Skip to main content

Posts

Showing posts with the label Sakhigopala / சாட்சி கோபாலன்

முத்து மூக்குத்தி

  முத்து மூக்குத்தி ஒரிசா தேசத்தில் பரம பாகவதரான புருஷோத்தம தேவர் என்னும் மஹாராஜா ஆட்சி செய்து வந்தார். அவர் விஜயநகரத்து ராஜகுமாரியை மணம் செய்து கொள்ள விரும்பித்தன் விருப்பத்தை வெளியிட்டார். இதற்கு விஜயநகர அரசன் சம்மதிக்கவில்லை. ஏனெனில் வருடாவருடம் வரும் மாபெரும் ஜெகன்நாதரின் தேர்திருவிழாவில் மன்னர் ஜெகன்நாதரின் தேரின் முன் துடைப்பத்தால் சுத்தம் செய்வது மரபு ( பகவான் ரதத்திற்கு எடுத்துச் செல்லும் சமயத்தில் மன்னர் பிரதாபருத்ரர் தங்கக் கைப்பிடி கொண்ட துடைப்பத்தைக் கொண்டு தாமே தமது கையினால் வீதியினை சுத்தம் செய்யும் சேவையில் ஈடுவார். மன்னர் வீதியில் சந்தன நீரைத் தெளிப்பார்.. அவர் ராஜ சிம்மாசனத்தின் உரிமையாளராக இருந்தபோதிலும் பகவான் ஜகந்நாதரின் திருப்திக்காக துச்சமான சேவையில் ஈடுபட்டார். மன்னர் மிகவும் மதிக்கத்தக்க நபராக இருந்தபோதிலும், அவர் பகவானுக்காக துச்சமான சேவையினை ஏற்றுக் கொண்டார் எனவே, பகவானின் கருணையைப் பெறுவதற்கு அவர் முழு தகுதியுடைய நபரானார். மன்னர் இந்த மாதிரி சேவையில் ஈடுபடுவதை கேள்விப்பட்ட விஜயாநகர மன்னர் தன் மகளை கோயில் பெருக்குகிறவனுக்குத் தரமாட்டேன் என்று கூறினார். இதன...

சாட்சி கோபாலன்

 சாட்சி கோபாலன் 🍁🍁🍁🍁🍁🍁🍁 முன்பு ஒரு காலத்தில் தென்னிந்தியாவில் வித்யா நகரம் என்ற ஊரில் இரண்டு அந்தணர்கள் வசித்து வந்தனர். இருவரும் ஒன்றாக க்ஷேத்ராடனம் செய்தனர். கயா, காசி, பிரயாகை, மதுரா இப்படி சென்றவர்கள் பன்னிரெண்டு ஆரண்யங்களையும்  விருந்தாவனத்தில் உள்ள கோவர்த்தன மலையையும் சென்று சேவித்தார்கள்.  யமுனை நதியின் பல படித்துறைகளில் நீராடிய பிறகு இருவரும் விருந்தாவனத்திற்கு வருகை தந்து கோபாலனின் கோயிலைக் கண்ணுற்றார்கள்.  . கோபாலனின் கோயில்  பிரம்மாண்டமானது.பூஜையோ  அதி பகட்டானது. கோபாலனின் அர்ச்சாவதார அழகு அந்தணர்களை கொள்ளை கொண்டது. அவர்கள் இருவரும் இந்தக் கோயிலில் இரண்டு மூன்று நாட்கள் தங்கினார்கள் இந்த இருவரில் ஒருவர் வயதானவர், மற்றவர் இளைஞர் இளைஞர் முதியவருக்கு உதவியாக இருந்தார். தனக்கு அலுப்பு சலுப்பு இல்லாமல் பணிவிடை செய்யும் இளைஞனைப் பார்த்து முதியவர் பூரிப்படைந்தார். "இளைஞனே. நீயில்லாமல் போனால் எவ்வளவு திண்டாடியிருப்பேன்! துளி கஷ்டம் கூட எனக்குத் தெரியவில்லையே" என்று இளைஞனை மெச்சிப் பேசினார் அந்த மூத்த அந்தணர். இளைஞனுக்கு என்ன கொடுத்தால் சரியாய் இரு...