Skip to main content

ஓடன சஷ்டி




(ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் மத்யலீலை 16.78 முதல் 16.81 )


💐💐💐💐💐💐💐


குளிர் காலத்தின் தொடக்கத்தில் ஓடன ஷஷ்டி என்று அறியப்படும் விழா ஒன்று உள்ளது. அந்த நாளிலிருந்து பகவான் ஜெகன்நாதருக்கு  குளிர் காலத்திற்கு உகந்த போர்வைகளை அணிவிக்க வேண்டும் என்பதை இந்த விழா சுட்டிக்காட்டுகிறது. அந்த போர்வை நெசவாளர்களிடம் இருந்து நேரடியாக வாங்கப்படுகிறது. அர்ச்சன வழிமுறையின்படி, துணியை முதலில் நன்றாக துவைத்து அதிலுள்ள கஞ்சியை எடுத்து விட வேண்டும், அதன் பின்னரே அதனை பகவானுக்கு போர்த்த வேண்டும் ஆனால் பகவான் ஜெகநாதரின் பூஜாரி அந்த விதியினை புறக்கணித்து கஞ்சியுடன் கூடிய உடைகளை ஜெகநாதருக்கு அணிவித்தார். அதைப் பார்த்த புண்டரீக வித்யாநிதி, பக்தர்களிடம் குற்றம் காண்பதற்கான தனது எண்ணத்தினால், கடும் கோபம் கொண்டார் 


பகவான் ஜெகன்நாதருக்கு கஞ்சியுடன் கூடிய ஆடை வழங்கப்பட்டதை கண்டபோது புண்டரீக வித்யாநிதி சற்று வெறுப்படைந்தார். அதனால் அவரது மனம் கலங்கமுற்றது.


அன்றிரவில் சகோதரர்களான பகவான் ஜகன்னாதரும் பலராமரும் புண்டரீக வித்யாநிதியிடம் வந்து புன்னகைத்தபடி அவரை அறையத் தொடங்கினர்.


அறை வாங்கியதால் அவரது கன்னங்கள் வீங்கிய போதிலும் புண்டரீக வித்யாநிதி தமக்குள் பெரும் மகிழ்ச்சியுற்றார்.


இந்த சம்பவத்தில் இருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால், ஒரு உயர்ந்த பக்தரிடம் இருந்து கூட பகவான் தனது சேவக பக்தர்களுக்கு எதிரான குற்றங்களைப் பொறுத்துக் கொள்வதில்லை என்பதையும், மனதினால் கூட இதுபோன்ற அபராதத்தை (குற்றத்தை) செய்யும் ஒரு பக்தரை அவர் தண்டிப்பதையும் நாம் அறிந்து கொள்ளலாம். 


ஒரு தூய பக்தர் பகவானிடம் இருந்து கிடைக்கும் இத்தகைய தண்டனையை மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறார் என்பதையும் இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.  இது பகவானின் கருணையின் வெளிப்பாடாகவும் அவருடைய பக்தர்கள் மீது அவர் கொண்டுள்ள அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்துகிறது. இது அபராதம் (குற்றம்) செய்யக்கூடியவர்களுக்கும் அத்தகைய அபராதத்திற்கு (குற்றத்திற்கு) காரணமாக இருப்பவர்களுக்கும் பொருந்தும்.  தூய பக்தரானவர், பகவான் தன்னை சரி செய்ததற்காகவும் மேலும் குற்றங்கள் செய்வதிலிருந்து தன்னை தடுத்தாட்கொண்டதற்காகவும்  பகவானுக்கு நன்றி செலுத்துகிறார்.  மேலும் அவர் தனது இதயத்தினுள் மிகுந்த மகிழ்ச்சியையும் உணர்கிறார்.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.



Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...