Skip to main content

விருந்தாவனத்து கோபியர்களின் உண்மையான தன்னலமற்ற பிரேம பக்தி


ஒரு முறை துவாரகையில் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை காண நாரத மகரிஷி வந்தார் அப்போது அவர்கள் இருவரும் உரையாடி கொண்டிருக்கையில் நாரத முனிவர் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை நோக்கி கேட்டார். துவாராகையில் உள்ள தங்களது பத்தினிகளை விட விருதாவனத்தில் இருக்கும் கோபிகைகளிடம் தங்கள் மனம் எப்போதும் எண்ணி கொண்டிருப்பதன் காரணம் என்ன. அதை நான் எவ்வாறு உணர்ந்து கொள்வது என்றார்.


பகவான் கிருஷ்ணரும் நாரதரை நோக்கி சிரித்து பின்னர் மௌனமானார்.


சிறிது நேர உரையாடலுக்கு பின்னர்  பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் நாரதரை நோக்கி எனக்குத் தலை ரொம்ப வலிக்கிறது" என்று சொன்னார். அதற்கு நாரதர், "இதற்கு ஏதாவது மருந்து இருந்தால் சொல்லுங்கள், எப்பாடு பட்டாவது கொண்டு வருகிறேன்" என்று சொன்னார்.


கிருஷ்ணரும், "நாரதரே! எங்கும் செல்ல வேண்டாம். இந்தத் தலைவலி என்னுடைய பக்தர்களின் காலடி மண்ணைத் தடவினால் சரியாகிவிடும். இங்கு யாரேனும் தம்முடைய காலடி மண் இருந்தால் கொடுங்கள், அதை என் நெற்றியில் தடவினால் என் வலி தீரும் என்று சொன்னார். ருக்மிணியும் ஸத்யபாமாவும்,"எங்கள் காலடி மண்ணை உம்முடைய நெற்றியில் தடவுவதா? நாங்கள் உம்முடைய பத்தினிகள் அல்லவா? மகாபாவம் வந்து சேருமே" என்று பதறினார்கள். நாரதர், மற்றும் அங்கு உள்ள அனைவரும், அந்தப் பாவத்தை நாங்கள் சுமக்க முடியாது" என்று கூறி மறுத்துவிட்டனர். நேரம் ஆக ஆக, கிருஷ்ணருக்கு தலை வலி அதிகரித்தது கொண்டே இருக்கிறது என்றார்.

பின்னர் நாரதரிடம் நீ உடனே பிருந்தாவனம் சென்று கோபிகைகளிடம் அவர்களது பாததூளியைக் கேட்டு வாங்கி வா. சீக்கிரம்" என்று சொன்னார். , நாரதர் உடனே பிருந்தாவனம் சென்று இடைப்பெண்களிடம் கண்ணனுடைய தலைவலியைப் பற்றியும், அதற்கான தீர்வையும் கூறினார். அதைக் கேட்ட உடனேயே, ஒரு கோபிகை தனது மேலாக்கை அவிழ்த்துத் தரையில் போட்டாள். எல்லா கோபிகைகளும் மண்ணில் குதித்து, தங்களது காலில் ஒட்டியிருந்த மண்ணை அந்த மேலாக்கில் ஏறி நின்று உதிர்த்தனர் இவ்வாறு ஒரு சிறு மண் மூட்டையை செய்து நாரதரிடம் கொடுத்தனர். கண்களில் நீர் வழிய , "நாரதரே! சீக்கிரம் சென்று எங்களுடைய பிரியமான கண்ணனுடைய நெற்றியில் இதைத் தடவுங்கள்" என்று சொன்னார்கள். நாரதர் அவர்களிடம், இது பெரிய பாவமென்று உங்களுக்குத் தெரியாதா என்று கேட்க, கோபிகைகள், "கண்ணனுடைய தலைவலி தீர்ந்தால் போதும், நாங்கள் எந்தப் பாவத்தைப் பற்றியும் கவலைப்படவில்லை" என்று கூறினார்கள்.


நாரதரும் துவாரகை சென்று பகவான் கிருஷ்ணரிடம் அந்த மூட்டையைக் கொடுத்தார். கிருஷ்ணர், மூட்டையிலிருந்த கோபிகைகளின் பாததூளியை எடுத்துத் தன் நெற்றியில் தடவ தலைவலியும் சரியாகிவிட்டது. நாரதர், ருக்மிணி ஸத்யபாமாவிற்கும் உண்மையான பக்தியைப் பற்றிப் புரிந்தது. பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் கூறினார் , "தலையில் இருந்து ஒரு சுமையை இறக்கி வைத்தாற்போல் உள்ளது, தலைவலி சரியாகிவிட்டது" என்று சொன்னான் 


இவ்வாறு , விருந்தாவனத்து கோபியர்களின் உண்மையான தன்னலமற்ற பிரேம பக்தியின் பெருமையை நாரதருக்கும் மற்றவர்க்கும் உணர்த்த விரும்பிய பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தலைவலி நாடகம் நடத்தி புரியவைத்தார்.


ஹரே கிருஷ்ண🙏


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண

க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம ஹரே ராம

ராம ராம ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண!



ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
👇

சுத்த பக்தி https://t.me/suddhabhaktitamil

ஆன்மீக கதைகளை படிக்க 👇

உத்வேக கதைகள் https://t.me/udvegakathaigal

Comments

கட்டுரைகள்

Show more

போஸ்டர்கள்

Show more

ஏகாதசி மகாத்மியம்

Show more

கதைகள்

Show more

12 மஹாஜனங்கள்

Show more

வைஷ்ணவ ஆச்சாரி சரித்திரம்

Show more

பாகவத பிரார்த்தனைகள்

Show more