த்ருப்தோ ஹ்ருஷ்ட: ஸுத்ருப்தஸ்ச கந்தர்பாக்ருஷ்ட-மானஸ: ந வ்ய சஷ்ட வராரோஹாம் க்ருஹிணீம் க்ருஹ-மேதினீம் மொழிபெயர்ப்பு உணவு உண்டு தனது தாகம் தணிந்தபின் மன்னர் புரஞ்சனன் தம் மனமெங்கும் மகிழ்ச்சி பரவுவதை உணர்ந்தார். உயர் உணர்விற்கு உயர்த்தப்படுவதற்குப் பதிலாக அவர் மன்மதலால் கவரப்பட்டார். தன்னை இல்லற வாழ்வில் மிகவும் திருப்தியுடன் வைத்திருக்கும் தன் மனைவியைத் தேடும் ஆசையினால் அவர் உந்தப்பட்டார். பொருளுரை தன்னை கிருஷ்ண உணர்வு நிலைக்கு உயர்த்தக்கொள்ள விரும்புபவனுக்கு இச்சுலோகம் மிகவும் இன்றியமையாததாகும். ஒருவன் தன் ஆன்மீக குருவினால் தீட்சையளிக்கப்படும் பொழுது அவன்தன் பழக்கவழக்கங்கள் மாற்றுகிறான். விரும்பத்தகாத உணவுகளை உண்பது அல்லது புலால் உண்பது, மது வருந்துதல், தவறான பாலுறவு கொள்ளுதல், சூதாடுதல் போன்றவற்றில் அவன் ஈடுபடுவதில்லை. “ ஸாத்துவிக ஆகாரம்” என்று சாத்திரங்களில் கோதுமை, அரிசி, காய்கறிகள், பழங்கள், பால், சர்க்கரை போன்றவைகளினாலான உணவே குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆயினும் சில நேரங்களில் தீட்சை பெற்றவன் பிரஸாதம் என்ற பெயரில் ஆடம்பரமான உணவுகளை உண்கிறான். அவன் தனது கடந்தகால பாவ வாழ்...