Skip to main content

Posts

Showing posts from January 5, 2024

ஆத்ம நிவேதனம் (பூரண சரணாகதி)

தேவர்ஷி-பூதாப்த-ந்ருணாம் பித்ரூணாம் ந கிங்கரோ நாயம் ருணீ ச ராஜன் ஸர்வாத்மனா ய: சரணம் சரண்யம் கதோ முகுந்தம் பரிஹ்ருத்ய கர்தம் மொழிபெயர்ப்பு அரசே, பௌதிக கடகைமளையெல்லாம் விட்டு அனைவருக்கும் புகலிடமளிக்கும் முகுந்தனின் தாமரைப் பாதங்களைப் புகலிடம் அடைந்தவன் தேவர்களுக்கோ, சிறந்த முனிவர்களுக்கோ சாதாரண ஜீவராசிகளுக்கோ, உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ மனித குலத்திற்கோ அல்லது முன்னோர்களுக்கோ கடனாளி அல்ல. இவ்வெல்லா ஜீவராசிகளும் பரமபுருஷரின் அங்கங்களே என்பதால், பகவானின் சேவைக்காகத்தன்னை அர்ப்பணித்துக் கொண்டவன் தனித்தனியாக இவர்களுக்குச் சேவை செய்ய அவசியமில்லை. பொருளுரை பகவானின் பக்தித் தொண்டிடம் முழுமையாகச் சரணடையாதவனுக்கு நிச்சயமாகப் பல பௌதிக கடமைகள் உள்ளன. ஒவ்வொரு சாதாரண பந்தப்பட்ட ஆத்மாவும் சூரிய ஒளி, சந்திர ஒளி, மழை, காற்று, உணவு ஜட உடல் போன்ற எண்ணற்ற நன்மைகளை தேவர்களிடமிருந்து பெறுகிறான். இவற்றிற்குப் பதிலாக தேவர்களுக்கு யாகத்தில் நிவேதனம் செய்யாதவன் திருடன் (ஸ்தேன) என்று பகவத் கீதை கூறுகிறது. அவ்வாறே, பசு முதலான ஜீவராசிகள் சுவை மிக்க அநேக உணவு வகைகளை அளிக்கின்றன. காலையில் எழுந்ததும் பறவைகளின் இன...