வீபத்திற்கு வடக்கே சம்பாஹட்டி என்ற ஒரு இடமுள்ளது. நவத்வீபத்தின் எல்லா இடங்களிலும் இதுவே மிகவும் அழகான இடமாகும். சம்பாஹட்டா கிராமம் என்பது ஒரு உயர்ந்த தீர்த்தமாகும் மேலும் இங்கு கௌர கதாதரரை கவி. ஜெயதேவர் வழிபட்ட மிக அழகிய இடம். வாணிநாதருடைய இல்லத்தில் ஸ்ரீ சச்சி நந்தனர் தன் சகாக்களுடன் நாம சங்கீர்த்தனம் செய்தார். சம்பாஹட்டா எனும் கிராமத்தில் சம்பக மலர்கள் இருக்கும் ஒரு வனத்தில் தான் சம்பகலதா சகி பூக்களை பறிக்க வருவார். வ்ரஜ பூமியில் கிருஷ்ணரும் பலராமரும்  ஓய்வெடுத்த கதிரவனத்திற்க்கும்  நவத்வீபத்திலிருக்கும் இந்த இடத்திற்கும்  எந்த வேறுபாடுமில்லை." சம்பாஹட்டி என்று எதனால் இந்த இடம் அழைக்கப்படுகிறது? 🔆🔆🔆🔆🔆 பகவான் நித்யானந்தர் , ஸ்ரீஜீவ கோஸ்வாமி , ஸ்ரீவாச பண்டிதர் மற்றும் பல  பக்தர்களுடன்  நவத்வீப தாம பரிக்கிரமா செல்லும் பொழுது சம்பாஹட்டி எனும் கிராமத்தை அடைந்தனர். பகவான் கௌரங்கரின் மிக உயர்ந்த பக்தரான த்வஜ வாணிநாதருடைய இல்லத்தில...

ஶ்ரீ நவத்வீப தாமின் தோற்றம்

    . பகவான் ஶ்ரீ கிருஷ்ணர்    எப்போதெல்லாம்  அவதரிக்கிறாரோ அப்போதெல்லாம், அவரது புனித ஸ்தலம், தீர்த்தங்கள், பிரியமான நண்பர்கள். நித்யமான சேவகர்கள் மற்றும் அவரது உபகரணங்களும் அவருடன்  அவதரிக்கின்றனர், பகவானின் நித்ய வாசஸ்தலத்திலிருந்து அவரது லீலைகளில் பங்குகொள்ள அவதரிப்பதால் இந்த ஸ்தலங்களில் எவ்வித பேதங்களும் இல்லை. அதனால் இவ்விடம்  புனிதமான "தாமமாக"( புண்ணிய ஸ்தலமாக) கருதப்படுகிறது.      பகவான் ஶ்ரீ கிருஷ்ணருக்காகவும், அவரை கவர்ந்து இழுக்கவும் ஶ்ரீமதி ராதா ராணி தனிப்பட்ட முறையில் தனது பிரேமையால் உருவாக்கிய மிகவும் அற்புதமான  ஸ்தலம் இந்த நவதீபம்      சிவபெருமான் பார்வதிக்கு நவத்வீப-தாமத்தின் பெருமைகளை எடுத்துரைக்கும் போது இந்த அற்புதமான லீலைகளை விவரித்தார். "தாமரை மலரில் தேனீ எப்படி விளையாடிக் கொண்டு இருக்குமோ அது போல" "கிருஷ்ணர் விருந்தாவனத்தின் இனிமையான காட்டுத் தோப்புகளில் விரஜா என்ற கோபியுடன் ஆனந்தமாக விளையாடிக் கொண்டிருந்தார்.  சகி (தோழி) ஒருத்தி மூலம் இந்தச் செய்தியைக் கேள்வியுற்ற , நிலவை  போன்ற ம...

சீமந்தத்வீபத்தில் பகவான் ஶ்ரீ ஜெகந்நாதரின் திவ்ய சரித்திரம் (பாகம் 3 )

  சீமந்தத்வீபத்தில் வீற்றிருக்கும்  பகவான் ஶ்ரீ ஜெகந்நாதரின் திவ்ய சரித்திரம் வழங்கியவர் :- உயர் திரு பங்கஜாங்கிரி தாஸ் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 பாகம் 3 பகவான் ஶ்ரீ ஜகந்நாதரின் மறு அவதாரம் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 ஜன்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்த்வத: த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி மாம் ஏதி ஸோ’ர்ஜுன      “எனது தோற்றமும் செயல்களும் திவ்யமானவை என்பதை எவனொருவன் அறிகின்றானோ, அவன் இந்த உடலைவிட்ட பின் மீண்டும் இப்பௌதிக உலகில் பிறவி எடுப்பதில்லை. அர்ஜுனா, அவன் எனது நித்திய உலகை அடைகிறான்.” ( ஶ்ரீமத் பகவத்கீதை 4.9)      பகவான் ஜகன்னாதர், பலருக்கும் புரியாத வகையில் தன்னுடையை இனிய விருப்பத்தால் தோன்றி மறைகிறார். யார் ஒருவர் இந்த அற்புதமான லீலைகளை புரிந்து கொள்கிறாரோ அவர்கள் மீண்டும் இந்த ஜட உலகில் பிறப்பதில்லை என்று பகவான் ஜகன்னாதர் (ஶ்ரீ கிருஷ்ணர்) பகவத்கீதையில் கூறுகிறார்.      ஜகதீசகங்குலியின் குடும்பம் மறைந்து பல நூறு ஆண்டுகளுக்கு பின்னர், முன்பு பகவான் ஜகன்னாதரின் கோவில் இருந்த இடத்தில் அடர்ந்த புதரின் நடுவில் நிறைய பாம்பு புற...

