ஸ்ரீமத் - பாகவதம் காண்டம் 1 / அத்தியாயம் 1 / பதம் 1 ************************************************************************* ஓம் நமோ பகவதே வாஸுதேவாய ஜன்மாதி அஸ்ய யதோ ’ ந்வயாத் இதரதஸ் சார்தேஷு அபிஜ்ஞ : ஸ்வராத் தேனே பிரஹ்ம ஹ்ருதாய ஆதி - கவயே முஹ்யந்தி யத் ஸூரய : தேஜோ - வாரி - ம்ருதாம் யதா வினிமயோ யத்ர த்ரிஸர்கோ ’ ம்ருஷா தாம்னா ஸ்வேன ஸதா நிரஸ்த - குஹகம் ஸத்யம் பரம் தீமஹி மொழிபெயர்ப்பு எம்பெருமானே , ஸ்ரீ கிருஷ்ணா , வசுதேவரின் புதல்வரே , எங்கும் வியாபித்திருக்கும் முழுமுதற் கடவுளே , தங்களுக்கு எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கின்றேன் . தோற்றுவிக்கப்பட்டுள்ள பிரபஞ்சங்களின் படைத்தல் , காத்தல் மற்றும் அழித்தல் ஆகிய காரணங்களுக்கு மூல காரணமாகவும் , பூரண உண்மையாகவும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இருப்பதால் அவரை நான் தியானிக்கிறேன் . எல்லா தோற்றங்களையும் அவர் நேராகவோ அல்லது மறைமுகமாகவோ அறிந்துள்ளார் . மேலும் அவருக்கப்பால் வேறெந்த காரணமும் இல்லாததால் அவர் சுதந்திரமானவராவார் . முதல் ஜீவனான பிரம்ம...