நாரதமுனி , அந்தணர் மற்றும் செருப்பு தைக்கும் தொழிலாளி வழங்கியவர்கள் - சுத்தபக்தி குழுவினர் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஒருமுறை நாரதமுனி வைகுந்ததிற்க்கு பகவான் நாரயணரைப் பார்க்கச் சென்று கொண்டிருந்தார், வழியில் வேதங்கள் அனைத்தையும் பயின்ற ஆச்சாரமான ஒரு அந்தணரைச் சந்தித்தார். நாரதரை வணங்கிய அந்தணர், “தாங்கள் எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள் என அடியேன் அறிந்து கொள்ளலாமா?” என்று கேட்டார். அதற்க்கு, “நிச்சயமாக, நான் பகவான் ஸ்ரீமன் நாராயணனைப் பார்க்கச் சென்று கொண்டிருக்கிறேன்!!” என பதிலுரைத்தார். “அப்படியா, மிக்க மகிழ்ச்சி!! எனக்கு ஒரு உதவி தங்களிடமிருந்து வேண்டுமே?” “தாரளமாக என்னவென்று சொல்லுங்கள், என்னால் இயன்றால் செய்கிறேன்!!” “தாங்கள் பகவான் ஸ்ரீமன் நாராயணனைப் பார்க்கும் பொது, அடியேன் எப்போது வீடு பேரு அடைவேன் என்று கேட்டுச் சொல்கிறீர்களா?” “நிச்சயமாக” என்று நாரதர் பதிலளித்துவிட்டு அங்கிருந்து பயணத்தை மேலும் தொடர்ந்தார். சற்று தொலைவு சென்ற பின்னர், ஒரு ஆலமரத்தடியில் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியைச் சந்தித்தார். நாரதர் எங்கு செல்கிறார் என்பதையறிந்த அவரும் அதே வ...