அம்பரீஷ சரித்திரம் ********************** மனுவின் மகன் நபகன், அவரது மகனான நாபாகன் , நாபாகனிலிருந்து, மிகவும் சக்திவாய்ந்தவரும், புகழ்பெற்ற பக்தருமான அம்பரீஷர் பிறந்தார். அம்பரீஷ மகாராஜன் முழு உலகிற்கும் பேரரசராக இருந்தார். ஆனாலும் தன் செல்வங்களெல்லாம் தற்காலிகமானவை என்று கருதினார். இத்தகைய பௌதிக ஐசுவரியமே பந்தப்பட்ட வாழ்வில் விழுவதற்கு உண்மையான காரணம் என்பதை அறிந்திருந்த அவர், அதில் பற்றற்றவராக இருந்தார். அவர் தமது புலன்களையும், மனதையும் பகவத் சேவையில் ஈடுபடுத்தினார். இந்த முறை யுக்த-வைராக்யம், அல்லது சாத்தியமான துறவு என்று அழைக்கப்படுகிறது. பரமபுருஷரின் வழிபாட்டிற்கு இது மிகவும் பொருத்தமான முறையாகும். சக்கரவர்த்தியான அம்பரீஷ மகாராஜன் அளவுக்கு மிஞ்சிய செல்வந்தராக இருந்ததால், பக்தித் தொண்டையும் பெரும் ஐசுவரியத்துடன் அவர் நிறைவேற்றினார். எனவே அவ்வளவு செல்வம் இருந்தும் மனைவியிடமோ, குழந்தைகளிடமோ, அல்லது இராஜ்யத்திலோ அவர் பற்றுக் கொண்டவராக இருக்கவில்லை. தம் புலன்களையும், மனதையும் அவர் இடைவிடாமல் பகவானின் தொண்டில் ஈடுபடுத்தினார். எனவே பௌதிக செல்வங்களை அனுபவிப்பதைப் பற்றிய க...