Skip to main content

Posts

Showing posts from September 7, 2024

தமிழகத்தில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு

  தமிழகத்தில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தின் ஆசிரியரான ஸ்ரீல கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமி அவர்கள் மஹாபிரபுவின் பயணத்தை கூடியவரை வரிசைக்கிரமமாக வழங்க முயன்றுள்ளார்; அதே சமயத்தில், ஸ்ரீ சைதன்யரின் தீர்த்த யாத்திரை வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என எல்லா திசைகளிலும் இருந்தது என்றும், சில இடங்களுக்கு அவர் இருமுறைகூட விஜயம் செய்தார் என்றும், தம்மால் ஒரு சில இடங்களின் பெயர்களை மட்டுமே சுட்டிக்காட்ட முடிகிறது என்றும் அவர் தெளிவாகக் கூறியுள்ளார். எனவே, அவர் தமிழகம் முழுவதும் பயணித்தார் என்று கூறுவதே சாலச் சிறந்தது. ஆயினும், ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தில் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ள இடங்களும் சம்பவங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன என்பதை மறுக்க முடியாது. மஹாபிரபு தமது பயணத்தில் எண்ணிலடங்காத மக்களை கிருஷ்ண பக்தர்களாக மாற்றினார், அவரால் மாற்றப்பட்டவர்கள் தத்தமது ஊர்களுக்குச் சென்று அங்கிருந்தவர்களையும் மாற்றினர். சுருக்கமாகச் சொன்னால், ஸ்ரீ சைதன்யர் தமிழகத்தில் இருந்தபோது, தமிழகமெங்கும் ஹரே கிருஷ்ண மஹா மந்திர கீர்த்தனம் பர...

தேவர்கள் சுவர்க்க லோகங்களை திரும்பப் பெறுதல்

    ஆதாரம்  :-  ஶ்ரீம த்   பாகவதம்   எட்டாம் காண்டம்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁   பாகம்  9   தேவர்கள் சுவர்க்க லோகங்களை திரும்பப் பெறுதல் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 பலி மகாராஜன் எப்படி தமது பாட்டனாரான பிரகலாத மகாராஜனுடன் சுதள லோகத்திற்குள் புகுந்தார் என்பதையும், எப்படி பரமபுருஷ பகவான் இந்திரனை சுவர்கக லோகத்தில் மீண்டும் புக அனுமதித்தார் என்பதையும் இந்த அத்தியாயம் விவரிக்கிறது. பூரண சரணாகதியில், பகவானின் தாமரைப் பாதங்களின் பக்தித் தொண்டை அடைவதுதான் வாழ்வின் மிகப்பெரிய நன்மை என்பதை மகாத்மாவான பலி மகாராஜன் அனுபவித்து அறிந்தார். இந்த முடிவில் அவர் நிலையாக இருந்ததால், அவரது இதயத்தில் பக்திப் பரவசமும், கண்களில் ஆனந்தக் கண்ணீரும் ததும்ப, பரமபுருஷ பகவானுக்கு அவர் தமது வணக்கங்களைச் சமர்ப்பித்தார். அதன் பிறகு, தமது சகாக்களுடன் அவர் சுதளம் எனப்படும் லோகத்திற்குள் புகுந்தார். இவ்வாறாக பரமபுருஷ அதிதியின் ஆசையை நிறைவேற்றி தேவேந்திரனை மீண்டும் பதவியில் அமர்த்தினார். பலி விடுதலை செய்யப்பட்டதை அறிந்த பிரகலாத மகாராஜன், பிறகு பரமபுருஷ பகவான் இவ்வுலகில் நிகழ்த்திய தெய்...

பலி மகாராஜன் தமது வாழ்வை அர்ப்பணித்தல்

  ஆதாரம்  :-  ஶ்ரீம த்   பாகவதம்   எட்டாம் காண்டம்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁   பாகம்  8   பலி மகாராஜன் தமது வாழ்வை அர்ப்பணித்தல் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 இந்த இருபத்திரண்டாம் அத்தியாயத்திற்கான சுருக்கம் பின்வருமாறு: பலி மகாராஜனின் நடத்தையில் பரமபுருஷ பகவான் மகிழ்ந்தார். இவ்வாறாக சுதள லோகத்தில் அவரை வைத்த பகவான், அவருக்கு வரங்களை அளித்தபின், அவரது வாயில் காப்போனாக இருக்கச் சம்மதித்தார். பலி மகாராஜன் மிக மிக உண்மையானவராக இருந்தார். சத்தியத்தை மீறியவர் சமூகத்தின் கண்களில் அற்பமானவராகத் தோன்றுவார் என்பதால், தமது வாக்குறுதியைக் காப்பாற்ற இயலாத பலி மகாராஜன் பெரும் அச்சத்திற்குள்ளானார். உயர்ந்த நிலையில் இருப்பவரால் நரக வாழ்வில் பலன்களை சகித்துக் கொள்ள முடியும். ஆனால் சத்தியத்திலிருந்து விலகியதால் ஏற்படும் அவதூறுக்கு அவர் மிகவும் அஞ்சுகிறார். பரமபுருஷரால் அளிக்கப்பட்ட தண்டனையை பலி மகாராஜன் பெரு மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். விஷ்ணுவிடம் விரோதம் கொண்டதால், பல அஷ்டாங்க பலி மகாராஜனின் வம்சத்தில் பலர் இருந்தனர். குறிப்பாக பிரகலாத மகாராஜனுக்கு பக்தித் தொண்டில் இருந்...

பலி மகாராஜன் பகவானால் கைது செய்யப்படுதல்

    ஆதாரம்  :-  ஶ்ரீம த்   பாகவதம்   எட்டாம் காண்டம்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁   பாகம்  7   பலி மகாராஜன் பகவானால் கைது செய்யப்படுதல் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 பலி மகாராஜனின் பெருமைகளை பகவான் விஷ்ணு விளம்பரப்படுத்த விரும்பினார். எனவே பகவானின் மூன்றாவது அடி சம்பந்தமாக, தமது வாக்கை நிறைவேற்றத் தவறிய பலி மகாராஜனை பகவான் எப்படி கைது செய்தார் என்பதை இவ்வத்தியாயம் விவரிக்கின்றது. இரண்டாவது அடியினால் பரமபுருஷர் பிரபஞ்சத்தின் மிகவுயர்ந்த கிரகமாகிய பிரம்ம லோகத்தையும் அடைந்து, அதன் அழகைத் தமது பாத விரல்களின் நகங்களிலிருந்து தோன்றிய பிரகாசத்தினால் மங்கச் செய்துவிட்டார். இவ்வாறாக, மரீசியைப் போன்ற சிறந்த முனிவர்களாலும், எல்லா உயர் கிரகங்களின் அதிபதிகளாலும் சூழப்பட்டிருந்த பிரம்மதேவர், தமது பணிவான வணக்கங்களை பகவானுக்குச் சமர்ப்பித்து அவரை வழிபட்டார். பகவானின் பாதங்களை அவர்கள் கழுவி, எல்லாப் பொருட்களைக் கொண்டும் அவர்கள் பகவானை வழிபட்டனர். ரிக்ஷராஜனான ஜாம்பவான் பகவானுடைய பெருமைகளை ஒலிக்கச் செய்வதற்காக தனது தும் சங்கீதக் கருவியை இசைத்தார். பலி மகாராஜனின் உடைமைகள் அ...