சீமந்தத்வீபத்தில் பகவான் ஶ்ரீ ஜெகந்நாதரின் திவ்ய சரித்திரம் (பாகம் 2)

  சீமந்தத்வீபத்தில் வீற்றிருக்கும் பகவான் ஶ்ரீ ஜெகந்நாதரின் திவ்ய சரித்திரம் வழங்கியவர் :- உயர் திரு பங்கஜாங்கிரி தாஸ் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 பாகம் 2 பதினாறாம் நூற்றாண்டின் வரலாறு 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆      பகவான் ஶ்ரீ சைதன்ய மகாபிரபுவின் காலத்தில் ஜகதீச கங்குலி என்ற பக்தர் மாயாப்பூரின் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்தார்.ஜகதீசர் ஒரு சிறந்த வைஷ்ணவர்.அவர் மிகுந்த வயோதிகராய் இருந்தாலும் ஒவ்வொரு வருடமும் 900 கிலோமீட்டர் நடந்து வங்க கடற்கரையில் உள்ள ஶ்ரீ க்ஷேத்திரம் என்னும் ஜகன்நாத புரிக்கு செல்வார். அவர் பக்தர்களுடன், பகவான் ஶ்ரீ சைதன்யரையும், பிரபு ஸ்ரீ ஜகந்நாதரையும், பலதேவர் மற்றும் சுபத்ரா தேவியையும் தரிசிப்பதற்காகவும் ரத யாத்திரை பண்டிகையில் கலந்து கொள்ளவதற்காகவும் செல்வார். பின் நான்கு மாதம் அங்கேயே தங்கி அனைத்து வகையான சேவைகளையும் செய்து பகவான் ஶ்ரீ ஜெகந்நாதரை பிரிய மனமில்லாமல் வங்காளத்தில் உள்ள தனது இல்லத்திற்கு திரும்புவர்.      காலங்கள் சென்றன. ஜகதீசர் கொடிய நோயினால் பார்வையை இழந்தார். அவரின் மகிழ்ச்சி சிதறியது அ...

சீமந்தத்வீபத்தில் பகவான் ஶ்ரீ ஜெகந்நாதரின் திவ்ய சரித்திரம் (பாகம் 1)

  சீமந்தத்வீபத்தில் வீற்றிருக்கும் பகவான் ஶ்ரீ ஜெகந்நாதரின் திவ்ய சரித்திரம் வழங்கியவர் :- உயர் திரு பங்கஜாங்கிரி தாஸ் பாகம் 1 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 ஏழாம் நூற்றாண்டின் வரலாறு ஸ்ரீ சீமந்தத்வீப்பில் இருக்கும் பகவான் ஶ்ரீ ஜெகந்நாதர், ஸ்ரீ நீலாசல தாமின் (ஶ்ரீ ஜெகன்னாத புரியின்) எஜமானரும் வேறல்ல. இந்த உண்மையை வரலாற்றின் அடிப்படையில் ஸ்ரீல பக்திவினோத் தாகூரால் "ஸ்ரீ நவத்வீப் தாம மஹாத்மியம்தில் கீழ் கண்ட கதை விளக்கப்பட்டுள்ளது. ஏழாம் நூற்றாண்டில், ரக்தபாகு என்ற யவன அரசன் ஒரிசா என்ற மாநிலத்தில் தோன்றினான். அவன் மிகுந்த பாவியாகவும், நாத்திகவாதியாகவும் இருந்து பல நாச காரியங்களில் ஈடுபட்டு, கோயில்களை உடைத்து, ஒரிசாவில் உள்ள நன்மக்களுக்கு அச்சத்தை விளைவித்தான். புரியில் உள்ள பகவான் ஜெகந்நாதரின் பக்தர்கள் ரக்தபாகுவின் அட்டகாசத்தை அறிந்த பொழுது மிகவும் அஞ்சினர் அவர்கள் உடனடியாக பகவான் ஜெகந்நாதரை அணுகி, வழிபாட்டிற்குரிய பகவானே! ரக்தபாகு அனைத்து கோயில்களையும் உடைத்து, அங்கு உள்ள விக்ரஹங்களை அழித்து வருவது எங்களுக்கு மிகுந்த கவலையை இருக்கிறது. அவன் தற்போது இந்த திசையை நோக்கி வருகிறான்....