Skip to main content

Posts

Showing posts from November 16, 2020
 
 
 
 
 

ஶ்ரீ கோவர்த்தன ப்ரதக்ஷிண மந்திரம்

 

கோவர்தன பர்வதத்தின் சக்திகளும் மகிமைகளும்

  கோவர்தன பர்வதத்தின் சக்திகளும் மகிமைகளும் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 ஒருமுறை, விஜயா என்ற பிராமணர், தன் முன்னோர்களுக்கும் சாதுக்களுக்கும் செய்யவேண்டிய காரியங்களை செய்வதற்காக, பாவங்கள் அனைத்தையும் போக்கக்கூடிய புண்ணிய ஸ்தலமான மதுராவிற்கு சென்றார். தான் வந்த வேலை முடிந்தவுடன், அங்கிருந்து புறப்படுகையில், கோவர்தன கிரியிலிருந்து ஒரு கல்லை எடுத்து தன்னுடன் வைத்துக்கொண்டார். ஒவ்வொரு காடாக கடந்து ஒரு வழியாக வ்ரஜ பூமியை நீங்கியபோது, ஒரு ராட்சசன் தன் முன் வருவதை உணர்ந்தார். மூன்று தலைகள், மூன்று உடம்புகள், ஆறு கரங்கள், ஆறு கால்கள், பெரிய வாய் மற்றும் மூக்கு என்று, பார்ப்பதற்கே மிகவும் பயங்கரமாக இருந்தான் அந்த ராட்சசன். அவனுடைய கரங்கள் காற்றில் அசைந்துகொண்டிருந்தன; அவனுடைய ஏழு முழங்கை நீல அளவுள்ள நாக்கு முன்னும் பின்னும் ஆடியது; அவனது கண்கள் சிவந்திருந்தன; அவனுடைய பற்கள் மிகவும் கோரமாக இருந்தது. பிராமணரை விழுங்குவதற்காக அவன் முன்னேறி வந்தான். பிராமணர் செய்வதறியாது, அவனை கோவர்தன கிரியின் கல்லை கொண்டு தாக்கினார். அந்த ராட்சசன் தன் உடலை விட்டான். அந்த உடலிலிருந்து, தீடீரென்று ஒரு அழகான ரூபம் தோன்றியது. ...

கோவர்தன கிரிவலம்

  கோவர்தன கிரிவலம் ************************** நாம் கோவர்தன கிரிவலம் மேற்கொள்வதன் மூலமாக கிருஷ்ணர்மீதான அன்பை வளர்த்துக்கொள்ள முடியும். கோவர்தன மலையை வழிபட விரும்புபவர்கள் அதனைச் சுற்றி வலம் வர வேண்டும். கோவர்தன கிரிவலம் 26 கி.மீ. பாதையைக் கொண்டது. ரூப கோஸ்வாமியின் கூற்றின்படி கோவர்தன மலையை வலம் வர விரும்புபவர்கள், முதலில் மானஸ கங்கையில் நீராடி பின்னர், அருகில் இருக்கும் ஹரிதேவரை தரிசித்த பின்னரே, கிரிவலத்தைத் தொடங்க வேண்டும். சைதன்ய மஹாபிரபு இம்முறையைக் கடைப்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கோவர்தன மலையை சுற்றி பல கோயில்களும், குளங்களும் இருப்பதால் கிரிவலத்தை முடிப்பதற்கு பல மணி நேரங்கள் ஆகலாம். அப்பாதையில் இருக்கின்ற சில முக்கிய இடங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம். மானஸ கங்கை: கிரிவலத்தை இவ்விடத்தில் தொடங்கி இறுதியில் இங்கேயே முடிக்க வேண்டும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கன்று வடிவில் இருந்த வத்சாசுரனை வதம் செய்த பிறகு, அவருடைய தோழர்கள் கங்கையில் நீராடி புனிதப்படுத்திக் கொள்ளும்படி கிருஷ்ணரை அறிவுறுத்தினர். கிருஷ்ணர் தனது மனதாலேயே கங்கையை அங்கு வரவழைத்தார்; அதனால் அந்த கங்கை, மானஸ கங்க...

மலைகளின் மன்னன் கோவர்தனம்

மலைகளின் மன்னன் கோவர்தனம் வழங்கியவர்: ஜீவன கௌர ஹரி தாஸ் இன்றைய இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தில், மதுராவிலிருந்து 20 கி.மீ. தொலைவில் அழகான மலையாக அமைந்திருப்பதே கோவர்தனம் என்னும் திருத்தலம். ஆன்மீக உலகமான கோலோக விருந்தாவனத்திலிருந்து தோன்றிய கோவர்தன மலையானது விருந்தாவனத்தின் மணிமகுடம் என்றும் அறியப்படுகிறது. மூவுலகிலும் காணப்படுகின்ற மலைகளில் மிகவும் புனிதமானது என்பதால், கிரிராஜன் (மலைகளின் மன்னன்) என்றும் கோவர்தனம்வேத சாஸ்திரங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மிகச்சிறந்த சேவகனாகவும் கிருஷ்ணரிடமிருந்து வேறுபட்டவர் அல்ல என்றும் கோவர்தனம் இருவகையாகயாக புரிந்துகொள்ளப்படுகிறது. கோவர்தன மலை விருந்தாவனத்தின் ஒரு பகுதி என்பதால் அதன் வரலாற்றை சற்றேனும் தெரிந்துகொள்வது அவசியம். கோவர்தனத்தின் வரலாறு ****************************** பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தந்தையான நந்த மகாராஜர் ஒருமுறை தன் சகோதரர் உபநந்தரிடம் கோவர்தன மலை புனித பூமியான விருந்தாவனத்தில் எவ்வாறு தோன்றியது என வினவினார். அதற்கு உபநந்தர் இக்கேள்வியை பஞ்ச பாண்டவர்களின் தந்தையான பாண்டு, பாட்டனரான பீஷ்மரிடமும் கே...