Skip to main content

Posts

Showing posts from June 28, 2021

வெடித்து போன தவளை

  உபாக்யானே உபதேசம் ( ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி ) 🍁🍁🍁🍁🍁🍁🍁 வெடித்து போன தவளை 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஒரு குளத்தில் தவளையொன்று தனது மகன் தவளையுடன் வசித்து வந்தது. ஒரு நாள் மகன் தவளை குளக்கரையில் ஒரு யானையைக் காண நேர்ந்தது. உடனே குளத்திர்குத் திரும்பிய அந்த தவளை தன் தாயிடம் உற்சாகமாக, "அம்மா நான் இன்று ஒரு பெரிய விலங்கைப் பார்த்தேன்" என்றது.  அதற்கு அதன் தாய், அப்படியா!! அது எவ்வளவு பெரியதாக இருந்தது?  அதற்கு குழந்தை தவளை, " ஓ அது உங்களை விட பெரியது!'' என்றது. அப்போது அந்த தாய் தவளை தனது உடலை ஊதி பெருக்கிக் கொண்டு (உப்பியபடி) "இவ்வளவு பெரியதா?' என்றது.  அதற்கு மகன் தவளை, "இல்லையம்மா இதை விட பெரியது" என்றது.  மறுபடியும் தாய் தவள இன்னும் அதிகமாக அதன் உடல உப்பி வைத்தபடி, "இவ்வளவு பெரிதாக இருந்ததா? என்றது.  உடனே மகன் தவளை, "ஓ இல்லையம்மா இதை விட பெரியது" என்றது. இப்பொழுது தாய் மேலும் தனது உடல உப்பிக்காட்டியது. இவ்வாறாக திரும்ப திரும்ப செய்யவும் மகன் தவளை, "இல்லை இல்லை இதை விட பெரியது என்றது. இதனால் மேலும் மேலும் தனது உடலை தனது ச...

குருவியின் மன உறுதி

  ஒரு குருவி கடற்கரையில் முட்டைகளை இட்டது, ஆனால் பெருங்கடல் அம்முட்டைகளைத் தனது அலைகளால் இழுத்துச் சென்றுவிட்டது. மிகுந்த வருத்தமுற்ற குருவி, தனது முட்டைகளைத் திருப்பித் தரும்படி கடலிடம் கேட்டது. அம்முறையீட்டினை கடல் கண்டு கொள்ளவேயில்லை. எனவே, குருவி கடலை வற்றச் செய்வது என்று முடிவு செய்தது. தனது சின்னஞ்சிறு அலகால் கடல் நீரை வெளியேற்ற ஆரம்பித்தது, அதன் இயலாத உறுதியைக் கண்டு எல்லாரும் சிரித்தனர். இச்செய்தி பரவ, இறுதியில் விஷ்ணுவின் மாபெரும் பறவை வாகனமான கருடன் இதனைக் கேட்டார். தனது சிறிய சகோதரிப் பறவையின்மீது கருணை கொண்ட அவர், குருவியைக் காண வந்தார். சிறு குருவியின் உறுதியினால் மனமகிழ்ந்த கருடன், உதவி செய்வதாக வாக்களித்தார். இவ்வாறாக, உடனடியாகக் குருவியின் முட்டைகளைத் திருப்பித் தரும்படியும் இல்லாவிடில் குருவியின் செயலைத் தான் செய்து விடுவேன் என்றும் கருடன் கடலை எச்சரித்தார். கடல் பயந்துபோய் குருவின் முட்டைகளைத் திருப்பிக் கொடுத்தது. இவ்வாறாக கருடனின் கருணையினால் குருவி மகிழ்வுற்றது. அதுபோல, யோகப் பயிற்சி, குறிப்பாக கிருஷ்ண உணர்வில் செய்யப்படும் பக்தி யோகம், மிகவும் கடினமாகத் தோன்றல...