பதம் 1 ஸ்ரீ - பகவான் உவாச ஊத்வா - மூலம் அத : ஷாகம் அஷ்வத்தம் ப்ராஹுர் அவ்யயம் சந்தாம்ஸி யஸ்ய பர்ணானி யஸ் தம் வேத ஸ வேத - வித் மொழிபெயர்ப்பு புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார் : மேல்நோக்கிய வேர்களையும் கீழ்நோக்கிய கிளைகளையும் , வேத பதங்களை இலைகளாகவும் கொண்ட ஓர் ஆலமரம் உள்ளது என்று கூறப்படுகின்றது . இம்மரத்தை அறிந்தவன் வேதங்களை அறிந்தவன் . பதம் 2 அதஷ் சோர்த்வம் ப்ரஸ்ருதாஸ் தஸ்ய ஷாகா குண - ப்ரவ்ருத்தா விஷய - ப்ரவாலா : அதஷ்ச மூலான் - யனுஸந்ததானி கர்மானுபந்தீனி மனுஷ்ய - லோகே மொழிபெயர்ப்பு இம்மரத்தின் கிளைகள் , ஜட இயற்கையின் முக்குணங்களால் வளப்படுத்தப்பட்டு , மேல்நோக்கியும் கீழ்நோக்கியும் விரிகின்றன . உபகிளைகள் புலனின்ப விஷயங்களாகும் . இம்மரத்திலுள்ள கீழ்நோக்கிச் செல்லும் வேர்கள் , பலன் நோக்குச் செயல்களால் பந்தப்படுத்தப்பட்டுள்ளன . பதம் 3-4 ந ரூபம் அஸ்யேஹ ததோபலப்யதே நான்தோ ந சாதிர் ந ச ஸம்ப்ரதிஷ்டா அஷ்வத்தம் ஏனம் ஸு - விருட மூலம் அஸங்க - ஷஸ்த்ரேண த்ருடேன சித்த்வா தத : பதம் பரிமா...