Skip to main content

Posts

Showing posts from November 17, 2022

பகவான், தன்னை சரணடைந்த பக்தர்களை ஒருபோதும் கைவிடுவதில்லை

 

பகவான், பரமானந்தத்தை பக்தர்களுடன் சேர்ந்து அனுபவிக்கவே விரும்பிகிறார்

 

பால் பணியாரம்

  தேவையானவை:  பச்சரிசி - அரை கப், உளுந்து - அரை கப், தேங்காய்ப்பால் - 1 கப்,  காய்ச்சிய பால் - கால் கப் தேவையான அளவு,  எண்ணெய் - தேவையான அளவு. ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை, உப்பு - 1 சிட்டிகை, சர்க்கரை - செய்முறை: பச்சரிசியையும், உளுந்தையும் சேர்த்து 3 மணி நேரம் ஊறவைத்து கிரைண்டரில் சேர்த்து மையாக அரைக்கவும். அரைத்தவற்றுடன் உப்பு சேர்த்துக் கலந்து தனியாக எடுத்து வைக்கவும். மாவானது வடை மாவு பதத்தைவிட கெட்டியாக, அதே சமயம் தொட்டால் பட்டு போல மிருதுவாக இருக்க வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்த மாவை சுண்டைக்காய் அளவுக்கு கிள்ளி எடுத்து எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். பரிமாறுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு, ஒரு பவுலில் தேங்காய்ப்பால், காய்ச்சிய பால், ஏலக்காய்த்தூள் மற்றும் சர்க்கரையை சேர்த்து கலக்கவும். பொரித்த வைத்த பணியார உருண்டைகளை எடுத்து தேங்காய்ப்பால் கலவையில் சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு பரிமாறவும். 15 நிமிடத்துக்கு மேல் ஊறினால் பணியாரம் கரைந்து போகும்... கவனம்.   🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆?...

சிவபெருமான் சாந்தமடைதல்

  ஸ்ரீமத் பாகவதம் -  நான்காம் ஸ்கந்தம், அத்தியாயம் 6-7 - சுருக்கம் பிரம்மதேவரின்   அறிவுரை ருத்ர கணங்களால் தாக்கப்பட்ட புரோகிதர்களும் தேவர்களும் மிகுந்த பயத்துடன் பிரம்மதேவரிடம் சென்று முறையிட , பிரம்மதேவர் பதிலளித்தார் , சிவபெருமானுக்கு வேள்வியின் அவிர்பாகத்தை வழங்காமல் பெறும் தவறை இழைத்துவிட்டீர்கள் . இருப்பினும் , அவர் எளிதில் திருப்தியுறும் தன்மை கொண்டவர் என்பதால் , அவரது திருவடிகளைப் பற்றி மன்னிப்பு கோருங்கள் . தக்ஷனுடைய சொல் அம்புகளால் புண்பட்ட அவர் தற்போது தமது மனைவியையும் இழந்துள்ளார் . ஆகவே , அவர் கோபம் கொண்டால் அனைத்து உலகங்களும் அழிவுறுவது திண்ணம் . உங்களது யாகம் சரிவர நிறைவேற வேண்டுமெனில் , அவரிடம் சென்று மன்னிப்பை யாசியுங்கள் . ” இவ்வாறு தேவர்களுக்குக் கட்டளையிட்ட பிரம்மதேவர் , அவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு கைலாசத்தை நோக்கிப் புறப்பட்டார் . கைலாசத்தின்   வர்ணணை கைலாச மலையானது தேவர்கள் , கின்னரர்கள் , கந்தர்வர்கள் , அப்சரப் பெண்கள் முதலியோரால் நிறைந்திருந்தது ; பலவித மரங்கள் , செடி - கொடி...